»   »  இந்தி சந்திரமுகி வித்யா

இந்தி சந்திரமுகி வித்யா

Subscribe to Oneindia Tamil

சந்திரமுகி இந்திக்குப் போகிறது. இந்த ரீமேக்கில் ஜோதிகா நடித்த கேரக்டரில் வித்யா பாலன் நடிக்கிறார்.

சந்திரமுகியின் மூலம் மலையாளம் தான். அங்கு நாவலாக எழுதப்பட்ட மணிச்சித்ரதாழ் பின்னர் படமானது. அதில் ஷோபனா நடித்திருந்தார். அடுத்து அது பி.வாசு மூலமாக கன்னடத்துக்குப் போய், அதில் செளந்தர்யா நடித்தார்.

இந்த கன்னட படத்தைப் பார்த்துவிட்டுத் தான் அதை தமிழில் எடுக்க வைத்து நடித்தார் ரஜினி. சந்திரமுகி வேடத்துக்கு ஸ்னேகா உள்ளிட்ட கண்ணழகிகளையும் சிம்ரன் உள்ளிட்ட இைடயழகிகளையும் பொறுத்தம் பார்த்துவிட்டு கடைசியில் ஜோதிகாவை தேர்வு செய்தனர். அதில் அசத்தி எடுத்தார் ஜோ.

இந் நிலையில் இந்தப் படம் இந்திக்குப் போகிறது. இந்தியில் இப்போது கவர்ச்சியில் பின்னி எடுத்து வரும் வித்யா பாலன் தான் சந்திரமுகி கேரக்டரை செய்கிறார். இவர் அடிப்படையில் மலையாளி. இதனால் மணிசித்திரதாழ் நாவலும் தெரியும், படமும் தெரியும்.

வளர்ந்தது எல்லாம் தமிழ்நாடு. இதனால் பரத நாட்டியமும் அத்துப்படி. இந்தியில் இதுவரை இவர் கற்று பரத நாட்டியம் பயன்படாமலேயே இருந்ததாம். இப்போது அந்தத் திறமையை வெளிப்படுத்த சான்ஸ் கிடைத்ததால் பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்.

மணிச்சித்ரதாழ் படத்தில் ஷோபனா நன்றாக நடனம் ஆடியிருந்தார். அதை காப்பியடித்து தான் இந்த படத்தில் நடித்து வருகிறேன் என்கிறார் வித்யாபாலன்.

இந்திப் பேயி...

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil