»   »  கிளாமருக்கு உதயதாரா ஸாரி!

கிளாமருக்கு உதயதாரா ஸாரி!

Posted By:
Subscribe to Oneindia Tamil
Udayathara
குத்தாட்டத்திற்கும், கிளாமர் வேடங்களுக்கும் பெரிய கும்பிடு போட்டுள்ளாராம் உதயதாரா.

வழக்கமான கேரள வரவுதான் உதயதாராவும். அகல விழிகளுடன், அம்சமாக உள்ள உதயதாரா, தீநகர் படத்தில் கரணுக்கு ஜோடி போட்டு நடித்து தமிழில் கால் எடுத்து வைத்தார்.

படத்தில் நடிப்போடு கிளாமரையும் சரிவிகித சமானத்தில் கலந்து கொடுத்திருந்தார் உதயதாரா. படத்தில் அவர் நடித்த காட்சிகளை விட்டு விட்டு கிளாமர் காட்டி ஆடிப் பாடியிருந்த பாடல் காட்சியை மட்டும் பார்த்து மெய் மறந்து போன சில தயாரிப்பாளர்கள், உதயதாராவை வைத்து கவர்ச்சி ரசம் சொட்டச் சொட்ட படம் எடுப்பது என்ற முடிவுக்கு வந்தனர்.

அதில் ஒருவர் ஒத்தப் பாட்டுக்கு குத்தாட்டம் போட வைக்க உதயதாராவை அணுகினார். அதைக் கேட்டதும் கடுப்பாகிப் போன உதயதாரா, அடிக்காத குறையாக அந்தத் தயாரிப்பாளரை விரட்டி விட்டு விட்டாராம்.

கடுப்பான தயாரிப்பாளரோ, தீநகர் படத்தில் மட்டும் ஒரு பாட்டுக்கு கவர்ச்சிகரமாக ஆடியுள்ளீர்களே என்று நியாயம் கேட்க, அதற்கு உதயதாரா, படத்தில் 5 நிமிடம் வர்ற கவர்ச்சி டான்ஸ் மட்டும் தான் உங்க கண்ணுக்கெல்லாம் தெரிஞ்சதா. பாக்கி 2 மணி நேரமும் திரையில் வர்றனே. அந்த நடிப்பெல்லாம் உங்க கண்ணுக்கு தெரியாமல் போச்சா என்று அடக்க மாட்டாமல் கேட்டாராம்.

அதேபோல இன்னொரு படத்தில் கவர்ச்சி வேடம் இருப்பதாக தயாரிப்பாளர் சொல்ல, முடியவே முடியாது என்று வேகமாக மறுத்து விட்டாராம்.

கிளாமராக நடிக்க மாட்டேன், குத்துப் பாட்டுக்கு ஆட்டம் போட மாட்டேன் என்று சபதமே எடுத்துள்ளாராம் உதயதாரா.

தமிழில் அப்படி நடிக்க வாய்ப்பே இல்லை என்பதால் இப்போது மலையாளம் மற்றும் கன்னடப் படங்களில் கவனத்தை திருப்பியுள்ளார். அங்கு சொல்லிக் கொள்ளும்படியான வாய்ப்புகள் வந்திருப்பதால் இப்போதைக்கு தமிழ் பக்கம் திரும்பிப் பார்ப்பதில்லை என்ற முடிவில் இருக்கிறாராம் உதயதாரா.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil