»   »  சந்திப்போமா?

சந்திப்போமா?

Subscribe to Oneindia Tamil

தேசிய அளவில் சிறந்த நடிகர் என்ற விருதைப் பெற வேண்டும் என்ற எனது நீண்ட நாள் லட்சியம்நிறைவேறியதால் ரொம்பவும் சந்தோஷமடைந்துள்ளேன். இயக்குநர் பாலாவுக்கு எனது நன்றிகள் என்று நடிகர்விக்ரம் கூறியுள்ளார்.

பிதாமகன் படத்தில் சித்தன் என்ற வெட்டியான் வேடத்தில் நடித்த விக்ரம், தேசிய அளவில் சிறந்த நடிகராக தேர்வுசெய்யப்பட்டுள்ளார். சேது படத்திலேயே அவருக்கு இந்த விருது கிடைத்திருக்க வேண்டும் என்று ஆதங்கப்பட்டசினிமா விரும்பிகளுக்கு இப்போது விக்ரமுக்கு கிடைத்திருக்கும் விருது சந்தோஷத்தைக் கொடுத்துள்ளது.

விக்ரம் இந்த விருதினால் உற்சாகமடைந்துள்ளார். விருது கிடைத்த செய்தி அறிந்ததும் இயக்குநர் பாலாவுக்குபோன் செய்தார். இந்த விருது உங்களுக்குத்தான் பாலா என்று விக்ரம் கூறியபோது, இல்லை, இல்லை,உங்களுக்குள் உறைந்திருந்த நடிப்பை மட்டுமே நான் வெளியே கொண்டு வந்தேன். விருதுக்கு முழு பொறுப்பும்நீங்கள்தான் என்று பாலா பாராட்டியுள்ளார்.

பின்னர் அந்நியன் படப்பிடிப்பில் இருந்த விக்ரம் செய்தியாளர்களைச் சந்தித்தார். மனம் நிறைய சந்தோஷத்துடன்செய்தியாளர்களிடம் மனம் விட்டுப் பேசினார்.

இது எனது நீண்ட நாள் லட்சியம். சேது படத்திலேயே எனக்கு விருது கிடைத்திருக்க வேண்டும் என்று கூறினார்கள்.அதை நானும் எதிர்பார்த்திருந்தேன். இருப்பினும் விருது கிடைக்கவில்லை. ஆனால் இப்போது பிதாமகனில்கிடைத்துள்ளது சந்தோஷமாக இருக்கிறது.

சேதுவையும், பிதாமகனையும் இயக்கியது பாலாதான் என்பது எனக்கு கூடுதல் சந்தோஷத்தைக் கொடுத்துள்ளது.இந்த விருதுக்காக பாலாவுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன்.

பிதாமகனில் எனக்கு விருது கிடைக்கும் என பாலா உறுதியாக கூறினார். மற்றவர்களும் அப்படியே கூறினார்கள்.ஆனால் கமல் சாருக்குத்தான் அன்பே சிவம் படத்திற்காக விருது கிடைக்கும் என நான் நினைத்தேன்.

பிதாமகனுக்காக நான் என்னை ரொம்பவே வருத்திக் கொண்டு நடித்தேன். சேற்றைப் பூசிக் கொண்டும், மண்ணைஉடலில் அப்பிக் கொண்டும், அசிங்கப்படுத்திக் கொண்டு நடித்தேன். ஷூட்டிங் ஸ்பாட்டில் அட்டை கடிக்கும்,பூரான் பக்கத்தில் உட்கார்ந்திருக்கும்.

சித்தன் கேரக்டர் முதலில் சில வசனங்களைப் பேசுவதாக பாலா அமைத்திருந்தார். ஆனால் அதை மாற்றிக்கொண்டு படம் முழுவதும் பேசாமல் வரும்படி செய்தார். அதுதான் எனக்குப் பலமாக அமைந்து விட்டது. வசனம்பேசி நடிப்பதை விட பேசாமல் நடித்தது எனக்கு பெரிய சவாலாக அமைந்தது.

காட்டுக்குள்தான் படப்பிடிப்பு நடந்தது. குதிரை மூலமாகவும்தான் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே போக முடியும்.கடுமையான கஷ்டங்களுடன் படப்பிடிப்பை நடத்தினார் பாலா.

சித்தன் கேரக்டரை மிக மிக கவனமாக செதுக்கினார் பாலா. சித்தன் எப்படி நடப்பான், என்ன செய்வான், அவனதுபாஷை என்ன என ஒவ்வொன்றையும் மிகுந்த விவாதத்திற்குப் பிறகு முடிவு செய்தார்.

இந்த விருது பாலாவுக்கும், எனக்கும் மிகுந்த சந்தோஷத்தைக் கொடுத்துள்ளது என்றார் விக்ரம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil