»   »  அஜீத் ரசிகர்கள் கொன்னுப்புட்டாய்ங்க...!- விவேக்குடன் ஒரு கலகல பேட்டி

அஜீத் ரசிகர்கள் கொன்னுப்புட்டாய்ங்க...!- விவேக்குடன் ஒரு கலகல பேட்டி

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரொம்ப நாள் கழித்து தலஅஜீத்துடன் நடித்துள்ளார் விவேக். அந்த அனுபவம் பற்றி இன்னும் யாரிடமும் பெரிதாக சொல்லிக் கொள்ளாமலிருக்கிறார் மனிதர்.

நம்மகிட்டேயாவது சொல்கிறாரா பார்க்கலாம்னு நினைத்து போன் செய்தால், "நீங்க தொடர்பு கொண்ட விவேக் தற்சமயம் பிசியாக மட்டுமல்ல, பசியாகவும் உள்ளார்" என்று தனது வழக்கமான பாணியில் ஆரம்பித்தார்.


நீங்க சாப்பிட்டு முடிச்சு ஃபிரியா இருக்கும் போது கூப்பிடவா சார் என்றேன்.


Vivek's interview

"அட விளையாட்டுக்கு சொன்னங்க.. பேசுங்க..." என்று சிரித்தார்... சிரிப்பின் சுவாரஸ்யத்தில் நலம் விசாரிப்பு முடித்து... கேள்விகளை ஆரம்பித்தோம்.


கேள்வி: "விவேக் டேட்ஸ் இல்லாத நிலையில்தான் விண்ணைதாண்டி வருவாயா படத்தில் விடிவி கணேஷ் நடித்தார்' என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் கவுதம் மேனன் கூறியுள்ளார். உங்களிடம் இதை பற்றி சொல்லியிருக்கிறாரா.. அந்தப் படத்தில் நடிக்க முடியாமல் போனது வருத்தப்பட்டதுண்டா...?


பதில்: விடிவி கணேஷ்க்கு நல்ல பெயர் கிடைத்தது மகிழ்ச்சிதான்... ஆனால் நான் நடிக்க முடியாமல் போனது எனக்கு வருத்தம் தான்... ஆனால், எப்போ கவுதம் என்னிடம் கேட்டார்??? ஒருவேளை நான் மறந்திருப்பேன்!


மின்னலே இயக்குனர் கவுதம் மேனன் இப்பொழுது ‘என்னை அறிந்தால்' இயக்குனர் கவுதம் இருவருக்கும் உள்ள வித்தியாசங்கள் ?


கேள்வி: மின்னலே- கௌதம் 13 வருடம் சின்னவர், புதியவர். பரபரப்பும், படபடப்பும் உள்ளவர்.


பதில்: என்னை அறிந்தால் - கௌதம் 13 வருடம் கடந்து வந்து இருக்கிறார்; பக்குவம் வந்திருக்கிறது. அனால் அதே அன்பு. ‘ஆடி' காரில் வருகிறார்.


கேள்வி: உங்க படங்களில் வழக்கமா வரும் கூலர்ஸ் , டி ஷர்ட் போட்ட ஹீரோவின் நண்பனா இல்லாமல் என்னை அறிந்தால் படத்தில் சற்று வேற கெட்-அப்ல வர்றீங்களே.... உங்க கதாப்பாத்திரத்தை பற்றி சொல்லுங்களேன்?


பதில்: இந்த படத்தில் ஒரு சீரியசான , குசும்புமிக்க கதாப்பாத்திரம்; சிரிக்கவும் வைக்கும், சிந்திக்கவும் வைக்கும். எடுத்த காமெடி காட்சிகளில் எத்தனை எடிட்டர் ஆண்டனியின் கத்திரிக்கு தப்பிக்கிறதோ... ஆண்டவனுக்குதான் வெளிச்சம்.


‘காதல் மன்னன்' ஷிவா, ‘என்னை அறிந்தால்' சத்யதேவ் உங்களுக்கு மிகவும் பிடித்த நண்பன் யார்?


ஷிவா - துடிப்பான ‘காதல்' மன்னன்
சத்யதேவ் - பொறுப்பான ‘காவல்' மன்னன்
இருவரும் நல்ல நண்பர்களே...


கேள்வி: Twitter , Facebookனு அஜித் சார் ரசிகர்கள் எங்கும் உள்ளார்கள். சமூக வலைதளங்களில் அவர்களுடன் ஏற்பட்ட ஏதேனும் ஒரு அனுபவம்


பதில்: ஐயோ... ‘தல', ‘தல' ன்னு அலறும் அவர்மேல் வெறிபுடித்த ரசிகர்கள். நான் என்னை அறிந்தால் நடிக்க தொடங்கியதில் இருந்து, ‘என்ன கதை ?', ‘ தல எப்படி இருக்கார்?னு கேட்டே கொன்னுப்புட்டாய்ங்க... பாசக்கார பசங்க...


கேள்வி: இருவார்த்தைகளில் திரிஷாவை பற்றி கூறுங்களேன்.


பதில்: இனிமை, பெண்மை - திரிஷா


கேள்வி: அனுஷ்காவை பற்றி இருவார்த்தைகளில் கூறுங்களேன்.


பதில்: அழகு, அறிவு - அனுஷ்கா


கேள்வி: தீவிர பெரியாரின் கொள்கையை பேசிய நீங்கள்... இப்பொழுது பாபா வின் தீவிர பக்தன் மாறியுள்ளீர்களே?


பதில்: பெரியாரின் சாதி ஒழிப்பு , பெண் கல்வி, மூட நம்பிக்கை போன்றவற்றை படங்களில் சொல்லி இருக்கிறேன். முரட்டுதனமான, முட்டாள் தனமான மதம் வேண்டாம் என்கிறேன் அவ்வளவுதான்.


என்னை அறிந்தால் படத்தில் உங்க கேரியரில் எவ்வளவு முக்கியமானதாக இருக்கும்?


ஷூட்டிங்கில் எடுத்ததெல்லாம், படத்தில் இருந்த எடுத்துவிடாமல் வைத்தால்... என் கேரியரில் முக்கியமான படமாய் இருக்கும். அஜித்தின் அன்புக்கு நன்றி...!

English summary
Actor Vivek's interview about his experience in Yennai arinthaal.

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil