குடும்ப சண்டை தீரா பகையானது.. அனிருத் பேச்சில் இருந்த வன்மம்.. சிவகார்த்திகேயனை புகழ காரணம் இதுதான்!
சென்னை: மதராஸி திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் அனிருத், "சிவகார்த்திகேயன் இல்லன்னா நான் இல்ல" பேசியது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. ரஜினியின் குடும்பத்தில் இருந்து வந்த அனிருத், சிவகார்த்திகேயன் தான் தனக்கு வாழ்க்கை கொடுத்தார் என்று பேசியதன் பின்னணி குறித்து சினிமா பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு பேசி உள்ளார்.
அதில், தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் போன்ற ஜாம்பவான்கள் ஒருபுறம் இருக்கிறார்கள். விஜய் அரசியல் பாதையில் பயணிக்கிறார். அதே போல, அஜித் கார் பந்தயங்களில் ஆர்வம் காட்டுகிறார். இந்த சூழலில் தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் என பல நடிகர்கள் இருந்தாலும், விஜய்யின் இடத்தை சிவகார்த்திகேயன் பிடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக பலரும் கருதுகின்றனர். சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படம் 300 கோடி வசூல் செய்தபோது, சிவகார்த்திகேயனின் வெற்றி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இந்த வெற்றியை அவர் தக்க வைத்துக்கொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில், சினிமாவில் ஜெயிப்பது சுலபம், ஆனால், அடுத்தடுத்த வெற்றிகளை கொடுப்பது என்பது மிகவும் கடினமான விஷயம், தற்போது சிவகார்த்திகேயன் அடுத்த வெற்றியை கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

அனிருத்தின் பேச்சு: மதராஸி திரைப்படம் செப்டம்பர் 5ந் தேதி வெளியாக உள்ள நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில், இசையமைப்பாளர் அனிருத்தின் பேச்சு பலருக்கும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. குறிப்பாக, நான் ஒருவேளை தான் சினிமாவில் இருந்து வெளியேறினாலும், சிவகார்த்திகேயனின் வெற்றியை பார்த்து ஏதோ ஒரு இடத்தில் இருந்து சந்தோஷப்படுவேன் என்று அவர் கூறியிருந்தார். இது மேடைக்காக பேசினாரா அல்லது உண்மையில் சிவகார்த்திகேயனின் மீதுள்ள அன்பினால் பேசினாரா.. இந்த பேச்சின் மூலமாக மறைமுகமாக தனுசை தாக்குவதற்காக அப்படி பேசினாரா என்று தெரியவில்லை.
தீராத பகை: அனிருத் குடும்பமே சினிமா குடும்பம், அவருடைய அத்தை ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த். இப்படி ஒரு பின்புலம் இருந்தும், சிவகார்த்திகேயன் தான் தனக்கு வாழ்வு கொடுத்தார் என்று அனிருத் கூறியது ஆச்சரியமாக இருந்தது. இதன் பின்னணியில் தனுஷுக்கும் அனிருத்துக்கும் இடையே உள்ள தீராத பகை இன்னும் புகைந்து கொண்டுதான் இருக்கிறது என்பது அவரின் பேச்சின் மூலம் தெளிவாக தெரிகிறது, எதிர்நீச்சல் படத்தை தனுஷின் தயாரிப்பு நிறுவனம் தான் தயாரித்தது. அந்த படம் சிவகார்த்திகேயனுக்கும், அனிருத்துக்கும் பெரிய வெற்றியை கொடுத்தது. ஆனால், தனுஷ் ஒருவரை அறிமுகப்படுத்தினால், ஒருவருக்கு உதவி செய்தால், அவர்கள் எப்போதும் தன்னைச் சார்ந்தே இருக்க வேண்டும், கால் அடியில் இருக்க வேண்டும் என்று நினைக்க கூடியவர். இது சிவகார்த்திகேயன் மற்றும் அனிருத் இருவருக்கும் பிடிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. ஒரு கட்டத்தில் தனுஷ், அனிருத் பிரச்சனை குடும்பத்திற்குள் பெரிய புயலை கிளப்பி உள்ளது. இதனால், ரஜினி கூட தனுஷ் மீது கோபப்பட்டதாக ஒரு தகவல் உண்டு.
குடும்பத்தில் சண்டை: இதனால் தான், ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றி விழாவில், ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு அனிருத் தான் காரணம் என்று ரஜினி வெளிப்படையாக கூறியிருந்தார். இதன் காரணமாகவே ரஜினி, அனிருத்துக்கு பல வாய்ப்புகளை வாங்கிக் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவங்கள் தனுஷ் - அனிருத் உறவில் விரிசலை ஏற்படுத்தியதாக சொல்லப்படுகிறது. அனிருத்துக்கு ஏற்பட்ட துரோகம் காரணமாகவே அவர் சிவகார்த்திகேயனை எப்படியாவது ரஜினி, கமலுக்கு அடுத்த இடத்துக்கு கொண்டு வர வேண்டும் என்று நினைக்கிறார். இதுதான் அனிருத் பேச்சுக்கு காரணம் என செய்யாறு பாலு அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











