»   »  சந்திப்போமா?

சந்திப்போமா?

Subscribe to Oneindia Tamil

சிம்ரன் இடத்தை த்ரிஷா கிட்டதட்ட பிடித்து விட்டார் என்றே தோன்றுகிறது.

காரணம் என்னவென்றால், சிம்ரன் போலவே தமிழிலும் தெலுங்கிலும் பெரிய பெரிய நடிகர்களுடன் பெரிய பெரிய பேனர்களில்நடித்து வருகிறார். கால்ஷீட் டைரி எப்போதும் நிரம்பி வழிகிறது.

விஜய்க்கு ஜோடியாக திருப்பாச்சி படத்தில் துடுக்குத்தனமான, வாயாடி பெண்ணாக நடிக்கிறார். பாடல் காட்சியில் கூடவாயாடித்தனமாகத்தான் நடித்திருக்கிறார். இதுபோன்ற வேடத்தில் த்ரிஷா நடிப்பது இதுதான் முதல் தடவை.

அடுத்ததாக அஜித்துடன் ஜி படத்தில் நடிக்கிறார். வெற்றிப்பட இயக்குநர் லிங்குசாமிதான் இந்தப் படத்தின் இயக்குநர்.த்ரிஷாவுக்கு படத்தில் நல்ல கேரக்டராம்.

இது தவிர தெலுங்கில் வர்ஷம் படத்தைத் தயாரித்த எம்.எஸ். ராஜு உருவாக்கும் என்.என்.என் என்ற படத்தில் "பாய்ஸ் ஹீரோசித்தார்த்துடன் நடிக்கிறார். இந்தப் படத்தை இயக்குவது பிரபுதேவா.

மகேஷ் பாபுவின் அத்தடு என்ற தெலுங்கு படத்திலும் த்ரிஷா நடிக்கிறார்.

மும்பை நடிகைகளுடனான போட்டியில் எப்படி இவ்வாறு தாக்குபிடிக்க முடிகிறது என்ற கேள்வியை த்ரிஷாவிடம் கேட்டபோது,அவர் கூறியதாவது:

மும்பையிலிருந்து வந்தவர்களில் குஷ்பு, சிம்ரன், ஜோதிகாவால் மட்டுமே இங்கு ஜெயிக்க முடிந்தது. மும்பை நடிகைகள்கவர்ச்சியைக் காட்டி இங்கு வெற்றி பெறுகிறார்கள் என்று கூறுவது தவறு.

கவர்ச்சி ஒன்றையே பிரதானமாகக் கொண்டு தமிழில் களமிறங்கிய 10க்கும் மேற்பட்ட நடிகைகள் இப்போது காணாமல்போய்விட்டார்கள். நான் கவர்ச்சியை மட்டும் நம்பவில்லை. என்னுடைய கேரக்டர் நன்றாக இருக்க வேண்டும்.

தமிழைக் காட்டிலும் தெலுங்குப் படங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக சிலர் என்னைப் பற்றி கூறுவது தவறு.படத்தில் என்னுடைய கேரக்டர் பிடித்திருந்து, கால்ஷீட்ஸ் ஒத்து வந்தால் மட்டுமே தெலுங்குப் படங்களில் நடிக்கிறேன்.

நான் ஒரு தமிழ்ப் பெண். தமிழில் தொடர்ந்து நடிப்பதிலேயே ஆர்வமாக இருக்கிறேன்.

இதுவரை நான் நடித்தது எல்லாம் ஹீரோ ஓரியண்டட் சப்ஜெக்ட்ஸ்தான். அவையெல்லாம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் படங்களாகஅமைந்ததால், எனக்கு புகழ் கிடைத்தது. ஒரு நல்ல கதை கிடைத்தால், அதில் கலக்கி தேசிய விருது வாங்குவேன்.

கூடிய சீக்கிரம் அத்தகைய கதையம்சம் உள்ள படங்களைத் தேர்வு செய்து நடிப்பேன். அதேநேரத்தில் கதாநாயகிக்குமுக்கியத்துவம் தரக்கூடிய வேடங்களில் மட்டுமே நடிப்பேன் என்று நான் கண்டிஷன் போட முடியாது என்று தெளிவாகவே த்ரிஷாகூறினார்.

பின்னே, அடுத்து படங்கள் வர வேண்டுமே!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil