»   »  அஜீத்தை இயக்கும் கங்கைஅமரன் மகன்

அஜீத்தை இயக்கும் கங்கைஅமரன் மகன்

Subscribe to Oneindia Tamil

சென்னை 600028 என்ற வெற்றிப் படத்தைக் கொடுத்த கங்கை அமரனின் புதல்வன் வெங்கட் பிரபுவுக்கு கோலிவுட்டில் ஏக மவுசாகியுள்ளது. இதன் எதிரொலியாக அடுத்து அஜீத் மற்றும் தனுஷை வைத்து படம் இயக்கவுள்ளார் வெங்கட் பிரபு.

நடிகராக, பாடகராக அறியப்பட்டவர் வெங்கட் பிரபு. முதல் முறையாக அவர் சென்னை 600028 என்ற படத்தை இயக்கி அப்படத்தை வெற்றிப்படமாகவும் கொடுத்துள்ளார். இதனால் வெங்கட் பிரபுவுக்கு கோலிவுட்டில் புது மவுசு கிடைத்துள்ளது.

வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் நடிக்க முன்னணி நடிகர்கள் கூட ஆர்வப்படுகின்றனராம். தற்போது அஜீத் மற்றும் தனுஷை வைத்து இயக்கத் தயாராகி வருகிறார் வெங்கட் பிரபு.

இரு நடிகர்களும் இதுதொடர்பாக வெங்கட் பிரபுவுடன் முதல் சுற்றுப் பேச்சுவார்த்தையை முடித்துள்ளனராம். நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி தயாரிக்கப் போகும் படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். இதில் தனுஷ் நாயகனாக நடிக்கிறார்.

தற்போது தனுஷ் நடித்து வரும் பொல்லாதவன், யாரடி நீ மோகினி ஆகிய இரு படங்களையும் முடித்து பிரபு படத்துக்கு வருகிறார்.

அதேபோல பில்லா படத்தை முடித்து விட்டு வெங்கட் பிரபு படத்தில் நடிக்கவிருக்கிறார் அஜீத்.

இந்த இரட்டை வாய்ப்பு குறித்து வெங்கட் பிரபுவிடம் கேட்டபோது, உடனடியாக படம் செய்யும் அவசரம் இல்லை. இரு நடிகர்களும் என்னைத் தொடர்பு கொண்டுள்ளனர். எனது முதல் படத்தின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தனர். இருப்பினும் அவர்களை இயக்குவது குறித்த திட்டம் இன்னும் இறுதியாகவில்லை. முடிந்ததும் உங்களுக்குத்தான் முதலில் தகவல் சொல்வேன் என்றார் தனக்கே உரிய புன்னகையுடன்.

வெல்லுங்க வெங்கட்

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil