»   »  விக்ரம் விரும்பும் சானியா

விக்ரம் விரும்பும் சானியா

Posted By:
Subscribe to Oneindia Tamil

கோவையில் மாணவ, மாணவிகளுடன் ஜாலியாக கலந்துரையாடல் நிகழ்ச்சிகளில் பங்கேற்றார் நடிகர் விக்ரம்.

பல்வேறு கல்லூரிகளில் இருந்தும் சுமார் 2,500 மாணவ, மாணவிகள் கூடி இளமை கலாட்டா நடத்திக் கொண்டிருக்க அங்கு விக்ரமின்பேச்சுக்கு மாணவ, மாணவிகளிடம் இருந்து பயங்கர அப்ளாஸ்.

அவர் பேசுகையில்,

சச்சின் சென்சுரி போட்டவுடனே உடம்பெல்லாம் ஒரு சந்தோஷம் பரவுமே, அப்படித்தான் இருந்தது நான் ஜனாதிபதி அப்துல் கலாமின்கையில் இருந்து சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வாங்கியபோது. ஒரு தமிழர், அறிவாளி, விஞ்ஞானி கலாம் அவர்களுடையேகையால் விருது வாங்கியது மிகுந்த மகிழ்ச்சி தந்தது.

இந்த வயசு ஜாலியான வயசு. சந்தோஷமா பொழுதை போக்கிகிட்டே எதிர் கால லைபுக்கும் பிளான் பண்ணிருங்க. எப்பவுமே எதிர்காலம்மேலே ஒரு கண்ணு இருக்கட்டும் என்றார்.


பின்னர் மாணவர்களின் கேள்விகளுக்கு ஜாலியாக பதில்கள் தந்தார்.

கேள்வி: சீயான் விக்ரம், சாமி விக்ரம், ஓ போடு விக்ரம், காசி விக்ரம் இதில் உங்களுக்கு பிடிச்ச விக்ரம் யாரு?

விக்ரம்: என்னுடைய ஆளு சீயான் விக்ரம் தான் என்றார் (இதற்கு மாணவிகள் தரப்பில் பலத்த கரகோஷம் எழுந்தது).

கேள்வி: நிறைய படம் பண்ணலாமே? ஒரு நேரத்தில ஏன் ஒரு படம் மட்டும் பண்றீங்க?


விக்ரம்: எல்லாம் உங்களுக்காக தான். ஒரே நேரத்தில 3 படம் பண்ணினா உருவத்துல வித்தியாசம் காட்ட முடியாது. ஒரு படத்துலயும்ஒழுங்கா நடிக்க முடியாது. அதுக்குத் தான் ஒன் அட் எ டைம்.

கேள்வி: நீங்கள் எதிர்பார்த்து ஏமாந்த படங்கள்?

விக்ரம்: நிறைய... அதெல்லாம் வெளியில சொல்ல முடியாதே.

கேள்வி: சினிமாவில் நடிகர்கள் மட்டும் வருடக்கணக்கில் நிலைத்து நிற்கிறார்கள். ஆனா, நடிகைகள் புதுசு கண்ணா புதுசு என்று மாறிக்கொண்டே இருக்கிறார்களே ஏன்?

விக்ரம்: இந்தக் கேள்வியை ரொம்ப காலமா கேட்டுகிட்டே இருக்காங்க. பதில் தான் தெரியலை. ஒருவேளை இளைஞர்கள்புதுமுகங்களுக்காக ஏங்குவதால இருக்குமோ (இதற்கு மாணவர்களிடம் இருந்து பலத்த கரவொலி)

கேள்வி: உங்கள் வெற்றிக்கு திறமை, உழைப்பு, அழகு தான் காரணமா?

விக்ரம்: திறமை கொஞ்சம் உண்டு. கடின உழைப்பு அதிகம். ஆனா, இந்த அழகு சொல்றீங்களே.. அது மேக்-அப் மேனை பொறுத்தது!

கேள்வி: சினிமா தவிர வேறு என்ன பிடிக்கும்?

விக்ரம்: நல்ல சாப்பாடு, நல்ல தூக்கம்

கேள்வி: நொந்து போனது?

விக்ரம்: எனக்கும் பாலாவுக்கும் பிரச்சனை என்று செய்தி வந்தபோது மிகவும் வருந்தினேன்.

கேள்வி: யாருடன் ஒரு நாள் பொழுதைக் கழிக்க ஆசையா?

விக்ரம்: டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவுடன்

இந்துஸ்தான் கல்லூரியில் பார்வைற்றவர்களின் இசை நிகழச்சி ஒன்று நடந்தது. அதில் கலந்து கொண்டதோடு, அந்த இசைக்கலைஞர்களுக்கு பொன்னாடையும் போர்த்தி அவர்களுடன் பேசவும் செய்தார் விக்ரம்.

அப்போது தங்களுக்கு வீடு கட்டித் தருமாறு ஒரு பார்வையற்ற பெண் கேட்க, பார்வையில்லாதவங்களுக்கு நிச்சயம் என்னால் ஆன எல்லாஉதவிகளையும் செய்வேன் என்றார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil