»   »  மும்பை அழகிகள்.. பாயும் விந்தியா

மும்பை அழகிகள்.. பாயும் விந்தியா

Subscribe to Oneindia Tamil

மும்பை அழகிகள், மும்பை அழகிகள் என்று ஏன்தான் தமிழ் தயாரிப்பாளர்கள் இப்படி அலைகிறார்களோ என்று வெறுப்புடன்கேட்கிறார் விந்தியா.

சங்கமத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி பின்னர் சந்தடியே இல்லாமல் போன விந்தியா, பின்னர் விவேக்குக்கு ஜோடியாகநடிக்கும் அளவுக்கு ரேஞ்ச் இறங்கினார்.

சாராய கடையில் ஊத்திக் கொடுக்கும் மாயக்கா காரெக்டர், சிங்கிள் பாட்டுக்கு டான்ஸ், வயசுப் பசங்களை வளைக்கும்காரெக்டர் என எம்.டி.ஆர். கரம் மசாலா மாதிரியான ரோல்களைச் செய்து வந்த விந்தியா, பாண்டியராஜனுடன்ஜோடிபோட்டுவிட்டு கடைசியாக கண்ணம்மாவில் டிவி நடிகர் வெங்கட்டுக்கு ஜோடியாக நடிக்கும் லெவலுக்குப் போய் விட்டார்.

இடையில் இவரது ஹோட்டல் இரவில் ரூமைத் தட்டிய பைனான்சியரால் பிரச்சனை, வீட்டை விட்டு வெளியேறி மேனேஜருடன்தனியே வசிக்கும் விவகாரம் என விந்தியா விஷயத்தில் பரபரப்புக்கும் பஞ்சமே இருந்ததில்லை.

எது எப்படியோ கிடைக்கிற வாய்ப்பை கப்பென பிடித்துக் கொள்பவர் விந்தியா. கவர்ச்சி காட்டுவதில் எல்லை தாண்டியும்பார்த்துவிட்டார். வரைமுறை இல்லாமல் கிளர்ச்சியூட்டி நடித்தும் தனக்குரிய அங்கீகாரம் கிடைக்காமல் போனதில் ரொம்பவேவருத்தப்பட்டிருக்கிறார்.

தனக்குக் கிடைக்க வேண்டிய பல வாய்புகள் மும்பையிலிருந்து கோலிவுட்டில் குதித்த பல அழகிகளால்தான் பறிபோய்விட்டதாகபுலம்புகிறார் விந்தியா.

ஏங்க, தெரியாமத்தான் கேட்கிறேன், அந்த மும்பை அழகிகளிடம் அப்படி என்னதான் இருக்கு? கவர்ச்சி நிறைய இருக்குன்னுசொன்னா அதை நான் ஏற்க மாட்டேன்.

எங்க கிட்ட இல்லாத கவர்ச்சியா? இல்லை "எங்களோடதை" விட அவங்ககிட்ட கூடுதலாக "ஏதாவது" இருக்கா? இயக்குனரோடவிருப்பத்துக்கேற்ப நடிக்க நாங்க தயாராத்தான் இருக்கோம். ஆனாலும், எங்களை அம்போவென விட்டு விட்டு, இப்படி மும்பைபெண்களின் பின்னால் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் போவது நியாயமா, சொல்லுங்க என்று கேட்டு அலற வைக்கிறார்விந்தியா.

மும்பை அழகிகளிடம் பளபளப்பு நிறைய இருக்கலாம், ஆனா.. கொஞ்சமாவது நடிப்பு இருக்கா? ஆனால் என்னைப் போன்றதென்னிந்திய நடிகைகளிடம் அழகும், நடிப்பும் அபரிமிதமாவே இருக்கு. அதை ஏன் புரிஞ்சுக்க மாட்டேங்கறாங்க என்றுஆதங்கப்படும் விந்தியாவை கூல்படுத்தி டாப்பிக்கை மாற்றினால்,

மும்பை அழகி.. மும்பை அழகி என்று சொல்கிறார்களே.. அவங்களால ஏதாவது ஒரு படமாவது ஓடியிருக்கா சொல்லுங்க.. என்றுதிரும்பவும் அதே டாப்பிக்குக்கே போனார்.

பின்னர் தானே மனதை மாற்றிக் கொண்டு வேறு விஷயங்களைப் பேசினார். அப்படியாக கிடைத்த தகவல்கள்..

இப்போது விந்தியா தற்காப்புக் கலைகள் கற்றுக் கொள்ள ஆரம்பித்துள்ளாராம். ஒரு படத்திலாவது, விஜயசாந்தி ரேஞ்சுக்குநடிக்கனும்னு ஆசை சார் என்று அதற்கான காரணத்தையும் கேட்காமலேயே கூறுகிறார்.

மான் கொம்பு சண்டை (அட, அது இன்னும் இருக்கா?), சிலம்பம் ஆகியவை அவருக்கு அத்துப்படியாம். அத்தோடு, டான்ஸிலும்இப்போது ரொம்பவே தேறி விட்டேன் என்று போனஸ் தகவலையும் தூக்கிப் போடுகிறார்.

சரி, இப்ப என்ன பன்றீங்க விந்தியாவிடம் கேட்டால், என்ன கிண்டலா என்று சூரியப் பார்வை பார்த்த விந்தியா, நாலு படங்களில்நடிக்கிறேன்.

கன்னி நிலா, புதிய பார்வை ஆகியவை இதில் தமிழ் படங்கள். மற்ற இரண்டும் மலையாளம் என்று கூறிய விந்தியா, நம்மஇயக்குனர்கள், கதையை விட சதையை அதிகம் நம்புகிறார்கள், அதில் தவறில்லை.

ஆனால் தென்னிந்திய நடிகைகளுக்கு வாய்ப்பு கொடுங்கள்... என்று மீண்டும் பழைய டாப்பிக்குக்கே விந்தியா போக, இடையில்கிடைத்த சின்ன கேப்பில் நாம் எஸ்கேப்.

அய்யய்ய்யே... ஏம்ப்பா இப்படி பண்றீங்க.. விந்தியா ஏக்கத்தைப் புரிஞ்சுக்கோங்கப்பா!

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil