»   »  ஊத்திக்கிட்ட "சுக்ரன்"!

ஊத்திக்கிட்ட "சுக்ரன்"!

Subscribe to Oneindia Tamil
விஜய்யை கெளர தோற்றத்தில் வைத்து அவரது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய சுக்ரன் படம் மாபெரும்தோல்வியடைந்துள்ளது.

இதை சந்திரசேகரே ஒப்புக் கொண்டார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

சமூக நோக்குடன் கூடிய கதையை வைத்துத்தான் சுக்ரன் படத்தை இயக்கினேன். படம் நல்ல படம்தான். ஆனால் இது தோல்விப்படம். பெரிய ஹிட் ஆகவில்லை.

சுக்ரனை தீபாவளிக்கே வெளியிட நினைத்தோம். ஆனால் முடியவில்லை. நாட்டில் நடப்பவற்றைத்தான் சுக்ரனில் காட்டினோம்.அதில் கற்பனை எதையும் கலக்கவில்லை. நீதிபதி ஒருவர் செய்யும் அட்டூழியம் குறித்த காட்சியை மிகவும் துணிச்சலாகஎடுத்தேன்.

அழுத்தமான கதையை இப்போது யாரும் பார்ப்பதில்லை, வரவேற்பதில்லை. அடிதடி, பாட்டு, பொழுதுபோக்குடன் கூடியபடங்களைத்தான் ரசிகர்கள் விரும்புகிறார்கள்.

கோவையில் சில தியேட்டர்ளில் சுக்ரன் படத்தை பார்க்க வந்த 18 வயதுக்கு குறைந்தவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.இது ஏன் என்பது புரியவில்லை. போலீஸ் அணுகுமுறை எனக்குக் கோபத்தைத் தரவில்லை (!!).

படத்தில் நடித்த புதுமுக நடிகர் (ரவி கிருஷ்ணா) மீது கோபம் வர வாய்ப்பில்லை, விஜய் எல்லோருக்கும் பிடித்தவர், அவர் மீதும்கோபம் வர வாய்ப்பில்லை. தமிழ்நாட்டில் 112 தியேட்டர்களில் இப்படம் ஓடுகிறது. ஆனால் கோவையில் உள்ள ஒரே ஒருதியேட்டல்தான் இப்படி நடந்துள்ளது.

விஜய்க்கு அரசியல் ஆர்வம் இல்லை. அவர் அரசியலுக்கு வருவாரா என்று எல்லோரும் கேட்கிறார்கள். எனக்கு அரசியல்தெரியும். ஆனால் எனக்கு அது பிடிக்கவில்லை. அதனால்தான் அரசியலுக்கு வரவில்லை. நானே வராதபோது, விஜய் நிச்சயம்வரவே மாட்டார்.

சினிமாவில் போட்டி அதிகமாகி வருகிறது. இதனால் எல்லா படத்தையும் ஒரு வெறியோடு அவர் செய்து வருகிறார். புதிதாகவரும் அனைத்து இளம் நடிகர்களையும் தனக்குப் போட்டியாக நினைத்து கடுமையாக உழைக்கிறார். சின்ன நடிகர்தானே என்றுநினைத்து யாரையும் அவர் குறைத்து மதிப்படுவதில்லை.

25 ஆண்டுகளுக்கும் மேலாக விஜயகாந்த் எனக்கு நல்ல நண்பர். அவர் முன்பே அரசியலுக்கு வந்திருக்க வேண்டும். அவரிடம்நல்ல தலைமைத்துவப் பண்பு உள்ளது. நல்லவர், சமூக அக்கறை கொண்டவர். அவரது அப்பா ஒரு காங்கிரஸ்வாதி. எதைச்செய்தாலும் தைரியமாக செய்வார். ஒரு கட்சி ஆரம்பித்தால் அதற்குத் தலைமை தாங்கக் கூடிய தகுதி அவரிடம் உள்ளது.

தமிழ்ப் படங்களுக்கு தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்று அரசியல்வாதிகள் ஆசைப்படுகிறார்கள். அவர்கள்நிர்பந்திக்கவில்லை. அதேசமயம் ஆங்கிலத்தில் பெயர் வைப்பதில் ஒரு தவறும் இல்லை. டைட்டிலைப் பார்த்துத்தான் மக்கள்படம் பார்க்க வருகிறார்கள்.

தமிழைக் கேவலப்படுத்த வேண்டும் என்று எந்த கலைஞனும், இயக்குனரும் நினைப்பதில்லை. சினிமாக்காரர்களுக்குத்தான்தமிழ் மீது அதிகம் பற்று உள்ளது. எனவே சினிமாக்காரர்களை சுதந்திரமாக படம் எடுக்க அரசியல்வாதிகள் விட வேண்டும்என்றார் சந்திரசேகர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil