பேனர் கிழிச்சிட்டாங்கன்னு சொன்னதெல்லாம் ஸ்டண்ட்டா?.. கேபிஒய் பாலா விவகாரம்.. திருச்சி ஸ்ரீதர் பேச்சு!
திரிச்சி ஸ்ரீதர் சமீபத்திய பேட்டியில் கே.பி.ஒய். பாலா பேனர் கிழிப்பு, கூலி, லியோ வசூல், தயாரிப்பாளர் சங்கம் சர்வர் சிக்கல்கள் குறித்து வெளிப்படையாகப் பேசினார். சிவகார்த்திகேயன், இன்பநிதி பற்றியும் கருத்து தெரிவித்தார். தமிழ் சினிமா உலகில் நடக்கும் பல சர்ச்சைகள், நிகழ்வுகள் குறித்து அவர் அளித்த விளக்கங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
சென்னை: திருச்சி ஸ்ரீதர் சமீபத்தில் அளித்த பேட்டியில், கே.பி.ஒய். பாலா பேனரை கிழித்தது உண்மையா என்பது பற்றி வெளிப்படையாகப் பேசினார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் திட்டமிடப்பட்ட விளம்பரமா அல்லது உண்மையில் நடந்தது தானா என்ற கேள்வியும் எழுந்தது.
அவர் மேலும் கூறுகையில், யாரோ ஒரு சிலர் வேண்டுமென்றே பாலாவுக்கு எதிராக களங்கம் விளைவிக்கிறார்கள் என்று நினைக்கிறேன். உண்மையில் என்ன நடந்தது என்பதை அறிய பாலா நேரில் வந்து ஆதாரத்துடன் விளக்கினால் பேசத் தயார் என்றும் கூறினார்.

கூலி திரைப்படம் 25 நாட்கள் ஓடியும் ஜெயிலர் படத்தின் வசூலை நெருங்க முடியவில்லை என்பது வருத்தமளிக்கிறது. லியோ வசூலை மிஞ்சுமா என்ற கேள்விக்கு, அடுத்த சந்திப்பில் பதில் சொல்வதாகத் தெரிவித்தார். தான் எஸ்கேப் ஆக மாட்டேன் என்றும் உறுதியளித்தார்.
தயாரிப்பாளர் சங்கத்தில் சர்வர் அமைப்பதில் இருக்கும் சிக்கல்களைப் பற்றி பேசிய ஸ்ரீதர், தயாரிப்பாளர்களுக்குள்ளேயே குழப்பம் நீடிப்பதால் தாமதம் ஏற்படுகிறது என்றார். கர்நாடகாவில் போட்ட சர்வர் தோல்வியடைந்ததையும் சுட்டிக்காட்டினார். வெளிப்படைத்தன்மைக்காக சர்வர் அமைப்பதை ஆதரிப்பதாகவும் தெரிவித்தார்.
சமீபத்திய சினிமா நிகழ்வுகள் குறித்துப் பேசிய ஸ்ரீதர், சிவகார்த்திகேயன் ஸ்ட்ரெயின் பண்ணி நடிச்சிருக்கார்னு எனக்கு தோணுது. ஏ.ஆர்.முருகதாஸ் ஓகே சொல்ல வைக்கிறார். ஆனால் அமரன் படத்தை மிஞ்சுமா என்பது சந்தேகமே என்றார். மதராஸி திரைப்படத்தின் வசூல் எதிர்பார்த்ததை விட குறைவாக இருப்பதாகக் குறிப்பிட்டார்.

இன்பநிதி தயாரிப்பாளராக அறிமுகமாவது மகிழ்ச்சி அளிக்கிறது. யார் வேண்டுமானாலும் சினிமாவுக்கு வரலாம். அதில் தவறில்லை. இட்லி கடை வெளியாகும் நிலையில், காந்தாரா திரைப்படமும் அதே நாளில் வெளியாவது குறிப்பிடத்தக்கது என்றார் திருச்சி ஸ்ரீதர். இதன் மூலம் இன்பநிதிக்கு மிகப்பெரிய பாக்ஸ் ஆபீஸ் வெற்றி கிடைப்பதில் சிக்கல் உருவாகலாம் என்கிற தொனியில் அவர் பேசியுள்ளார்.
காந்தி கண்ணாடி படத்தை பல தியேட்டர்களில் போட விடாமல் சிலர் சதி செய்வதாகவும், தனது படத்தின் பேனர்கள் மற்றும் போஸ்டர்களை சிலர் திட்டமிட்டே கிழித்து எறிவதாகவும் கூறியது சர்ச்சையை கிளப்பியது. மதராஸி படத்துடன் கேபிஒய் பாலா தனது காந்தி கண்ணாடி படத்தை ரிலீஸ் செய்த நிலையில், சிவகார்த்திகேயன் ரசிகர்கள் தான் அதை செய்தார்களா என்கிற விவாதம் வெடித்தது. ஆனால், கேபிஒய் பாலா தனது படத்தை பிரபலப்படுத்தவே இப்படி செய்திருக்கலாம் என்கிற சர்ச்சைகளும் தற்போது கிளம்பி வரும் நிலையில், திருச்சி ஸ்ரீதரின் பேட்டி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











