twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விஜய் ஆண்டனிக்கு மாஸ் ஹீரோ அந்தஸ்தை 'தமிழரசன்' கொடுக்கும்... இயக்குனர் நம்பிக்கை

    By
    |

    ரிலீஸுக்கு ரெடியாகிவிட்டது விஜய் ஆண்டனியின் 'தமிழரசன்'. படத்தை இயக்கி இருக்கும் பாபு யோகேஸ்வரன், பத்திரிகையாளர். சின்னத்திரை வசனகர்த்தா. இதற்கு முன் ஜெயம் ரவி ஹீரோவாக நடித்த 'தாஸ்' படத்தை இயக்கியவர்.

    ''தாஸ் படத்துக்குப் பிறகு சினிமா வேண்டாம்னு டிவிக்கு போய்ட்டேன். பிறகு 2018-ல ஏன் மீண்டும் சினிமால முயற்சி செய்யக் கூடாதுன்னு தோணுச்சு. நான் ரெடி பண்ணி வச்சிருந்த கதைக்கு மெச்சூர்டான ஹீரோ தேவைப்பட்டது. அதனால, விஜய் ஆண்டனியை சந்தித்து கதை சொன்னேன். முதல் பாதிவரை கேட்டதுமே அவருக்குப் பிடிச்சிருந்தது. நல்லாருக்கு, கண்டிப்பா பண்ணலாம்னு சொல்லிட்டார். அப்படி ஆரம்பிச்சதுதான் இந்தப் படம்' என்கிறார் பாபு யோகேஸ்வரன்.

    அப்படியென்ன கதை?

    Vijay antonys Thamilarasan Movie director Babu yogeswaran interview
    விஜய் ஆண்டனி சஸ்பென்ட் ஆன போலீஸ்காரர். அவர் குடும்பத்துல ஒரு பிரச்னை வருது. அந்த பிரச்னை என்னங்கறது இப்போதைக்கு சஸ்பென்ஸ். படத்துல பார்க்கும்போது, அந்த பிரச்னையை எல்லாருமே, தங்களோட பொருத்திப் பார்த்துக்க முடியும். அது எல்லாருக்குமான பிரச்னைதான். அதை ஹீரோ எப்படி கையாள்றார் அப்படின்னு கதை போகும். 'பிச்சைக்காரனு'க்கு அப்புறம் விஜய் ஆண்டனிக்கு இது மாஸ் ஹீரோ படமா இருக்கும்.

    நீண்ட இடைவெளிக்குப் பிறகு சுரேஷ் கோபியை நடிக்க வச்சிருக்கீங்களே?

    Vijay antonys Thamilarasan Movie director Babu yogeswaran interview

    அவர், தமிழ்ல கடைசியா, ஐ பண்ணினார். மலையாளத்துலயும் 5 வருஷமா நடிக்கலை. இதுல அவர் கேரக்டர், ரொம்ப பவர்புல்ன்னு சொல்ல மாட்டேன். ஆனா, சவாலான கேரக்டர். இதை இமேஜ் உள்ள ஒரு நடிகர்தான் பண்ணணும்னு நினைச்சோம். அதனால அவரை தேர்வு செய்தோம். சிறப்பா நடிச்சிருக்கார்.

    இளையராஜா இசை ?

    Vijay antonys Thamilarasan Movie director Babu yogeswaran interview

    எல்லாரையும் போல எனக்கும் இளையராஜாவை பிடிக்கும். அவரோட ஒரு படத்திலயாவது வேலை பார்க்கணும்னு ஆசை இருந்தது. அது நிறைவேறி இருக்கு. வழக்கமா, சீக்கிரமா பின்னணி இசையை முடிச்சிடற இளையராஜா, இந்தப் படத்து ரீரெக்கார்டிங்குக்கு 20 நாட்கள் எடுத்திருக்கார். நிறைய லைவ் மியூசிக் பயன்படுத்தியிருக்கார். அவர் இசை படத்துக்கு பெரிய பலமா இருக்கும்னு நம்பறேன்.

    டைரக்டர் ராஜாவோ மகன் நடிச்சிருக்காரே...

    தாஸ் படம் பண்ணும் போதே டைரக்டர் ராஜா பழக்கம். அந்தப் படத்துக்குப் பிறகும் நட்பு தொடர்ந்தது. நான் சினிமாவை விட்டுட்டு போனதுல அவருக்கு வருத்தம் இருந்துச்சு. இருந்தாலும் அவர் மகனை இந்தப் படத்துக்குத் தேர்ந்தெடுத்தது, விஜய் ஆண்டனிதான்.

    சோனு சூட் வில்லனா?

    Vijay antonys Thamilarasan Movie director Babu yogeswaran interview

    வில்லன் அப்படின்னு இல்லை. சூழ்நிலைதான் எல்லாத்தையும் தீர்மானிக்குது. இந்தக் கதையிலயும் அப்படித்தான். படத்துல 12 சின்ன சின்ன கேரக்டர்கள் இருக்கு. எல்லாமே முக்கியமான கேரக்டர்களா இருக்கும். ஷூட்டிங்கை மே, ஜூன் மாசமே முடிச்சுட்டேன். சுரேஷ்கோபி, சோனு சூட் காம்பினேஷன் காட்சிகளுக்கு கால்ஷீட் கிடைக்கலை. அதுக்காக காத்திருந்ததால, இவ்வளவு நாளாயிருச்சு. பிப்ரவரியில ரிலீஸ் பிளான் இருக்கு.

    இப்ப வெப் சீரிஸ் பண்றீங்களாமே?

    Vijay antonys Thamilarasan Movie director Babu yogeswaran interview

    'காட்மேன்' அப்படிங்கற க்ரைம் தொடரை எடுத்துட்டிருக்கேன். வெப் சீரிஸ்ல சொல்ற விஷயத்தை சினிமாவுல சொல்ல முடியாது. இதுல அந்த சுதந்தரம் இருக்கு. ஆனா, குறைவான பட்ஜெட்லதான் இப்ப எடுக்கிறாங்க. பட்ஜெட் அதிகமாகும் இன்னும் பெரிசா இது வளரும்.

    English summary
    Vijay antony's Thamilarasan Movie director Babu yogeswaran interview
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X