»   »  வித்தியாச வேதிகா

வித்தியாச வேதிகா

Subscribe to Oneindia Tamil

வேதிகா படு வெவரமான பார்ட்டிதான். பட வாய்ப்பு இல்லாவிட்டால் வேலை பார்த்து பிழைத்துக் கொள்வேன் என்று படு கேஷுவலாக கூறுகிறாராம்.

வியர்க்க வைக்கும் அழகோடு, விறுவிறுப்பாக இருக்கிறார் வேதிகா. கை நிறைய படங்கள் இல்லாத போதும் கூட அைதப் பற்றிக் கவலைப்படாமல் படு ஹாயாக இருக்கிற படங்களில் நடித்து வருகிறார் வேதிகா.

என்னங்கம்மணி இப்படி படு ஜாலியா இருக்கீங்க, ஒவ்வொரு ஹீரோயினும் வாய்ப்பு பிடிக்க பல வகையான வழிகளை கையாளும்போது நீங்க மட்டும் ஏன் இப்படி என்றால் படு கேஷுவலாக பதிலளிக்கிறார் வேதிகா.

அதெல்லாம் பிழைச்சே ஆக வேண்டிய நடிகைகளுக்கு மட்டும்தான். எனக்கு அப்படிப்பட்ட நிலை இல்லை. கைவசம் நல்ல படிப்பு இருக்கு (அழகுப் பாப்பா படித்தது மார்க்கெட்டிங்காம், அதுவும் லண்டனில் படித்தவராம்).

நடிக்க வாய்ப்பு வராவிட்டாலும் கவலை இல்லை, கலக்கலான வேலை கிடைத்து விடும். அதைப் பிடித்துக் கொண்டு, ஹாயாக செட்டிலாகி விடுவேன் என்கிறார் கூலாக.

சினிமாவுக்கு வரும் முன்பே அவருக்கு சொந்தமாக ஒரு ஹோட்டல் வைக்கும் ஆசை இருந்ததாம். ஆனால் அதற்குள் சினிமா சான்ஸ் வந்து விட்டதால், நடிக்க வந்து விட்டாராம். இல்லாவிட்டால் இந்நேரம் குட்டி ஹோட்டல் அதிபராகி அசத்தியிருப்பராம்.

சினிமாவில் நடிப்பது போக இப்போதெல்லாம் விளம்பரப் படங்களில் நடிக்கவே அதிக ஆர்வம் காட்டுகிறார் வேதிகா. நிறைய துணிக்கடை விளம்பரங்கள் வேதிகாவைத் தேடி ஓடி வருகின்றன. வேதியும் ஒரு சான்ஸையும் விடாமல் பிடித்துக் கொண்டு பின்னி எடுத்து விடுகிறார்.

நடிப்பில் லட்சியம் ஏதாச்சும் இருக்காக்கா என்று கேட்டால், இளமை இருக்கப் போவது கொஞ்ச நாள், அது முடிவுதற்குள் அழகாக சில படங்களில் நடித்து விட்டு நம்ம வழியைப் பார்த்துப் போக வேண்டியதுதான். அதற்கு எதற்கு லட்சியம் எல்லாம் என்று படு யதார்த்தமாக கூறுகிறார் வேதிகா.

வித்தியாசமான ஆளுதான்

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil