»   »  சந்திப்போமா?

சந்திப்போமா?

Subscribe to Oneindia Tamil

தொடர்ந்து படங்களில் நடித்து வந்ததால் உடல் தளர்வடைந்துள்ள விக்ரம் ஒரு மாத காலம் ஓய்வெடுக்கத்திட்டமிட்டு வீட்டிலேயே இருந்தார்.

இந் நிலையில் உடலுக்கு புத்துணர்ச்சி பெற ரஜினி காந்த் செய்து கொள்ளும் கேரள மூலிகை சிகிச்சை பெறுமாறுசிலர் சொன்ன அட்வைஸைத் தொடர்ந்து திருச்சூருக்குச் சென்றுள்ளார் விக்ரம்.

தைக்காட்டுச்சேரி என்ற இடத்தில்உள்ள ஆயுர்வேத மருத்துவமனையில் தங்கியுள்ள விக்ரம் மூலிகை சிகிச்சை பெற்று வருகிறார்.

இதற்காக மருத்துவமனை வளாகத்திலேயே உள்ள காட்டேஜில் தங்கியிருக்கிறார் விக்ரம்.

கடந்த 4ம் தேதி ஆரம்பித்த இந்த சிகிச்சை இன்னும் ஒரு வாரம் தொடருமாம்.

இது குறித்து விக்ரம் கூறுகையில், பிதாமகன் சூட்டிங் முழுக்க முழுக்க காட்டிலேயே எடுக்கப்பட்டது. இதற்காககடுமையாக உழைத்ததில் உடல் மெலிந்துவிட்டது. கறுத்தும் போய்விட்டேன்.

அடுத்து நடிக்கவுள்ள அருள் படம் மிக வேகமாக ஆக்ஷன் படம். இதற்காக முறுக்கேற்ற வேண்டிய நிலையில்உள்ளேன்.

இதற்காகத் தான் உடலை சர்வீஸ் செய்து கொள்ள இங்கு வந்திருக்கிறேன் என்றார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil