Don't Miss!
- News
இளைஞர்களே வாய்ப்பை நழுவ விடாதீர்கள்! உங்களிடம் திறமையிருந்தால் அரசே முதலீடு செய்யும்! முழு விவரம்!
- Sports
கோலிவுட்டில் கால்பதித்தார் தோனி.. முதல் தயாரிப்பின் அறிவிப்பு வெளியானது.. நடிகர்கள் யார் தெரியுமா??
- Lifestyle
சனி அஸ்தமனமாவதால் ஜனவரி 30 முதல் இந்த 4 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு...
- Technology
உஷார்.! 5G ஆபத்தானதா? இவ்வளவு மறைமுக பாதிப்பு இருக்கிறதா? IPS அதிகாரிகள் சொன்ன உண்மை.!
- Finance
ரத்தகளறியான அதானி குழும பங்குகள்.. 20 சதவீதம் வரையில் சரிவு..!
- Automobiles
நம்பவே முடியல... படத்தில் உள்ள இந்த பைக்கிற்கு இப்படியொரு வரலாறு உள்ளதா!! முழு விபரம்...
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
அஜித் தான் அதை கற்றுக்கொடுத்தார்...துணிவு பட நடிகையின் சுவாரசிய பேட்டி!
சென்னை : அஜித் தான் கன்னை எப்படி பிடிப்பது என்று கற்றுக்கொடுத்தார் என துணிவுப்பட நடிகை மஞ்சுவாரியர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள துணிவு திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 11ந் தேதி வெளியாக உள்ளது.
போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். நீரவ் ஷா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பு, விஜய் வேலுகுட்டி. சண்டைக்காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைத்துள்ளனர்.

துணிவு
வங்கிக்கொள்ளையை மையமாக வைத்து உருவாகி உள்ள இந்த படத்திற்கு தணிக்கைக்குழு யூ/ஏ சான்றிதழ் அளித்துள்ளது. இப்படத்தின் டிரைலர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. துப்பாக்கியை கையில் வைத்துக்கொண்டு நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ள அஜித்தைப் பார்த்த ரசிகர்கள் வாய்பிளந்து போனார்கள்.

மஞ்சுவாரியரின் சுவாரசிய பேட்டி
துணிவு திரைப்படம் ஜனவரி 11ந் தேதி வெளியாக உள்ள நிலையில், இப்படம் குறித்து பல சுவாரசியமான தகவலை நடிகை மஞ்சுவாரியர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அதில், துணிவு திரைப்படம் அப்படி இருக்கும்..இப்படி இருக்கும் என்று படம் குறித்து மனசுக்குள் நிறைய யோசனைகள் இருக்கும். அவை அனைத்தையும் அழித்து விட்டு, அமைதியா குடும்பத்தோடு தியேட்டர் போய் இந்த படம் வாருங்க. உங்களுக்காக நாங்கள் ஓர் அழகான படத்தை கொடுத்து இருக்கிறோம்.

அவர் தான் கற்றுக்கொடுத்தார்
எச் வினோத்தின் படத்திலும் அஜித்துடனும் முதல் முறையாக நடித்து இருக்கிறேன் இது ஒரு புதுவிதமான அனுபவமாகவே இருந்தது. அதிலும் குறிப்பாக ஆக்ஷன் காட்சியில் இதுவரை நான் நடித்தது இல்லை. இந்த படத்தில் துப்பாக்கியை வைத்து மிரட்டலாக சண்டை போட்டு இருக்கிறேன்.அதுவும் குறிப்பா கண்மணி கதாபாத்திரம், ஒரு கை தேர்த்த துப்பாக்கி சுடுபவராக இருந்ததால் நடிப்பதில் கொஞ்சம் சிரமம் இருந்தது அப்போது அஜித் தான் கன்னை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று கற்றுக்கொடுத்தார்.

கண்மணியும் உங்களுக்கும் பிடிக்கும்
அசுரன் படத்திற்கு பிறகு பலவாய்ப்புகள் வந்தன ஆனால், எந்த கதையும் என்னை ஈர்க்காததால், நல்ல வாய்ப்புக்காக காத்திருந்தேன். ஆனால் துணிவு படத்தின் கதையும், அதன் கதாபாத்திரமும் பிடித்திருந்ததால், அந்த படத்தில் நடித்தேன். அசுரன் படத்தில் பச்சையம்மாள் கதாபாத்திரத்தை மக்கள் எப்படி ஏற்றுக்கொண்டார்களே அதேபோல துணிவு படத்தில் கண்மணியையும் ஏற்றுக்கொள்வார்கள் என்று நான் நம்புகிறேன்.

ஆர்வமாக இருக்கிறேன்
மேலும்,எச் வினோத்தின் படங்களை நான் ரசித்து பார்த்து இருக்கிறேன் படப்பிடிப்பின் போது படத்தை தாண்டி வேறு எதைப்பற்றியும் அவர் அதிகம் பேச மாட்டார். ஆனால்,படம் அதிகம் பேசப்படும் என்று நம்புகிறேன். மக்கள் படத்தை பார்த்துவிட்டு என்ன சொல்லப்போகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன் என்றார்.