twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தமிழ் சினிமாவை முதல்வர் காப்பாற்றுவார்... தயாரிப்பாளர் கே.ராஜன் நம்பிக்கை

    |

    சென்னை : ஆர்.கோபால் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி உள்ள படம் அடங்காமை. இலங்கையைச் சேர்ந்த சரோன் ஹீரோவாகவும், ஆந்திராவைச் சேர்ந்த பிரியா ஹீரோயினாகவும் நடித்துள்ள இந்த படத்தை வோர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் பொன்.புகழேந்தி, ஏ.என்.மைக்கேல் ஜான்சன் தயாரித்துள்ளனர்.

    இந்த படத்தின் டீசரை மே மாதம் டைரக்டர் பாக்யராஜ் வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் திரைப்பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.

    TN CM Stalin will definetly saves tamil cinema says Producer K.Rajan

    அப்போது விழாவில் பேசிய தயாரிப்பாளர் கே.ராஜன் கூறுகையில், படத்திற்கு பூஜை போட்டது முதல் பூசணிக்காய் உடைக்கும் வரை அனைத்து செலவுகளையும் தயாரிப்பாளர் தான் செய்கிறார். ஆனால் படம் முடிந்தது அந்த படத்தில் பணியாற்றிய நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் பணத்துடன் செல்கிறார்கள். ஆனால் அந்த படத்தை தயாரித்த தயாரிப்பாளர் ரோட்டில் நடந்து செல்கிறார்.

    தயாரிப்பாளர்களின் இந்த நிலைக்கு காரணம் தயாரிப்பாளர்கள் தான். சில டைரக்டர்கள், தயாரிப்பாளர்களை நடுத்தெருவில் நிறுத்தி விடுகிறார்கள். அடங்காமை படத்தின் இசை, டைரக்ஷன் என அனைத்தும் நன்றாக உள்ளது. படம் நன்றாக ஓடி லாபமோ, போட்ட அசலோ கிடைக்காவிட்டாலும், 50 சதவீதம் போட்ட பணம் கிடைத்தால் போதும். இந்த 50 சதவீதம் பணத்தையும் அந்த டைரக்டர் அடுத்த படத்தில் தான் போடுவார்.

    கடந்த 10 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கானவர்கள் படம் எடுத்திருப்பார்கள். அவர்களில் இப்போதும் எத்தனை தயாரிப்பாளர்கள் படம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த தயாரிப்பாளர்களின் நிலை இப்போது என்ன. ஒரு படத்தின் வெற்றிக்கு காரணம் முதலில் டைரக்டர் தான். பிறகு தான் தயாரிப்பாளர்.

    தமிழகத்தில் முதலில் தமிழனுக்கு தான் வேலை. அது பற்றாக்குறை ஏற்படும் போது மற்ற மொழிக்காரர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும். ஆனால் தமிழகத்தில் இன்று பிற மொழி பேசுபவர்களுக்கு தான் எந்த வேலையாக இருந்தாலும் கொடுக்கப்படுகிறது. தமிழர்களுக்கு வேலையில்லை.

    எனக்கு தர்பார் படம் எடுத்த ஏ.ஆர்.முருகதாஸ் மீது வருத்தம். தமிழனான முருகதாஸ் இதை செய்திருக்கக் கூடாது. அந்த படத்தை மும்பையில் எடுத்ததால் அங்குள்ள கலைஞர்கள் தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள். அதே படத்தை தமிழகத்தில் எடுத்திருந்தால் எத்தனையோ பெப்சி தொழிலாளர்கள் உள்ளிட்ட பலருக்கும் வேலை கிடைத்திருக்கும். முதலில் தமிழன் என்ற உணர்வு இருக்க வேண்டும்.

    மும்பையில் போய் ரூம் போட்டு நடிகைகளை தேடும் தயாரிப்பாளர்களை வருத்தத்துடன் கண்டிக்கிறேன். திருக்குறளின் அதிகாரத்தில் இருந்து தலைப்பை வைத்துள்ள டைரக்டரை பாராட்டுகிறேன். தமிழில் தலைப்பா இல்லை. நாம் பிறகுக்கு தரலாம். திருக்குறளில் இல்லாத தலைப்பா இல்லை, கம்ப ராமாயணத்தில் இல்லாத தலைப்பா. கண்ணதாசன் பாடல்களில் இல்லாத தலைப்பா.

    இங்கிலீஷில் தலைப்பு தேடுகிறார்கள். யாரு உங்க அப்பனா எழுதினா இங்கிலீஷ் தலைப்பு. நீ தமிழன் இல்லையா. இங்கிலீஷில் தலைப்பு வைத்தால் மட்டும் படம் 500 நாள் ஓடி விடுமா. தமிழில் பெயர் வைத்தால் மானியம் தருவேன் என அற்புதமான உத்தரவை கொண்டு வந்தார் டாக்டர் கலைஞர். தமிழ் நாட்டில் தமிழில் பேர் வைக்க மானியம். பிச்சை காசு தருகிறேன் தமிழில் பெயர் வையுங்கள் என்றார்.

    பிச்சை மானியம் வாங்குவதற்காக இவர்கள் ஆங்கிலத்தில் பெயர் வைப்பதை விட்டு விட்டு, தமிழில் பெயர் வைக்க துவங்கினர். பிறகு ஜெயலலிதா வந்து அதை கண்டுகொள்ளாதால் மீண்டும் இங்கிலீஷில் பெயர் வைக்க துவங்கி விட்டனர். தமிழில் பெயர் வைக்க தெரியாத, படிப்பறிவில்லாத மடையர்களை எதிர்த்து நான் போராடுவேன்.

    மாநாடு படத்தை தொடர்ந்து சுரேஷ் காமாட்சி, ஜிவி 2 என்ற படத்தை தயாரிக்கிறார். அந்த படத்தின் டைரக்டர் 30 நாட்களில் படத்தை முடித்து விடுவேன் என்றார். பிறகு 24 நாட்களிலேயே படத்தை முடித்து தருவதாக சொன்னார். அவ்வளவு பக்காவாக பிளான் செய்திருந்தார். அப்படிப்பட்ட டைரக்டர்களால் தான் தயாரிப்பாளர்களை காப்பாற்ற முடியும்.

    தயாரிப்பாளர்கள் உங்களிடம் கையேந்தவில்லை. அவர்கள் உங்களை காப்பாற்ற வந்தவர்கள். தயாரிப்பாளர்களின் கை கொடுக்கும் கை. ஆனால் சிலர் ஹீரோக்களின் கால்களில் பணத்தை கட்டு கட்டாக வைத்ததால், சில ஹீரோக்கள் தயாரிப்பாளர்களை கால் செருப்புக்கு சமமாக பார்க்க துவங்கினர். சினிமாவே தலைகீழாக மாறி விட்டது. எம்ஜிஆர், சிவாஜி காலத்தில் தயாரிப்பாளரை தெய்வமாக வணங்கியதால், தொழில் நன்றாக இருந்தது.

    பலரின் கூட்டு சதியால் தயாரிப்பாளர்களை அழிக்கிறார்கள். அங்காமை என திருக்குறளில் இருந்து பெயர் வைத்துள்ளனர். அதனால் படம் நிச்சயம் வெற்றி பெறும். படத்தை எப்படியாவது சிரமப்பட்டு ரிலீஸ் செய்து விடுங்கள். இப்போது படத்தை ரிலீஸ் செய்ய விநியோஸ்தர்கள் இல்லை. கொரோனா அனைத்து தொழில்களையும் முடக்கி விட்டது.

    இந்த நேரத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைக்கிறேன். தமிழில் பெயர் வைத்தால் மானியம் வழங்குவதாக கலைஞர் கூறினார். அதை நீங்கள் மீண்டும் கொண்டு வர வேண்டும். இங்கிலீஷில் பெயர் வைத்தால் அதை வெளியே வராமல் இருக்க என்ன செய்ய வேண்டுமோ, அதை செய்யுங்கள்.

    விருதுகள் வழங்குவதும் நின்று போய் உள்ளது. அதையும் தொடர வேண்டும். நீங்கள் செய்வீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது. சிறிய பட்ஜெட் தமிழ் சினிமாக்களை முதல்வர் நிச்சயம் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழ் சினிமா நன்றாக இல்லை. எடுக்கும் படங்கள் அனைத்தும் நஷ்டம் ஆகிறது. அதற்கு ஒரு குழு அமைத்து, நிதி வழங்கி சிறிய பட்ஜெட் படங்களை காப்பாற்ற வேண்டும்.

    பெரிய பட்ஜெட் படங்களை கண்டு கொள்ளாதீர்கள். ரூ.5 கோடி கீழ் உள்ள படங்களை வாழ்த்தி, வரவேற்று, அவைகள் வளர உதவ வேண்டும். அப்படி செய்தால் தமிழ் வாழும், தமிழ் சினிமா வாழும். தமிழ் திரையுலகமும் உங்களுக்கு நன்றியுடன் இருக்கும். தமிழ் சினிமாவிற்கு உதவி செய்வதாக ஆர்.கே.செல்வமணி உள்ளிட்ட தமிழ் சினிமா பிரதிநிதிகளிடம் முதல்வர் கூறி உள்ளார். அவர் மீது நம்பிக்கை உள்ளது என தெரிவித்துள்ளார்.

    English summary
    producer k.rajan requested tamilnadu chief minister m.k.stalin to save low budget tamil cinema. to urge tamil title for tamil cinemas. and form a new team for save tamil cinema. producer k.rajan spoke this in adangamai audio launch function.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X