மிஷ்கின் படத்திலயும் நான் தான் வில்லன்... குஷியில் கார்பன் ஹீரோ

சென்னை : நடிகர் விதார்த் நடிப்பில் பொங்கலையொட்டி கார்பன் படம் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

Recommended Video

Carbon | Vidharth Exclusive | மாநாடு படம் 3 வாட்டி பாத்தேன் | Filmibeat Tamil

முன்னதாக அன்பறிவு படத்தில் அவர் மிரட்டலான வில்லனாக நடித்திருந்தார்.

இந்நிலையில் கார்பன் படம் மற்றும் தனது மற்ற ப்ராஜக்ட்கள் குறித்து அவர் பிலிமிபீட் நேயர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

நடிகர் விதார்த்

நடிகர் விதார்த்

நடிகர் விதார்த் தனது முதல் படத்திலேயே ரசிகர்களை தனது நடிப்பின் மூலம் வெகுவாக கவர்ந்தவர். தொடர்ந்து சிறப்பான கதைகயை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவரது ரசிகர்கள் வட்டமும் உயர்ந்து வருகிறது. இவருடன் கோலிவுட்டுக்கு நடிக்க வந்த பலரும் காணாமல் போயுள்ள நிலையில், இவர் தொடர்ந்து நடித்து வருகிறார்.

மிரட்டல் வில்லன்

மிரட்டல் வில்லன்

சமீபத்தில் இவரது அடுத்தடுத்த படங்கள் ரிலீசாகி வரவேற்பை பெற்றுள்ளன. ஹிப்ஹாப் தமிழா ஆதியுடன் இணைந்து இவர் நடிப்பில் வெளியான அன்பறிவு படத்தில் வில்லனாக மிரட்டியிருந்தார். நேரடியாக ஓடிடியில் வெளியாகி இந்தப் படம் வரவேற்பை பெற்றது.

பொங்கலுக்கு ரிலீசான கார்பன் படம்

பொங்கலுக்கு ரிலீசான கார்பன் படம்

வயதான வில்லனாக இந்தப் படத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் கவர்ந்தார் விதார்த். படத்தில் இவரது கெட்டப் பேசப்பட்டது. இந்நிலையில் தற்போது பொங்கலையொட்டி இவரது கார்பன் படம் திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

பிலிமிபீட் நேயர்களுக்கு பேட்டி

பிலிமிபீட் நேயர்களுக்கு பேட்டி

படம் மாநாடு படத்தை போலவே இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தாலும், இந்தப் படம் மாநாட்டிற்கு முன்னதாகவே படமாக்கப்பட்டதாக விதார்த் தெரிவித்துள்ளார். பிலிமிபீட் நேயர்களிடம் பேசிய அவர் படம் குறித்த பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

மாநாடு படத்தை 3 முறை பார்த்தேன்

மாநாடு படத்தை 3 முறை பார்த்தேன்

மேலும் மாநாடு படம் தனக்கு மிகவும் பிடித்தமானதாக அமைந்ததாகவும் அந்தப் படத்தில் தன்னுடைய படத்தையொட்டி ஒரேமாதிரியான டயலாக்குகள் இருந்ததாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். தன்னுடைய மனைவியுடன் இணைந்து படத்தை 3 முறை பார்த்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மிஷ்கின் படத்தில் வில்லன்

மிஷ்கின் படத்தில் வில்லன்

இதனிடையே அன்பறிவு படத்தில் கிடைத்த பிரபலத்தை அடுத்து அடுத்ததாக மிஷ்கின் படத்திலும் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாகவும் விரைவில் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாகவும் அவர் மேலும குறிப்பிட்டார். இந்த கதாபாத்திரத்தை தன்னை மனதில் வைத்து மிஷ்கின் வடிவமைத்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

குடும்பத்தில் 11 பேருக்கு கொரோனா

தன்னுடைய குடும்பத்தில் மொத்தம் 11 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தான் தனியாக இருந்ததால் தனக்கு பாதிப்பு ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். வெளியில் இருந்துக் கொண்டு அவர்களுக்கு தேவையானவற்றை செய்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X