Don't Miss!
- Sports
கோலிவுட்டில் கால்பதித்தார் தோனி.. முதல் தயாரிப்பின் அறிவிப்பு வெளியானது.. நடிகர்கள் யார் தெரியுமா??
- News
மாநில பொதுத்துறை நிறுவனங்களை இனி ஈஸியாக கண்காணிக்கலாம்! முதலமைச்சர் தொடங்கி வைத்த புதிய வலைதளம்!
- Lifestyle
சனி அஸ்தமனமாவதால் ஜனவரி 30 முதல் இந்த 4 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு...
- Technology
உஷார்.! 5G ஆபத்தானதா? இவ்வளவு மறைமுக பாதிப்பு இருக்கிறதா? IPS அதிகாரிகள் சொன்ன உண்மை.!
- Finance
ரத்தகளறியான அதானி குழும பங்குகள்.. 20 சதவீதம் வரையில் சரிவு..!
- Automobiles
நம்பவே முடியல... படத்தில் உள்ள இந்த பைக்கிற்கு இப்படியொரு வரலாறு உள்ளதா!! முழு விபரம்...
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
சுசிகணேசின் வஞ்சம் தீர்த்தாயடா படத்தில் இரண்டு ஹீரோ... அதில் ஒரு பிரபல ஹீரோ இவர் தான்
சென்னை: வஞ்சம் தீர்த்தாயடா... திரைபடத்தின் நடிகர்கள் தேடும் படலம் நடைபெறுகிறது என்று இயக்குனர் சுசீ கணேசன் சமீபத்தில் நடந்த விழாவில் தெரிவித்துள்ளார்.
சுஜாதா குறிப்பிட்டது போல் நியூஸ் பேப்பரில் இரண்டு வரிகளில் ஒரு கதை இருக்கும். நான் நியூஸ் பேப்பர் படிக்கவில்லையென்றால் எனக்கு பொழுது விடியாது என்றும் இயக்குனர் சுசி கணேசன் கூறினார்.
வித்யாசமான கதைகள் கொண்டு பல வெற்றிகள் கொடுத்த இயக்குனர் சுசி கணேசன் இந்த முறை ஒரு புது முயற்சி எடுத்து உள்ளார். அவர் நம் பில்மிபீட் தமிழுக்காக பிரத்தியேக பேட்டி ஒன்று கொடுத்து உள்ளார். அந்த பேட்டியில் அவரும் அவரது மனைவியும் நிறைய விஷயங்கள் பேசி உள்ளனர். அவர் மனைவி தான் இந்த படத்தின் தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் இருவரும் பேசிய முக்கிய கேள்வி பதில்களை இங்கு பார்ப்போம்.

சோஷியல் மீடியாவுக்கு முக்கியத்துவம்
கேள்வி: கணவன், மனைவி ஆகிய நீங்கள் வஞ்சம் தீர்த்தயடா திரைப்படத்தில் இயக்குனர், தயாரிப்பாளர் அவதாரம் குறித்து....
பதில்: ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. தமிழில் முதல் படம் தயாரிப்பது மிகவும் பெருமையாக உள்ளது. இந்த திரைப்படத்தில் சோஷியல் மீடியா, யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்றவற்றை அடிப்படையாக கொண்டு இத்திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு மனவலிமை
கேள்வி: உங்கள் திரைப்படத்தில் பெண் கதாபாத்திரம் மிக அழுத்தமாக அமைப்பீர்கள். வஞ்சம் தீர்த்தயாடா திரைபடத்தில் போஸ்டரில் இரண்டு ஆண் கதாபாத்திரம் பிரம்மாண்டப்படுத்தப்பட்டுள்ளது. எதனால்?
சுசி கணேசன் பதில்: ஆண்களை விட பெண்களுக்கு மனவலிமை அதிகம் என்பது எனது கருத்து. ஏனெனில் எனது அம்மா, காலை 5 மணிக்கு எழுந்து, பருத்தி காட்டுக்கு சென்று வேலை பார்த்து விட்டு, மீண்டும் வீட்டு வேலைகளை செய்வார். ஆனால் அப்பா வேலைக்கு சென்று வந்ததும் தூங்கி விடுவார். இதை மனதில் வைத்து தான் நான் இயக்கிய 5 திரைப்படங்களிலும் பெண் கதாபாத்திரம் அழுத்தமாகவே இருக்கும். வஞ்சம் தீர்த்தாயடா திரைப்படத்திலும் ஒரு மிக அழுத்தான பெண் கதாபாத்திரம் உள்ளது என்றார்.

கதாநாயகர் தேடும் படலம்
கேள்வி: பிரபல நடிகர்கள் உங்கள் திரைப்படத்தில் நடிக்க விரும்புவதாக கூறுகிறார்கள். வஞ்சம் தீர்த்தயாடா திரைப்படத்தின் கதாநாயகர்கள் யார்?
சுசி கணேசன் பதில்: திரைபடத்தின் கதாநாயகர்கள் தேடும் படலம் நடைபெறுகிறது. ஒரு கதாநாயகர் எல்லோருக்கும் தெரிந்த முகாம் ஆனால் அது சஸ்பென்ஸ். அது சுசி கணேசன் படங்களில் நடித்த பிரபல நடிகர் என்பது மட்டும் நிதர்சனமான உண்மை. அது பிரஷாந்த், விக்ரம்,ஜீவன், ப்ரஸ்ஸனா யாராக வேண்டுமானால் இருக்கலாம் . ஆனால் சஸ்பென்ஸ் இப்போதைக்கு. மற்ற ஒரு நடிகர் தான் தேடுதல் வேட்டை நடை பெறுகிறது .

நான் இளையராஜா ரசிகன்
கேள்வி: இசையமைப்பாளர் இளையராஜா குறித்து...
சுசி கணேசன் பதில்: எனது திரைபடத்திற்கு முதன் முதலாக இளையராஜா இசையமைக்கிறார். அவரை சந்தித்தது புது அனுபவம். அவரை நான் மியூசிக் டைரக்டராகவும், ரசிகனாகவும் சந்தித்தேன். அவரிடம் அவரை நான் எப்படி ரசிக்கிறேன் என்பதை மட்டும் தெரியப்படுத்தினேன் என்றார்.
கேள்வி: உங்களுடைய அடுத்த முயற்சி...
பதில்: வேலுநாச்சியார் எனது அடுத்த படைப்பாக இருக்கும். புல்லட் 99 வேறொரு தளத்தில் உருவாகும் என்றார்.சுசி கணேசன் மற்றும் அவரது மனைவி இன்னமும் நிறைய கேள்வி பத்திகளை ஸ்வாரஸ்யமாக பேசி உள்ளனர் . முழு வீடியோ காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் தலத்தில் காணலாம்.