»   »  வரலட்சுமி என் பொக்கிஷம்... ஆனா... மனம் திறக்கும் விஷால்!

வரலட்சுமி என் பொக்கிஷம்... ஆனா... மனம் திறக்கும் விஷால்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வரலட்சுமி என் நெருங்கிய தோழி, என் பொக்கிஷம். ஆனால், திருமணம் பத்தி இப்போ எதுவும் சொல்ல முடியாது எனத் தெரிவித்துள்ளார் நடிகர் விஷால்.

சினிமா பிரபலங்கள் என்றாலே கிசுகிசுக்களுக்கு பஞ்சம் இருக்காது. அந்த வகையில் சமீபத்தில் அதிகம் அதிகமாக கிசுகிசுக்கப் பட்டவர்களில் விஷால், வரலட்சுமிக்கும் முக்கிய இடம் உண்டு.

காரணம், சமீபத்தில் விக்ராந்தின் பிறந்த நாள் விழாவில் விக்ராந்த் அவரது மனைவியுடன் நடிகர் விஷ்ணு அவரது மனைவியுடன் உதயநிதி அவரது மனைவியுடன் இப்படி ஜோடியாக கலந்துகொண்டனர். ஆனால் விஷாலோ வரலட்சுமியுடன் வந்திருந்தார். அதுதவிர, தொடர்ந்து நடைபெற்ற விருது விழா ஒன்றிலும் விஷால், வரலட்சுமி ஜோடி பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

எனவே, இவர்கள் இருவரும் காதலிப்பதாகவும் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், ஆனந்தவிகடனுக்கு அளித்துள்ள பேட்டியில் வரலட்சுமியுடனான தனது நட்பு குறித்து மனம் திறந்துள்ளார் விஷால். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

என் தோழி...

என் தோழி...

வரலட்சுமி என் நெருங்கிய தோழி. சின்ன வயசுல இருந்து எங்களுக்குள்ள நல்ல நட்பு இருக்கு.

பிடிச்ச பொண்ணு...

பிடிச்ச பொண்ணு...

எனக்கு ரொம்ப பிடிச்ச பொண்ணு. என் நல்லது கெட்டதுகளில் கூடவே இருந்த பொண்ணு.

என் பொக்கிஷம்...

என் பொக்கிஷம்...

சுருக்கமா சொல்லணும்னா அவ எனக்கு பொக்கிஷம். ஆனா, கல்யாணம் பத்தி இப்போ எதுவும் சொல்ல முடியாது.

பொறுமை அவசியம்...

பொறுமை அவசியம்...

இது தயக்கம் இல்லை. சில விஷயங்கள் நடக்க கொஞ்சம் பொறுமை அவசியம். ஒரு படம் ஆரம்பிச்சா இந்தத் தேதியில் ஆரம்பிக்கிறோம்னு உறுதியா சொல்லலாம். ஆனா, எல்லா விஷயமும் அப்படி இல்லையே.

கல்யாணம்...

கல்யாணம்...

எனக்கு இப்போ 37 வயசு. கல்யாணம்கிறது வாழ்க்கையில் ரொம்ப முக்கியமான முடிவு. பெர்சனலா அது பெரிய முடிவு. அதை சரியா எடுக்கணும்.

நேரம் வரும்...

நேரம் வரும்...

இப்போ நான் ஒண்ணு சொல்லி, அப்புறம் அப்படி இல்லைனு மழுப்பினா அது தப்பு... அப்படி நடக்கக் கூடாது. அதான் சொல்றேன். அந்த நேரம் வரும்போது நானே சொல்றேன்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மதகதராஜா...

மதகதராஜா...

போடா போடி படம் மூலம் அறிமுகமான நடிகை வரலட்சுமி சரத்குமாரின் மகள். இவரும், விஷாலும் இணைந்து நடித்த மதகதராஜா இன்னும் ரிலீசாகாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
In an interview to an tamil weekly magazine, actor Vishal has said that actress Varalakshmi is his prestigious asset.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil