கூலி பார்க்கிங் கலெக்‌ஷனே அதிகம்.. குழந்தைங்களும் பார்ப்பாங்க.. திருப்பூர் சுப்ரமணியம் ஓபன் டாக்!

சென்னை: கூலி படத்துக்கு 'ஏ' சான்றிதழ் கொடுத்து வரவேண்டிய வசூலை ரொம்பவே தடுத்து விட்டனர் என திருப்பூர் சுப்ரமணியம் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவராக உள்ள திருப்பூர் சுப்ரமணியம் கூலி படம் ஜெயிலர் மற்றும் லியோ படங்களின் வசூலையே தாண்டிவிட்டது என சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு ரஜினிகாந்த் நடித்த கூலி மற்றும் ஹ்ரித்திக் ரோஷன் நடித்த வார் 2 உள்ளிட்ட படங்கள் நேருக்கு நேர் மோதின. இந்தியளவில் இந்த 2 பெரிய படங்கள் வெளியான நிலையில், இரண்டு படங்களுமே தியேட்டர் ஒனர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளன.

Tiruppur Subramaniam says Coolie Parking collection is very high
Photo Credit:

கூலி படத்துக்கு ஏகப்பட்ட பேர் நெகட்டிவ் விமர்சனங்களை முன் வைத்து படம் தக் லைஃப் போல டிசாஸ்டர் என டிரெண்ட் பண்ண ஆரம்பித்த நிலையிலும், லோகேஷ் கனகராஜ் - ரஜினிகாந்த் காம்போ விமர்சனத்தை எல்லாம் தாண்டி வசூலில் உலகளவில் பட்டையை கிளப்பி வருவதாக திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

பார்க்கிங் கலேக்‌ஷனே அதிகம்: இந்த ஆண்டு வந்த சில நல்ல படங்களின் மொத்த வசூலே கூலி படத்தின் பார்க்கிங் கலெக்‌ஷன் அளவுக்கு இருக்காது எனக் கூறியுள்ளார் திருப்பூர் சுப்ரமணியம். 190 ரூபாய்க்குத்தான் அதிகளவில் தியேட்டர்களில் டிக்கெட்டுகள் விற்பனையானது என்றும் 1000 மற்றும் 2000 ரூபாய்க்கு எல்லாம் டிக்கெட்டுகள் எந்தவொரு பெரிய தியேட்டர்களிலும் விற்பனையே ஆகவில்லை என்பதை நான் அடித்துச் சொல்வேன் எனக் கூறியுள்ளார்.

ஓடிடியில் குழந்தைங்க பார்ப்பாங்க: கூலி படத்தில் எந்தவொரு ஆபாச காட்சிகளுமே இல்லை. வெறும் ஆக்‌ஷன் காட்சிகள் தான். இந்த காட்சியை எல்லாம் குழந்தைங்க கூலி படம் ஓடிடியில் போட்ட பிறகு பார்க்கத்தானே போறாங்க. தியேட்டரில் அவர்களை பார்க்க விடாமல் ஏன் தடுக்கிறாங்க. கண்டிப்பாக சன் பிக்சர்ஸ் அதற்கான நடவடிக்கையை எடுத்து வரும் நிலையில், யு/ஏ சான்றிதழ் வாங்கி தியேட்டர்களிலும் குழந்தைகளை பார்க்க அனுமதிப்பாங்க என பேசியுள்ளார்.

Tiruppur Subramaniam says Coolie Parking collection is very high

20, 30 கோடி வசூல் போச்சு: தியேட்டர்களில் குழந்தைகளுடன் படம் பார்க்க முடியாத நிலையில், பலர் குடும்பத்துடன் வருவதை தவிர்த்து விட்டனர். ஆனால், பெரியவர்கள் மட்டுமே வந்து படம் பார்த்தே இந்தளவுக்கு 4 நாட்களில் 404 கோடி வசூல் வருகிறது. திங்கட்கிழமை பெரிதாக டிராப் கிடையாது. ஹவுஸ்ஃபுல் இல்லையென்றாலும், டிக்கெட் புக்கிங் அதிகம் தான் என பேசியுள்ளார். குழந்தைகளும் கூலி பட்த்தை முதல் நாளில் இருந்தே பார்த்திருந்தால் இன்னமும் 20 முதல் 30 கோடி அதிக வசூல் வந்திருக்கும் என்றும் அது மிஸ் ஆகிடுச்சு என்றுள்ளார்.

ரெண்டாவது வாரமும் ஹவுஸ்ஃபுல்லா ஓடும்: கண்டிப்பாக இந்த கூலி படம் விமர்சனத்தை எல்லாம் தாண்டி 2வது வாரத்திலும் பெருசா ஓடும். லியோ மற்றும் ஜெயிலர் படத்தை விட அதிகமாகவே வசூல் செய்யும் என்றும் உறுதியாக நம்புகிறார் திருப்பூர் சுப்ரமணியம். யு/ஏ சான்றிதழுக்காக சில நிமிட காட்சிகள் நீக்கப்பட்டுள்ள நிலையில், கண்டிப்பாக கூலி படம் 2வது வாரத்தில் குடும்பங்கள் கொண்டாடும் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X