Vishal: விருதுகளும் எருமை சாணியும் ஒன்னு.. எனக்கு கொடுத்தால் குப்பை தொட்டியில் போடுவேன்.. விஷால் விளாசல்!
சென்னை: நடிகர், தயாரிப்பாளர், நடிகர் சங்க பொதுச் செயலாளர் என தென்னிந்திய சினிமாவில் முக்கியமான ஸ்டாராக உள்ளவர் விஷால். இவர் கடந்த பொங்கலின் போது, விஷாலின் மத கஜ ராஜா படம் வெளியானது. அப்போது பெரும் சர்ச்சைக்கு ஆளான விஷால் தற்போது அளித்துள்ள பேட்டியிலும் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
நடிகர் விஷால் ஆக்ஷன் கதாநாயகன் என்றாலும், அவரது வெகு சில படங்கள் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களாக உள்ளது. உதாரணத்துக்கு அவன் இவன், துப்பறிவாளன் உள்ளிட்ட படங்களை கூறலாம். பல படங்களில் விஷால் விருதுகளுக்குரிய நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
இப்படி இருக்கும்போது, அவர் அண்மையில் அளித்த பேட்டியில், நான் விருதுகளை நம்புவதில்லை. விருதுகள் பைத்திகாரத்தனம். 4 பேர் உட்கார்ந்து கொண்டு 7 கோடி மக்களுக்கு பிடித்த நடிகர், பிடித்த படம், பிடித்த துணை நடிகர் என்று தேர்வு செய்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? இதைச் சொல்லும் அவர்கள் என்ன மேதாவிகளா? எனக்கு இது புரியவில்லை. தேசிய விருதுகளையும் தான் நான் கூறுகிறேன். அங்கு கமிட்டி உள்ளது.

குப்பையில் போடுவேன்: ஆனால் சர்வே எடுக்க வேண்டும். மக்கள் கருத்துதான் முக்கியம். அதை விட்டுவிட்டு, 8 பேர் சேர்ந்து கொண்டு இவர்கள்தான் சிறந்த நடிகர், சிறந்த நடிகை என்று கூறுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. விருதுகள் மீது எனக்கு நம்பிக்கை இல்லை, அவை எருமை சாணிக்குச் சமம். நான் விருதுகள் பெற்றுள்ளேன், பெறவில்லை என்பது இங்கு முக்கியமில்லை. நான் அவற்றை நம்புவதில்லை. நான் சொல்கிறேன், நான் விருதுகள் வாங்குகிறேன் என்றால் அவற்றை போகிற வழியில் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு சென்றுவிடுவேன், அல்லது அந்த விருது தங்கமாக இருந்தால் அதை அடமானம் வைத்து, அந்த பணத்தில் அன்னதானம் செய்து விடுவேன்.
இந்த முறையே தப்பு: எனக்கு விருது எல்லாம் கொடுக்க வேண்டாம். மிகவும் தகுதியானவருக்கு கொடுங்கள். விருதுகள் குறித்து நான் நினைப்பதைப்போல மற்றவர்களும் நினைக்க வேண்டும் என்று இல்லை. அவர்களுக்கு விருதுகள் முக்கியமானதாக இருக்கலாம். 8 பேர் சேர்ந்து கொண்டு 8 கோடி மக்களின் விருப்பத்தை தேர்வு செய்யும் முறையையே நான் விரும்புவதில்லை" என்று தெரிவித்துள்ளார். விஷாலின் இந்த பேச்சு பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. மேலும் பலர் விஷாலின் இந்த காத்திரமான விமர்சனத்துக்கு பதில் பேசியும் வருகிறார்கள். அவருக்கு விருதுகள் கிடைக்கவில்லை என்பதால் அவர் இவ்வாறு பேசியுள்ளார் என்றும் பேசி வருகிறார்கள்.

மகுடம்: விஷால் தற்போது சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் அவர்களின் 99 வது படமான மகுடம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது மட்டும் இல்லாமல், இவர் நடிகை சாய் தன்ஷிகாவை அடுத்த ஆண்டு திருமணம் செய்து கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் அண்மையில் விஷாலின் 42வது பிறந்த நாளில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. ரசிகர்களும் திரைத்துறையினரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். இப்படி இருக்கும்போது விருதுகள் குறித்து அவர் பேசியுள்ளது பலருக்கும் ஷாக் கொடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications











