கலாஷேத்ரா வாசலில் ஹீரோயினை தேடினேன்... யாருக்கும் மேக்கப் இல்ல.. பேட் கேர்ள் இயக்குநர் பேட்டி!

நடிகை வர்ஷா பாரத் தனது 'பேட் கேர்ள்' பட அனுபவங்கள், பெண் மைய கதைகள் மீதான ஈர்ப்பு, மற்றும் அனுராக் காஷ்யப் பாராட்டு பற்றி மனம் திறக்கிறார். ஷாந்தி பிரியா, நிஷாந்தினி ஆகியோரும் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்கின்றனர். சினிமா மொழிக்கு அப்பாற்பட்டது, உணர்வுபூர்வமானது என வர்ஷா பாரத் கூறுகிறார். இத்திரைப்படம் அவருக்கு புதிய அடையாளத்தை அளித்துள்ளது.

சென்னை: இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் கம்பெனி தயாரிப்பில், அறிமுக இயக்குநர் வர்ஷா பரத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'பேட் கேர்ள்'. அஞ்சலி சிவராமன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில், சாந்தி பிரியா, சரண்யா ரவிச்சந்திரன், ஹ்ரிது ஹரூன், டீஜே, சஷங்க் பொம்மிரெட்டிபள்ளி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் செப்டம்பர் 5ந் தேதி வெளியாக இருக்கும் நிலையில், 'பேட் கேர்ள் படக்குழுவினர் எமது Filmibeat Tamil சேனலுக்கு பேட்டி அளித்துள்ளனர்.

அதில், பேசி வர்ஷா பரத், நடிகர்களை தேர்வு செய்ய தான் எந்த ஆடிஷனும் நடத்தவில்லை, ரம்யாவின் கதாபாத்திரத்திற்காக நான் கலாஷேத்ரா வாசலில் பல நாட்கள் காத்திருந்தேன். நடிகர்களின் முகத்தில் இருந்தே கதாபாத்திரத்திற்கு தேவையான அம்சங்களை கண்டுபிடித்தேன். அதுமட்டுமின்றி படத்தின் ஒவ்வொரு வார்த்தையின் பின்னணியையும் நடிகர்களுக்கு விளக்கியதாக கூறினேன் என்றார். மேலும், பெண்களை மையமாக வைத்து கதைகளை தேர்ந்தெடுப்பது ஏன் என்ற கேள்விக்கு பதில் அளித்த வர்ஷா பாரத், "பெண்கள் பற்றிய கதைகளில் எனக்கு எப்போதும் ஒரு ஈர்ப்பு உண்டு. எனது படத்தில் நிறைய பெண் கதாபாத்திரங்கள் இருக்க வேண்டும் என்று நான் விரும்புவேன் என்றார்.

Bad Girl
Photo Credit:

பேட் கேர்ள்: இதைத்தொடர்ந்து பேசிய நடிகை சாந்தி பிரியா, பேட் கேர்ள் படத்தில் நடித்தது ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. எந்தவிதமான மேக்கப்பும் இல்லாமல் நடித்தது சவாலாக இருந்தது. வர்ஷா என்னிடம் புகைப்படத்தை கேட்கும் போது, எந்தவிதமான மேக்கமும் வேண்டாம் என்றார். அதே போல படத்தில் கமிட்டானதில் இருந்து, ஐப்ரோ, பேஷியல் என எதையும் செய்ய வேண்டாம் என்று சொல்லிவிட்டார். இயக்குநர் வர்ஷா பாரத், தன்னை நம்பியதால் அது சாத்தியமானது.மேலும், தமிழ் சினிமாவில் மீண்டும் என்ட்ரி கொடுத்து இருப்பது மகிழச்சியாகவும், மன நிறைறைவாகவும் இருக்கிறது.

பாராட்டினார்: இதைத்தொடர்ந்து பேசிய வர்ஷா பாரத், அனுராக் காஷ்யப் தொலைபேசியில் பாராட்டியபோது, ​​அது ஒரு கனவு நனவானது போல உணர்ந்தேன். "அவர் என் நடிப்பைப் பாராட்டியது மட்டுமல்லாமல், எனது சினிமா வாழ்க்கையின் ஆரம்பம் இதுதான் என்றும் கூறினார். அந்த வார்த்தைகள் எனக்கு ஒரு பெரிய ஊக்கத்தை அளித்தது. சினிமா என்பது மொழிக்கு அப்பாற்பட்டது, அது ஒரு உணர்வுப்பூர்வமான ஊடகம். எல்லோரும் ஏதோ ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால், "பேட் கேர்ள்" எந்த குறிப்பிட்ட சமூகத்தையும் குறிக்கவில்லை. இது ஒரு தாய் மற்றும் மகளுக்கு இடையிலான உறவை பற்றிய கதை.

"பேட் கேர்ள்" திரைப்படம் தனக்கு ஒரு புதிய அடையாளத்தை கொடுத்திருக்கிறது. ஒரு நடிகையாக மட்டுமல்லாமல், ஒரு பெண்ணாகவும் என்னை மேம்படுத்திக் கொள்ள உதவியது என்று கூறிய வர்ஷா பாரத். படத்தின் தலைப்பு பொருத்தமானது என்றும், இது ஒரு தவறான பெண்ணின் கதை அல்ல. இந்த உலகத்தில் யாருமே பேட் கேர்ள் இல்லை, கெட்ட பெண் என்ற சொல்வதில் அர்த்தம் இல்லை. அது நாமாகவே வைத்துக் கொள்ளும் ஒரு லேபிள் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X