»   »  வருத்தப்படும் த்ரிஷா

வருத்தப்படும் த்ரிஷா

Subscribe to Oneindia Tamil

த்ரிஷாவும் பரபரப்பும் ஒட்டிப் பிறந்தவை. ஏதாவது ஒரு புரளி, அரசல் புரசல் செய்தியில் அடிபட்டுக் கொண்டே இருப்பார்.

பாதி செய்திகள் புரளியாக இருந்தாலும் த்ரிஷாவாக தேடிக் கொண்ட பிரச்சனைகள், சிக்கல்களும் மிக அதிகம்.

இப்போது த்ரிஷாவைப் பற்றி மீண்டும் ஒரு பரபரப்பு கிளம்பியுள்ளது. தனது தந்தையை வீட்டை விட்டு விரட்டி விட்டுவிட்டதாகவும் அவரை பார்ப்பதை தவிர்த்து வருவதாகவும் கோலிவுட்டிலும் டோலிவுட்டிலும் செய்திகள் பரவியுள்ளன.

ஆனால், இதை மிக வருத்தத்துடன் மறுத்துள்ளார் த்ரிஷா. ஹைதராபாத்தில் உள்ள அவர் கூறுகையில்,

இந்த உலகத்தில் பெரும்பாலானவர்கள் தங்களது வேலையில் எந்நேரமும் பிசியாக இருப்பார்கள். அவர்களால் மற்றதைப் பற்றி சிந்திக்க நேரம் இருக்காது.

ஆனால் ஒரு சிலருக்கு வேலை எதுவும் இருக்காது. இப்படிப்பட்டவர்கள் தான் தங்களைப் பற்றி சிந்திப்பதை விட்டு விட்டு பிறர் என்ன செய்கிறார்கள் என்று யோசிப்பார்கள்.

அவர்ளது பெயரைக் கெடுக்க என்ன வழி என்பது பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பார்கள்.

இப்படிப்பட்டவர்கள்தான் என்மீது அடிக்கடி ஏதாவது ஒரு அவதூறை கிளப்பிவிட்டு வருகின்றனர்.

நான் எனது தந்தையை வீட்டை விட்டு விரட்டி விட்டதாகவும், நான் அவரைப் பார்ப்பதே இல்லை என்றும், அவர் கவனிப்பார் இல்லாமல் இருப்பதாகவும் இதே கும்பல் இப்போது புரளி பரப்பி வருகிறது.

இதை அறிந்து வேதனையில் துடித்துவிட்டேன். எனது தந்தை சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் உயர் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார்.

அவர் கஷ்டப்பட்டு உழைத்து தான் என்னை படிக்க வைத்தார். அதை நான் மறக்க முடியுமா. நான் இப்போது இவ்வளவு சம்பாதித்தாலும் அவர் தொடர்ந்து வேலை பார்க்க விரும்பி அந்த வேலையில் தொடர்ந்து வருகிறார்.

அவரை நான் ஏன் வீட்டை விட்டு விரட்டப் போகிறேன். தந்தைக்கு என் மீதும், அவர் மீது எனக்கும் பாசம் மிக அதிகம்.

அவர் என்னை சார்ந்து வாழ விரும்பாதவர். முடியும் வரை வேலை பார்க்க வேண்டும் என்ற எண்ணமும் வைராக்கியமும் உள்ளனர். இதனால் தான் வேலையில் இருக்கிறார்.

சில மாதங்களுக்கு முன், நான் தற்கொலைக்கு முயற்சித்ததாகக் கூட வீண் வதந்தியை கிளப்பினார்கள்.

இவை என்னை நோகடித்தாலும் அதையெல்லாம் ஏற்றுக் கொண்டு வாழ பழகிவிட்டேன். எப்படிப்பட்ட பிரச்சனை வந்தாலும் ஓடி ஒளிய மாட்டேன்.

அந்த மனப்பக்குவம் எனக்கு வந்துவிட்டது என்றார் த்ரிஷா.

வுட்டுடுங்கப்பா

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil