»   »  வி(மலையாள)ராமன்

வி(மலையாள)ராமன்

Subscribe to Oneindia Tamil

பொய் நாயகி விமலா ராமன் இப்போது மலையாள ராமனாகி விட்டார்.

ஆஸ்திரேலியாவிலிருந்து கோலிவுட்டுக்குப் பறந்து வந்த பச்சைக் கிளி விமலா ராமன். விமலாவின் துடுக்குத்தனத்தைப் பார்த்து அசந்து போன கே.பாலச்சந்தர் தனது பொய் படத்தில் நாயகியாக்கினார்.

ஆனால் அந்தத் துடுக்குத்தனமே தமிழில் விமலா ராமனை ஊற்றி மூடி விட்டதாம். தடாலடியாக அவர் பேசுவதை, சம்பளம் உள்ளிட்ட விவகாரங்களில் கறாராக இருப்பதை விரும்பாத தயாரிப்பாளர்கள் விமலா பக்கம் திரும்பிக் கூட பார்ப்பதில்லை.

இத்தனைக்கும் கிளாமர் காட்ட தயார் என்று ஓப்பன் ஸ்டேட்மென்ட் விட்டும் கூட விமலா பக்கம் யாரும் திரும்பவில்லை. காத்திருந்து கடுப்பாகிப் போன விமலா, சட்டென்று மலையாளப் பக்கம் கடுதாசிப் போட்டுப் பார்த்தார்.

உடனே ரிப்ளை வந்தது. ஜாலியாகிப் போன விமலா கேரளாவுக்கு இடம் பெயர்ந்தார். இப்போது ஐந்து படங்களில் அம்மணி அசத்தி வருகிறாராம்.

மலையாளத்தில் எனக்கு நல்ல மரியாதையும், நல்ல படங்களும் கிடைத்துள்ளன. எனவே அங்கு இப்போது நடித்து வருகிறேன்.

தமிழ்ப் படத் தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் கூட விரைவில் என்னைப் புரிந்து கொண்டு தமிழில் நடிக்க கூப்பிடுவார்கள் என இன்னும் நம்புகிறேன். அழைப்பு வந்தால் நிச்சயம் தமிழிலும் நடிப்பேன். இப்போதைக்கு மலையாளத்தில் நான் பிசியாக்கும் என்று கூறுகிறார் விமலா.

மலையாளத்தில் நிறையப் படங்களில் நடித்து வந்தபோதிலும், தெலுங்குப் பக்கம் கவனத்தைத் திருப்பும் உடனடி எண்ணம் விமலாவிடம் இல்லையாம். அங்கு கிளாமர் ஜாஸ்தியாக உள்ளது. அந்த அளவுக்கு காட்டுவது சரிப்பட்டு வராது என்கிறார் காரணம் கேட்டால்.

அதுவும் சரிதான், தெலுங்கில் பக்திப் பாடலையே குத்துப் பாட்டாக ஜொலிக்க வைப்பவர்களாச்சே!

Please Wait while comments are loading...