விசாரணை படத்தில் இவங்களுக்கு எல்லாம் சம்பளமே இல்லை.. வெற்றிமாறன் கொடுத்த ஷாக் லிஸ்ட்!

டெல்லி: இயக்குநர் வெற்றி மாறன் தான் தற்போது தமிழ் சினிமா உலகின் டாக் ஆஃப் த சிட்டியாக உள்ளார். இவரது இயக்கத்தில் உருவாகவுள்ள படங்கள் குறித்து அடுத்தடுத்து அப்டேட்கள் வரவுள்ளது என்று ரசிகர்கள் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கும் போது, அவரது தயாரிப்பில் வரும் 5ஆம் தேதி பேட் கேர்ள் படம் வெளியாகவுள்ளது. இந்த படமே அவரது தயாரிப்பில் கடைசி படம் என்றும் இனிமேல், படம் தயாரிக்கப்போவது இல்லை என்றும் தெரிவித்துவிட்டார். இது இவர் குறித்த பேச்சுக்களை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது. இந்நிலையில் அவர் ஆங்கில யூடியூப் சேனலான தி ஹாலிவுட் ரிபோர்ட்டர் சேனலுக்கு அளித்த பேட்டியில் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சென்ற அந்த பேட்டியில், விசாரணை படம் குறித்து பலருக்கும் ஷாக் கொடுக்கும் தகவலை தெரிவித்துள்ளார். விசாரணை படம் இவரது இயக்கத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு உருவாகி வெளியான படம் விசாரணை. இந்த படத்தை அவர் இயக்கியது மட்டும் இல்லாமல், தயாரிக்கவும் செய்தார். மேலும் இந்த படத்தின் முதன்மைத் தயாரிப்பாளர் என்றால் அது நடிகர் தனுஷ் தான்.

Vetri Maaran Opens About Who Are All Not Took The Salary For Visaranai Movie Fans Getting Shock
Photo Credit:

தனுஷ்: இந்த படம் குறித்து வெற்றி மாறன் பேசுகையில், " நான் இந்த படத்தின் கதையோடு தனுஷைச் சந்திக்கச் சென்றேன். அவர் என்னிடம் கதை சொல்ல வேண்டாம். கதை சொன்னால் நான் நடிக்கிறேன் என்று கூறிவிடுவேன். எனவே படத்திற்கு எவ்வளவு பணம் தேவைப்படும் என்று மட்டும் கேட்டார். நான் சொன்ன பணத்தை அவர் கொடுத்தார்.

சம்பளம் வாங்கல: விசாரணை படத்தை நாங்கள் ரூபாய் 2 கோடியே 75 லட்சத்திற்கு எடுத்தோம். அந்த படத்தில் நான் எனக்கு சம்பளம் எடுத்துக் கொள்ளவில்லை. நடிகர் தினேஷ் சம்பளம் எடுத்துக் கொள்ளவில்லை. இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் சம்பளம் வாங்கவில்லை. அதேபோல் நடிகர் கிஷோரும் சம்பளம் வாங்கவில்லை. எடிட்டர் கிஷோரும் சம்பளம் வாங்கவில்லை, சமுத்திரக்கனி மட்டும் ரூபாய் 5 லட்சம் வாங்கிக் கொண்டார். அவருக்கு நாங்கள் சம்பளம் வாங்கவில்லை என்று தெரியாது. தெரிந்திருந்தால் அவரும் அட்வான்ஸ் வாங்காமல் இருந்திருப்பார்.

Vetri Maaran Opens About Who Are All Not Took The Salary For Visaranai Movie Fans Getting Shock
Photo Credit:

பட்ஜெட்: விசாரணை படம் அப்போதே தியேட்டரில் கிட்டத்தட்ட ரூபாய் 3 கோடியே 75 லட்சங்கள் வரை வசூலித்தது. தியேட்டரிக்கலாக அந்த படம் வெற்றிப் படம் தான். ஒருவேளை அந்த படத்திற்கான நாங்கள் சம்பளம் வாங்கி இருந்தால் அந்த படத்தை அப்போது வணிக ரீதியாக வெற்றி படமாக மாற்றி இருக்க முடியுமா என்று தெரியவில்லை. இன்றைக்கு அந்த படத்தை உருவாக்க வேண்டும் என்றால் ரூபாய் 8 கோடிகள் வரை செல்வாகும். நாங்கள் அந்த படத்தை மிகவும் உணர்வுப்பூர்வமாக எடுத்தோம். இந்த கதையை உலகத்திற்குச் சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தோடு இருந்தேன்" என்று தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X