வெற்றிமாறனால் தலையில் துண்டை போட்ட தாணு.. வாடிவாசல் என்னாச்சு.. விளாசிய திருப்பூர் சுப்பிரமணியம்!

சென்னை: இயக்குநராக இருந்த வெற்றிமாறன் கிராஸ் ரூட் தயாரிப்பு என்கிற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். அதன் உதயம என்எச்4, காக்காமுட்டை என பல படங்களை தயாரித்தார். தற்போது இவர் தயாரித்து இருக்கும் பேட் கேர்ள் திரைப்படம் நேற்று தியேட்டரில் வெளியானது. இந்த படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய வெற்றிமாறன், என்ன போன்றவர்களுக்கு படத் தயாரிப்பு என்பது மிகவும் சவாலான விஷயமாக இருக்கிறது. சில இடங்களில் கடன் வாங்கி தான் எடுக்கப்பட்டன. 'பேட் கேர்ள்' படம் தான் கிராஸ் ரூட் பிலிம்ஸ் கம்பெனியின் கடைசி படம் என்றார்.

இதுகுறித்து, திருப்பூர் சுப்பிரமணியம் பேசி உள்ளார். அதில், வெற்றிமாறன் தயாரிப்பு நிறுவனத்தை மூடுவதாக அறிவித்திருப்பதை நான் வேதனையான விஷயமாகத்தான் பார்க்கிறேன். அதேபோல, வெற்றிமாறன், சூர்யாவை வைத்து வாடிவாசல் என்ற ஒரு படத்தை எடுப்பதாக இருந்தார். இந்த படத்திற்காக தயாரிப்பாளர் தாணு, சூர்யாவிற்கு ஒரு பெரும் தொகையும், வெற்றிமாறனுக்கு முழு சம்பளத்தையும் கொடுத்துவிட்டார்.

VetriMaaran Dhanu Tirupur Subramaniam
Photo Credit:

வாடிவாசல் என்னாச்சு: ஆனால், படத்தின் அறிவிப்பு வெளியாகி ஐந்து வருடத்திற்கு மேலாகிவிட்டது. இதுவரை படம் குறித்து எந்த வேலையும் தொடங்காமல் இருப்பது எந்த வகையில் நியாயம். உங்களைப் போன்ற ஒரு தயாரிப்பாளரை நீங்கள் இந்த நிலைமைக்கு ஆளாக்கலாமா? வெற்றிமாறன், தன்னுடைய தயாரிப்பு நிறுவனம் கஷ்டமடைந்ததால், அதை மூடுவதாக அறிவித்து இருக்கிறார். வெற்றிமாறானால் தாணு தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தை மூடும் நிலைக்கு சென்று இருக்கிறார். இதற்கு வெற்றிமாறன் என்ன பதில் சொல்லப் போகிறார்.

கம்பெனியை மூடும் நிலையில் தாணு: முதலில், வெற்றிமாறன், சூர்யாவுடன் கலந்து பேசி, தாணுவை அழைத்து, சூர்யாவிற்கு படத்தின் கதை பிடிக்கவில்லை. எனக்கு சூர்யாவை பிடிக்கவில்லை என அவர்களின் மனதில் என்ன பிரச்சனை இருக்கிறதோ அதை தாணுவிடம் வெளிப்படையாக சொல்லி, நாங்கள் இந்த படத்தில் இருந்து விலகிக் கொள்கிறோம். இதற்கான இழப்பீட்டை கொடுத்து விடுவிகிறோம் என்று சொல்லிவிட்டு விலகி விட வேண்டியது தானே. வெற்றிமாறன், தனது வேதனையை மேடையில் பேசிவிட்டார். தாணு, மன உளைச்சலை அவர் மேடையில் ஏறி பேச வேண்டுமா.

தாணுவை வாழவைங்க: நான் வெற்றிமாறனை மட்டு குறை சொல்லவில்லை, அனைத்து இயக்குநர்களும் இப்படித்தான் இருக்கிறார்கள். முதலில் படத்தை 60 நாட்களில் எடுத்து முடித்துவிடுவேன் என சொல்லிவிட்டு, ஷூட்டிங் ஆரம்பித்ததும், ஒரு படத்தை 200 நாள் 250 நாள் எடுக்கிறார்கள். தமிழ் சினிமா இவ்வளவு மோசமான நிலைக்கு தள்ளப்பட்டதற்கு இதுதான் முக்கிய காரணம். முதலில் வெற்றிமாறன் வாடிவாசல் பிரச்சனைகள் முடித்துவிட்டு தயாரிப்பாளர் தாணுவை வாழவைக்க வேண்டும் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X