For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்று சிவாஜியின் 13வது நினைவு நாள்... டுவிட்டரில் ‘மிஸ் யூ தாத்தா’ சொன்ன விக்ரம் பிரபு!

|

சென்னை: கர்ணன், கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், பாரதியார் என வரலாற்றுத் தலைவர்கள் யார் பெயரைக் கேள்விப்பட்டாலும் நமது மனக்கண்ணில் அவர்களது உருவமாக முதலில் தோன்றுவது செவாலியே சிவாஜியின் முகம் தான்.

அந்தளவுக்கு வித்தியாசமான நடிப்பில் அனைவரது மனதிலும் சிம்மாசனமிட்டு அமர்ந்தவர் நடிகர் சிவாஜி கணேசன். இன்று சிவாஜி என்ற அந்த மாபெரும் நடிகர் உடலால் இந்த மண்ணை விட்டு நீங்கிய நாள்.

ஆம், இன்று சிவாஜியின் 13வது நினைவு நாள். சினிமாவில் மூன்றாவது தலைமுறை நடிகராக நடித்துவரும் சிவாஜியின் பேரன் விக்ரம் பிரபு, தனது தாத்தாவை மிஸ் பண்ணுவதாக தனது டுவுட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

சொய்ங்க்... சொய்ங்க்....

சொய்ங்க்... சொய்ங்க்....

சிவாஜிகணேசனின் பேரனும், நடிகர் பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபு, கும்கி படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அறிமுக படத்திலேயே ஆவேசம் காட்டிய விக்ரம் பிரபு, இரண்டாவது படமான இவன் வேற மாதிரியில் வேறு விதமான நடிப்பைக் கொடுத்து அசத்தினார்.

அரிமா நம்பி...

அரிமா நம்பி...

இந்நிலையில், சமீபத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான அரிமா நம்பி படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால், அந்த வெற்றியின் மகிழ்ச்சி ஒருபுறமிருக்க, இந்த வெற்றிகளைப் பார்க்க தனது தாத்தா இல்லையே என வருந்துகிறாராம் விக்ரம் பிரபு.

தாத்தா துணை...

தாத்தா துணை...

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட் செய்தியில், தாத்தா எங்களை விட்டுப் போய் 13 வருடமாகி விட்டது. வருடம் கூட கூட அவரை நாங்கள் நிறையவே இழந்து வருகிறோம். மாபெரும் நடிகரான தாத்தா கடவுளாக எங்களுடன் எப்போதும் இருப்பார்' என அவர் தெரிவித்துள்ளார்.

நேரந்தவறாமை....

நேரந்தவறாமை....

மேலும், தனது தாத்தா குறித்தான நினைவுகளாக விக்ரம் பிரபு டைம்பாஸ் வார இதழுக்கு அளித்துள்ள பேட்டியில், ‘பொதுவா தாத்தா ஷூட்டிங் இல்லாத நாட்கள்ல கூட காலைல சீக்கிரமா எழுந்து, குளிச்சு ரெடியாகி எட்டு மணிக்கு ஹாலுக்கு வந்துடுவார்.

சாப்பாடு ரெடி...

சாப்பாடு ரெடி...

நாங்க மேல மாடில இருப்போம். கீழே இருந்து ஒரு உறுமல் கேட்கும். அப்படினா நாங்க கீழே சாப்பிட வரணும்னு அர்த்தம், வந்துடுவோம்.

சிலம்பம்...

சிலம்பம்...

அப்புறாம் தாத்தா வாக்கிங் போகும் போது வெங்கடாச்சலம்னு ஒரு மாஸ்டர் கூடவே இருப்பார், ஒருநாள் அவரைக் கூப்பிட்டு ‘இந்தப் பசங்கலுக்கெல்லாம் சிலம்பம் கத்துக் குடுறா'னு சொன்னாங்க.

ஒன்றா, இரண்டா...

ஒன்றா, இரண்டா...

மேலும், தாத்தா நடித்த படங்களில் பிடித்தது என்ற கேள்விக்கு, ‘உத்தமபுத்திரன், தெய்வமகன். ஒண்ணா, ரெண்டா சொல்லி முடிக்க முடியுமா என்ன?' எனக் கேள்வி எழுப்பியுள்ளார் விக்ரம் பிரபு.

நீங்காத நினைவுகள்...

நீங்காத நினைவுகள்...

உண்மை தான் இன்றைக்கும் சிவாஜியைப் பார்த்து, அவரது கட்டபொம்மன் வசனத்தைப் பேசி தான் நடிக்க வந்தேன் எனச் சொல்லும் நிறைய ஹீரோக்கள் இருக்கத் தான் செய்கிறார்கள்.

English summary
On the 13th death anniversary of the later, his grandson actor Vikram Prabhu remembers the late legend Sivaji Ganesan. The young star basking in success of his film Arima Nambi missed his grandfather and tweeted,” 13yrs since Thatha left us.Missing more as the years add up. #GreatestActorEver #Grandfather #HisGodlyPresenceRemains”.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more