»   »  ஹாலிவுட் போகும் வீரப்பன்

ஹாலிவுட் போகும் வீரப்பன்

Subscribe to Oneindia Tamil

தமிழ், கன்னடத்தில் வீரப்பன் கதையை படமாக்கக் கூடாது, அதை நானேதான் தயாரிப்பேன் என்று கூறி வரும் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி தற்போது வீரப்பனின் கதையை படமாக்குவது குறித்து ஹாலிவுட் தயாரிப்பாளர்கள் பேச்சு நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.

சந்தனக் கடத்தல் வீரப்பனின் கதையை கன்னடத்தில் குப்பி படத்தை இயக்கிய ரமேஷ் என்பவர் இயக்க முடிவு செய்தார். ஆனால் இதற்கு முத்துலட்சுமி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து தனது திட்டத்தை கிடப்பில் போட்டுள்ளார் ரமேஷ்.

இதேபோல தமிழிலும் சிலர் வீரப்பனின் கதையை படமாக்க முனைந்தனர். அவர்களுக்கும் ஆப்பு வைத்து விட்டார் முத்துலட்சுமி. இந்த நிலையில், ஹாலிவுிட் படத் தயாரிப்பாளர்கள் சிலர் வீரப்பன் கதை தொடர்பாக தன்னுடன் பேச்சு நடத்தி வருவதாக கூறியுள்ளார் முத்துலட்சுமி.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், என் கணவர் வீரப்பன் கதையை ஆங்கிலத்தில் படமாக எடுக்க ஹாலிவுட் தயாரிப்பாளர்கள் என்னிடம் பேச்சுவார்த்தை நடத்திவி்ட்டு சென்றுள்ளனர்.

அவர்களுடன் இந்தியாவின் பிரபல ஆங்கில பத்திரிக்கை துறையினரும் (யாரோ?) வந்திருந்தனர்.

கடந்த 2004ம் ஆண்டு அமெரிக்காவிலுள்ள பிரபலமான பத்திரிக்கையில் எனது கணவர் வீரப்பனை பற்றிய செய்தி வந்ததாக கூறினர். அந்த பத்திரிக்கையில் எப்போதாவதுதான் இந்தியாவைப் பற்றி செய்தி வரும். அப்படிப்பட்ட செய்திதாளில் உங்கள் கணவர் பற்றி செய்தி வந்ததால் அவரை பற்றி விசாரித்து தெரிந்து கொண்டு வந்துள்ளோம் என்றனர்.

அவர்களிடம் என் கணவரை பற்றி சரியான தகவல்களைக் கொண்டு படம் தயாரிக்கப்பட வேண்டும் என நான் கேட்டுக் கொண்டேன். அவர்களும் என் கருத்துக்கு மதிப்பளிப்பதாக கூறினர்.

ஆனால் படம் எடுப்பது குறித்து முடிவு எடுக்கப்படவில்லை, அவர்கள் மீண்டும் வருவதாக கூறியுள்ளனர் என்றார் முத்துலட்சுமி.

சினிமா வீரப்பன் முதலில் பேசப் போகும் பாஷை எதுவோ?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil