»   »  சினிமா போரடிக்கிறது: விஜயகாந்த்

சினிமா போரடிக்கிறது: விஜயகாந்த்

Subscribe to Oneindia Tamil
வர வர சினிமா மீது எனக்கு மோகம் குறைந்து கொண்டே வருகிறது என்கிறார் நடிகர் விஜயகாந்த்.ஒரு வேளை தொடர் தோல்விகள் காரணமாக இருக்குமோ என்று நாமெல்லாம் கரெக்ட்டாக சந்தேகப்பட்டால் அது தப்பு!.

அவருக்கு அரசியல் ஆஜை வந்துவிட்டது. 24/7 நேரமும் அரசியல் கனவிலேயே லயிக்க ஆரம்பித்துவிட்டார் கேப்டன்.

பரணில் கிடந்த தனது கருப்பு ஜெர்க்கின், கிளவுஸை எல்லாம் தூசி தட்டி எடுத்து சிபிஐ அதிகாரி வேடத்தில் பேரரசு என்ற படத்தில் நடித்துவருகிறார் விஜய்காந்த். வழக்கம்போல் இதிலும் அவருக்கு புதுமுகம் தான் ஹீரோயின். பெயர் தாமினி.

அவரோடு டூயட் பாடிக்கொண்டே மிச்ச மீதி நேரத்தில் தீவிரவாதிகளைப் பந்தாடிக் கொண்டிருக்கும் விஜய்காந்த் தமிழ்ப் புத்தாண்டுதினத்தில் தனது அரசியல் பிரவேசத்துக்கு கிரஹப் பிரவேசம் நடத்துவார் பேசப்படும் நிலையில், ஊர் ஊராகச் சென்று ரசிகர்களை சந்தித்துகுஷிப்படுத்தி வருகிறார்.

அந்த வகையில் திருவண்ணாமலைக்கு சென்ற அவர், வழியில் வந்தவாசி பேருந்து நிலையத்தில் ரசிகர் மன்றக் கொடியை ஏற்றி வைத்துவேனில் இருந்தபடி ரசிகர்களிடையே பேசினார்.

அப்போது, எனக்கு வர வர சினிமா மீது மோகம் குறைந்து வருகிறது. இங்கு கூடியிருக்கும் கூட்டத்தைப் பார்க்கும்போது நமது ரசிகர்களின்ஒற்றுமை தெரிய வருகிறது. இது நீடிக்க வேண்டும்.

நான் எப்போதுமே மனதில் பட்டதைத்தான் பேசுவேன், பேசுகிறேன். என்னை நம்பி வரும் ரசிகர்களையும், அவர்களது குடும்பத்தினரையும்நான் ஒருபோதும் கைவிட மாட்டேன்.

நாம் அனைவரும் சகோதர உணர்வுடன் வாழ வேண்டும், நமக்குள் மோதல், பூசல் இருக்கக் கூடாது. கடந்த 50 வருடங்களாக தமிழகஅரசியல்வாதிகள் தங்களது பைகளை மட்டுமே நிரப்பிக் கொண்டு வருகின்றனர். மக்களை அவர்கள் ஒருபோதும் நினைத்துப்பார்த்ததில்லை.

எனது ரசிகர் மன்றக் கொடியில் உள்ள தீபம் புரட்சி தீபம், திருவண்ணாமலை கோவில் தீபம் போலத்தான் அதுவும் என்றார் விஜயகாந்த்.

விஜயகாந்த்தைக் காண ஆயிரக்கணக்கான ரசிகர்களும் பொது மக்களும் கூடியது குறிப்பிடத்தக்கது.

வந்தவாசிக்கு வரும் முன்பாக மும்னி, அம்மையப்பட்டு உள்ளிட்ட பல இடங்களில் ரசிகர் மன்றக் கொடிகளை விஜயகாந்த் ஏற்றி வைத்தார்.

பின்னர், ஆரணியில் அண்ணா சிலை அருகே வேனில் இருந்தபடி ரசிகர்களிடையே பேசிய விஜய்காந்த், உலகில் மொத்தமே இரண்டுஜாதிகள்தான். ஒன்று ஏழை, இன்னொன்று பணக்காரன்.

இதைத் தவிர வேறு எந்த சாதியும் கிடையாது, இருக்கக் கூடாது, சாதியைப் பற்றிப் பேசுவதே தவறு என நினைப்பவன் நான். ஆனால்சிலரோ, சாதி வெறியைத் தூண்டி விட்டு, சாதியின் பெயரால் பிழைப்பு நடத்தி வருகிறார்கள். (நம் நினைவுக்கு டாக்டர் ராமதாஸ் வருவதுஏனோ)

பெண் சிசுக் கொலையைத் தடுக்க வேண்டும், வரதட்சணையை ஒழிக்க வேண்டும். ஆண்கள் நினைத்தால் இவற்றை சாதிக்கலாம் என்றுதெளிவாகவே பேசிக் கொண்டிருந்த விஜய்காந்த் திடீரென ரஜினி பாணிக்கு மாறினார்.

மக்கள் ஆதரவும், கடவுள் ஆசியும் இருந்தால் நிச்சயம் நான் அரசியலுக்கு வருவேன். வர மாட்டேன் என்று நான் ஒருபோதும்சொன்னதில்லை. தப்பிச் செல்ல நான் நினைத்ததே இல்லை என்று ரஜினியை விடவும் தெளிவாகப் பேசிவிட்டுப் போனார்.

விஜயகாந்த்தின் இந்த பயணத்தின்போது அவரது மனைவி, மைத்துனர் சுதீஷ், ரசிகர் மன்ற மாநிலத் தலைவர் ராமு வசந்தன்உள்ளிட்டோரும் சென்றனர்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil