»   »  என்னால் முடியாது-த்ரிஷா

என்னால் முடியாது-த்ரிஷா

Subscribe to Oneindia Tamil
Trisha

பில்லாவில் நயனதாரா காட்டிய அளவுக்குக்கு தன்னால் கவர்ச்சி காட்ட முடியாது என்கிறார் த்ரிஷா.

பில்லாவில் நமீதா, நயனதாரா இடையே கடும் கிளாமர் போட்டி நடந்தது. கவர்ச்சியை அள்ளி வீசியிருந்தனர்.

இதுவரை எல்லா படத்திலும் கவர்ச்சி நாயகியாக வலம் வந்து கொண்டிருந்த நமீதாவையே, நயனதாராவின் இந்தக் கிளாமர் வீழ்த்திவிட்டதாம்.

இந் நிலையில் அந்த அளவுக்கு கிளாமர் கோதாவில் நான் இறங்கத் தயார் இல்லை என்று கூறியிருக்கிறார் த்ரிஷா. ராதாமோகன் இயக்கும் அபியும் நானும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் த்ரிஷா கூறுகையில்,

மொழியில் ஜோதிகா நடித்ததுபோல நானும் வெரைட்டியான கேரக்டரில் நடிக்க வேண்டும் என்பது தான் நீண்ட நாள் ஆசை. எனவே நான் நடிக்கும் படங்களின் கதை தரமானதாகவும், எனக்கு முக்கியத்துவம் தருவதாகவும் இருக்க வேண்டும். கிளாமரில் விருப்பமில்லை.

சிம்ரன் தான் எனக்கு ரோல் மாடல். 'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தில் அவர் செய்தது மாதிரி ஒரு அருமையான கேரக்டரில் நடிக்க வேண்டும்.

பில்லாவில் நயனதாராவுக்கு காஸ்டியூம் மிக பொருத்தமாக இருந்தது. அவருக்கு கிளாமர் கூட அழகாக இருந்தது. ஆனால், அந்த அளவுக்கு என்னால் கவர்ச்சி காட்ட முடியாது என்கிறார்.

Please Wait while comments are loading...