»   »  ரஜினி கேட்ட அப்படி போடு..

ரஜினி கேட்ட அப்படி போடு..

Posted By:
Subscribe to Oneindia Tamil

சந்திரமுகி படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டது. இன்னும் 3 பாட்டுக்களே.

விஜய்யின் கில்லி படத்தில் வந்த அப்படி போடு போடு.. பாடலில் மிகவும் இம்ப்ரஸ் ஆகிவிட்ட ரஜினி, படத்தின் இசையமைப்பாளர்வித்யாசாகரிடம் (கில்லி மியூசிக் போட்டவரும் இவரே) எனக்கு அப்படி போடு மாதிரி ஒரு பாட்டு கொடுங்க என்றாராம்.

அதைவிட்டா நல்லாவே ஒரு போடு போட்டா போச்சு என்று கூறிய வித்யாசாகர், ஒரு தடாலடியான ட்யூனைப் போட்டுத் தர ரெக்கார்டிங்ஸ்டுடியோவிலேயே டான்ஸ் போட்டாராம் ரஜினி.

இந்த ட்யூனுக்கு பா.விஜய்யையே கூப்பிட்டு (அப்படி போடு எழுதியவர்) பாடல் எழுதச் சொல்லிவிட்டாராம வித்யாசாகர்.

இதற்கிடையே படத்தைத் தயாரிக்கும் சிவாஜி பிலிம்ஸ் நிறுவனம் ஸ்டில்கள், பாட்டுக்கள் உள்ளிட்டவற்றை பிரபலப்படுத்தும் வகையில்டாடா இண்டிகா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்த ஒப்பந்தம் கையெழுத்தான நிகழ்ச்சியில் நிருபர்களிடம் பேசிய படத்தின் இயக்குனர் பி.வாசு,

சந்திரமுகி படப்பிடிப்பை கிட்டத்தட்ட முடித்து விட்டோம். டாக்கி போர்ஷன் எனப்படும் வசனம் பேசும் பகுதிகள் எல்லாம் ஓவர். 75நாட்களில் படு வேகமாக இந்த வேலையை முடித்தோம். இப்போ 3 பாட்டு மட்டும்தான் பாக்கி.

ரஜினி மிகவும் வித்தியாசமான வேடத்தில் நடித்துள்ளார். பழைய ரஜினியை இந்தப் படத்தில் பார்க்கலாம். சண்டைக் காட்சிகளிலும்கலக்கியுள்ளார். பல சண்டைக் காட்சிகளில் டூப் இல்லாமலேயே நடித்தார். ரொம்பவும் ஸ்க் எடுத்து செய்தார். அவரது வேகத்தை படத்தில்பார்த்தால் ஆச்சரியப்படுவீர்கள்.

கர்நாடகத்தில் சந்திமுரகியை திரையிடுவதில் பிரச்சினை இல்லை. புதிய படங்களை வெளியிட இருந்து வந்த தடைகள் குறித்து அங்குஇப்போது சுமூக டிவு ஏற்பட்டு விட்டது. சமீபத்தில் திருப்பாச்சி படம் தமிழகத்தில் வெளியிடப்பட்ட அதே நாளில் கர்நாடகத்திலும் ரிலீஸ்செய்யப்பட்டது.

கேரளாவிலும் சந்திரமுகியைத் திரையிடுவதில் பிரச்சினை இல்லை. சிக்கல் (கதை யாருடையது என்ற விவகாரம்) பேசி முடிக்கப்பட்டுவிட்டது என்றார் வாசு.

படத்தின் பாடல் கேசட் வெளியீடு மார்ச் மாதம் 5ம் தேதி நடைபெறுகிறது. இந்திப் பின்னணிப் பாடகி ஆஷா போன்ஸ்லே சிறப்புவிருந்தினராக கலந்து கொண்டு கேசட்டை வெளியிடுவாராம்.

சந்திரமுகி தெலுங்கிலும் எடுக்கப்பட்டு வருகிறது. இந் நிலையில் இந்தப் படம் இந்திக்கும் போகிறது. சிவாஜி பிலிம்ஸ் நிறுவனமேதயாரிக்கவுள்ள இந்திப் படத்தில் ரஜினி நடித்த கேரக்டரில் ஷாருக்கான் நடிக்கவுள்ளாராம். அவருக்கு ஜோடியாக யார் நடிப்பது என்பதுஇன்னும் முடிவாகவில்லை.

ராஜ்குமார் சந்தோஷிதான் படத்தை இயக்கப் போகிறார்.

இந்தப் படத்திற்குப் பின்னர் சந்தோஷி சிவாஜி பிலிம்ஸுக்காக தமிழிலும் ஒரு படத்தை இயக்கித் தரவுள்ளார் என்று கூறப்படுகிறது. தமிழ்சந்திரகி முடிந்தவுடன் இந்தி சந்திரமுகியைத் தொடங்க திட்டமாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil