Don't Miss!
- Sports
எங்கள் இனிய நாளை கெடுத்து விடாதீர்கள்.. மன வேதனையாக இருக்கு.. திருமணமான முதல் நாளே ஆப்ரிடி டிவிட்
- News
டெல்லி விமான நிலையத்தில் கேன்சர் பாதித்த பெண் பயணியை இறக்கிவிட்ட அமெரிக்க விமானம்.. காரணம் என்ன?
- Lifestyle
சுக்கிர பெயர்ச்சியால் பிப்ரவரி 15 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு லாபகரமான காலமாக இருக்கப் போகுது...
- Automobiles
இது செம காராச்சே! இதோட விலையை திடீர்ன்னு இவ்வளவு கூட்டிட்டாங்க! காரணம் இது தான்!
- Finance
7வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்..! விரைவில் குட் நியூஸ்
- Technology
பார்வை இழந்தவர்களுக்கான புது சூப்பர் Smartwatch.! இந்தியாவில் உருவான அசத்தல் கண்டுபிடிப்பு.!
- Travel
இனி திருப்பதியில் உண்டியல் பணம் கணக்கிடும் போது கண்ணாடி சுவர்கள் வழியே நீங்களும் பார்க்கலாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ராணிக்கேற்ற ராஜா நயன்தாராவுக்கு சரியான ஜோடி விக்னேஷ்...என்று சொல்லும் ஸ்ருதி லட்சுமி
சென்னை: எனது முதல்படமே பேய் படம் தான் என்று மதுரை சிஸ்டர்ஸ் சீரியலில் நடித்து கொண்டிருக்கும் நடிகை ஸ்ருதி லட்சுமி தெரிவித்தார்.
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் மதுரை சிஸ்டர்ஸ் என்ற சீரியல் ஒளிப்பரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் இந்திராணி என்ற கதாபாத்திரத்தில் நடிகை சாயாசிங் நடித்து வந்தார். இந்நிலையில் அவருக்கு பதிலாக இவர் என்ற முறையில் கேரளத்து பைங்கிளி நடிகை ஸ்ருதிலட்சுமி தற்போது நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை ஸ்ருதிலட்சுமி, நமது பிலீம்பீட் வினோத்துக்கு அளித்த சிறப்பு பேட்டியை இங்கு காணலாம்.
திருப்பதியில் வரிசையில் நின்று சாமி தரிசனம்.. வாழ்த்து சொன்ன ரசிகை.. நன்றி கூறிய நயன்தாரா!

சிறந்த நடிகைக்கான விருது
கேள்வி: உங்களது சீரியல் மற்றும் சினிமாப்பயணம் குறித்து நீங்கள் கூற விரும்புவது?
பதில்: எனது பூர்வீகம் கேரளா. தமிழ் சுமாராக பேசுவேன். ஏதாவது தவறாக பேசினால் மன்னித்து விடுங்கள். எனது அம்மா கேரளாவில் குணசித்திர நடிகை. நடிகை ஜெகதீஷ்குமாருடன் மனைவி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நான் ஐந்து வயதில், ஏசியாநெட் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான சீரியலில் நான் நடித்ததற்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதினை பெற்றேன். இதை தொடர்ந்து எனது முதல்படம், நடிகர் திலீப்புடன் இணைந்து "ரோமியோ" என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தேன். பின்னர் நடிகர் மோகன்லாலுவுக்கு தங்கச்சியாகவும் நடித்துள்ளேன். 2016ம் ஆண்டு சிறந்த நடிகைக்கான கேரள அரசின் விருதினை பெற்றுள்ளேன். நான் ஒரு கிளாசிக்கல் டான்ஸர் என்றார்.

கண்கள் அழகு
கேள்வி: சினிமாவிலிருந்து சின்னத்திரைக்கு வரக்காரணம் என்ன?
பதில்: பெரிய திரையை விட சின்னத்திரையில் நடிக்கும்பொழுது மக்களிடையே அதிகமான வரவேற்பு கிடைக்கிறது. குறிப்பாக நமது நடிப்பு மற்றும் கதாபாத்திரம் மீது ரசிகர்கள் பாசம் வைக்கின்றனர். எல்லோரும் எனது கண்கள் அழகாக இருப்பதாக கூறுகிறார்கள். என்னை விட எனது தங்கையின் கண் அழகாக இருக்கும். அது மட்டும் இல்லாமல் கொரோனா காலக்கட்டத்தில் மலையாள சீரியலிலும் நடித்துள்ளதாகவும் தெரிவித்தார்.சினிமாவிலிருந்து சின்னத்திரைக்கு வரக்காரணம் இதுவும் ஒரு முக்கிய விஷயம் ஆகும்.

ராணிக்கேற்ற ராஜா
கேள்வி: உங்களுக்கு பேய் படம் பிடிக்குமா? கேரளாவில் இருந்து வந்து சாதித்த நடிகைகள் பற்றி சொல்லுங்கள்.
பதில்: நான் நடித்த முதல்படமே பேய் படம் தான். அதில் எனது கண்கள் அழகாக காட்டப்பட்டிருக்கும். ஜனகன மண, ஹோம் போன்ற படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். கேரளாவில் இருந்து வந்து சாதித்த நடிகைகள் என்றால் நிறைய உண்டு. எனக்கு நயன்தாரா மிகவும் பிடிக்கும். ராணி போன்ற நயன்தாராவிற்கும், ராஜா போன்ற விக்னேஷ் சிவன் கிடைத்திருப்பது வரவேற்கத்தக்கது. அவர்களின் வாழ்க்கை சந்தோஷமாக அமைய எனது வாழ்த்துக்கள் என்றார்.

டப்பிங் ஆர்ட்டிஸ்டுக்கு நன்றி
கேள்வி: டப்பிங் குறித்து நீங்கள் கூற விரும்புவது?
பதில்: எனக்கு டப்பிங் கொடுப்பவர்கள் ரொம்ப கஷ்டப்படுவர். ஏனென்றால் தமிழில் நான்பேசும்போது, சில இடங்களில் தவறு செய்வேன். எனவே மதுரை சிஸ்டர்ஸ் சீரியலில் எனக்கு டப்பிங் கொடுக்கும் நபருக்கும், எனக்கு இதற்கு முன்பு டப்பிங் கொடுத்த ரேணுகாவுக்கும் நன்றி. ஏன் இதை கூறுகிறேன் என்றால், நடிகையின் வெற்றிக்கு 50% காரணம் டப்பிங் கொடுப்பவர் கையில் தான் இருக்கிறது என்றார்.

நான்காவது நாள் ஷூட்டிங்
கேள்வி: நடிகை சாயாசிங்கிற்கு பதிலாக நீங்கள் நடிப்பது எப்படி பீல் பண்றீங்க ?
பதில்: நடிகை சாயாசிங் சிறந்த ஒரு நடிகை. அவர் நடித்த இந்த சீரியலில் நான் நடித்து வருகிறேன். இது எனது நான்காவது நாள் ஷூட்டிங். அவரது இடத்தை என்னால் நிரப்ப முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் 100 சதவீதம் உழைப்பில் நான் நடிக்கிறேன்.அது மட்டும் அல்லாமல் மதுரை சிஸ்டர்ஸ் சீரியலில் நடிக்கும் கடைக்குட்டி தங்கச்சி கேரக்ட்டர் ரொம்ப சுறுசுறுப்பு. இயக்குனர் சுரேஷ் ரொம்ப அமைதியானவர். அழகாக இயக்கி வருகிறார். சோ ரொம்ப சந்தோஷமா ஓவர்ஆல் னால இருக்கு .

சூர்யா அழகு
கேள்வி: உங்களுக்கு பிடித்த நடிகர், இசையமைப்பாளர் யார்?
பதில்: இசையமைப்பாளர்கள் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் இருவரையும் எனக்கு ரொம்ப பிடிக்கும். வெள்ளை மழை என்ற பாடல் தான் நான் முனுமுனுக்கும் பாடல். நடிகர் சூர்யாவை எனக்கு ரொம்ப பிடிக்கும். நல்ல அழகாக இருப்பார். மேலும் நடிகர் விஜய்சேதுபதியையும் ,நடிகை மஞ்சுவாரியரையும் பிடிக்கும் என்றார்.
இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலிலும் https://youtu.be/-xR9cBn-aOs இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம். பில்மிபீட் ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் வினோத், நடிகை ஸ்ருதி லட்சுமி இன்னும் நிறைய விஷயங்களை ஸ்வாரசியமாக பேசி உள்ளனர். மறக்காமல் முழு வீடியோவையும் பாருங்கள்.