ஜெயிலர் வசூலை முந்துமா கூலி?.. திருப்பூர் சுப்ரமணியம் என்ன பதில் சொல்லியிருக்காரு பாருங்க!
சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவான கூலி படத்தில் நாகார்ஜுனா, சத்யராஜ், செளபின் சாஹீர், உபேந்திரா, ஸ்ருதிஹாசன், ரச்சிதா ராம், சார்லி, ரெபா மோனிகா ஜான், மோனிஷா பிளஸ்ஸி மற்றும் கேமியோ ரோலில் அமீர்கான் என பலர் நடித்துள்ளனர்.
கூலி படத்தில் ரசிகர்கள் எதிர்பார்க்காத நடிப்பை செளபின் சாஹீர் மற்றும் ரச்சிதா ராம் கொடுத்து பலரது கவனத்தை தங்கள் பக்கம் திருப்பியிருக்கின்றனர். ஆனால், ஏகப்பட்ட குறைகளையும் ரசிகர்கள் சுட்டிக் காட்டிக்கொண்டே வருகின்றனர்.

இந்நிலையில், ஜெயிலர் படத்தின் வசூலை கூலி திரைப்படம் முந்துமா என திருப்பூர் சுப்ரமணியத்திடம் வைத்த கேள்விக்கு அவர் அளித்த பதில் குறித்து விரிவாக இங்கே பார்க்கலாம் வாங்க..
லியோவை முந்திய கூலி: தமிழ் சினிமாவில் இதுவரை அதிகபட்ச முதல் நாள் வசூலை விஜய்யின் லியோ படம் பெற்றிருந்த நிலையில், அந்த வசூல் சாதனையை கூலி திரைப்படம் முறியடித்து விட்டதாக சன் பிக்சர்ஸ் முதல் நாளே அதிகாரப்பூர்வ வசூலை அறிவித்துள்ளது. கூலி படத்துக்குப் போட்டியாக வெளியான வார் 2 படத்துக்கு எதிராகவும் ட்ரோல்கள் குவிந்து வந்தாலும், அந்த படமும் தெலுங்கு மற்றும் இந்தியில் நல்ல வசூல் சாதனையை அள்ளி வருகிறது. கூலி திரைப்படம் முதல் நாளில் அதிகபட்சமாக 151 கோடி வசூலை ஈட்டியுள்ளது. லியோ படத்தின் வசூல் சாதனையான 148.5 கோடி வசூலை முறியடித்துள்ளது.
ஜெயிலரை முந்துமா கூலி: லியோ மற்றும் ஜெயிலர் படங்கள் கடந்த 2023ம் ஆண்டு வெளியாகி 600 கோடி வசூலை ஈட்டி இண்டஸ்ட்ரி ஹிட் அடித்தன. இந்நிலையில், கூலி திரைப்படம் 600 கோடிக்கும் மேல் வசூல் ஈட்டுமா என்கிற கேள்வியை திருப்பூர் சுப்பிரமணியத்திடம் முன்வைத்த நிலையில், முதல் 4 நாட்கள் திரையிட்ட அனைத்து இடங்களிலும் கூலி ஹவுஸ்ஃபுல்லாக ஓடுகிறது. திங்கட்கிழமை புக்கிங் எல்லாம் இப்போதைக்கு குறைவாகத்தான் உள்ளன. ஜெயிலர் வசூலை முந்துமா என்றால் அதெல்லாம் இப்போதைக்கு சொல்ல முடியாது. ஆனால், ஜெயிலர் படம் செய்த வசூல் சாதனை அளவுக்கு கூலி படம் செய்ய அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறினார்.
கூலி ட்ரோல்கள் குறித்து: இப்போ சோஷியல் மீடியாவில் பலரும் படங்களை பார்ப்பதை விட்டு விட்டு விமர்சனம் செய்கிறேன் என்கிற பெயரில் நெகட்டிவ் வன்மத்தை கக்கி வருகின்றனர். ஆனால், ரசிகர்கள் தியேட்டர்களுக்குச் சென்று கூலி படத்தை பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றனர். அரங்கங்கள் நிரம்பி வழிந்துக் கொண்டு தான் இருக்கின்றன. தமிழ்நாட்டில் மட்டும் 1000 ஸ்க்ரீன்களில் கூலி படம் ரிலீஸ் ஆகியிருக்கு. நிச்சயம் நல்ல கலெக்ஷனை இந்த படம் கொடுக்கும் என்பதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் இல்லை எனக் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











