twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நம்ம பிரச்சனைகளுக்கு நாம் தான் பொறுப்பு..வெற்றிமாறன் தெரியாமல் எதுவும் கூற மாட்டார் திவ்யா துரைசாமி!

    |

    சென்னை: மலர் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் பாலுமகேந்திரன் பட்டறையில் இருந்து வந்த இயக்குநர் மணிசேகர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சஞ்ஜீவன்.

    பில்லியர்ட்ஸ் விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் நடிகர் வினோத் லோகிதாஸ், நடிகை திவ்யா துரைசாமி நடித்துள்ளனர்.

    இந்நிலையில் நடிகை திவ்யா துரைசாமி நமது பிலீம்பீட் சேனலுக்கு அளித்த சிறப்பு பேட்டியை இங்கு காணலாம்.

    விஜய் பட இயக்குநருடன் கூட்டணி வைக்கும் யோகி பாபு… ஹீரோவாக அடுத்த அவதாரம்…விஜய் பட இயக்குநருடன் கூட்டணி வைக்கும் யோகி பாபு… ஹீரோவாக அடுத்த அவதாரம்…

    சரியான உச்சரிப்பு

    சரியான உச்சரிப்பு

    கேள்வி: உங்களுக்கு பிடித்த தமிழ்மொழி குறித்து ....

    பதில்: பொதுவாக தமிழில் சரியான உச்சரிப்புடன் நாம் பேசினால் அது அழகாக இருக்கும். இன்னும் சொல்லப்போனால் இன்பத்தேன் வந்து பாயுது காதினில் என்பது போன்று அமையும்.

    முதல் புகைப்படம்

    முதல் புகைப்படம்

    கேள்வி: உங்களை குறித்து வருகின்ற விமர்சனங்களை நீங்கள் எவ்வாறு எடுத்துக் கொள்கிறீர்கள்?

    பதில்: என்னுடைய பாசிட்டிவ், நெகட்டிவ் விமர்சனங்களை நான் சிரித்துக் கொண்டே ஏற்றுக் கொள்வேன். என்னுடைய சிரிப்பு எல்லோருக்கும் பிடிக்கும். எனது நண்பர் ஜவஹர் எடுத்த முதல் புகைப்படம் தான் எனக்கு பிடித்த புகைப்படம். தற்போது நிறைய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். பா.ரஞ்சித் தயாரிப்பு நிறுவனத்தில் ஒரு படத்தில் நடிக்கிறேன்.

    எனது கண்கள்

    எனது கண்கள்

    கேள்வி: நீங்கள் யாரை போன்று இருப்பதாக கருதுகீறீர்கள்?

    பதில்: எனது கண்கள் நடிகை சமந்தாவின் கண் போன்று இருப்பதாக என்னுடைய முதல் குறும்படத்தின் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், சுசீந்திரன் ஆகியோர் என்னிடம் தெரிவித்தனர்.

    குறைகூறுவது முறையல்ல

    குறைகூறுவது முறையல்ல

    கேள்வி: நீங்கள் இவ்வளவு தூரம் வந்ததற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?

    பதில்: என்னுடைய முடிவுகளை நான் தான் எடுக்கிறேன். முடிவு எடுப்பதற்கு முன்பு அனைவரிடமும் கருத்து கேட்பேன். கடைசியில் நான் தான் முடிவு எடுப்பேன். அதனால் ஏற்படக்கூடிய பிரச்னைகளுக்கும், விளைவுகளுக்கும் நான் தான் பொறுப்பு. மற்றவர்களை குறைகூறுவது முறையல்ல. அது தான் என்னை ஓட வைக்கிறது என்றார்.

    நடிகை த்ரிஷா அழகு

    நடிகை த்ரிஷா அழகு

    கேள்வி: பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் உங்களை கவர்ந்த கதாபாத்திரம்?

    பதில்: பொன்னியின் செல்வன் நாவலை படித்தவர்கள் அனைவருக்கும் நந்தினியை தான் முதலில் பிடிக்கும். பின்னர் பூங்குழலி, குந்தவை ஆகியோரை பிடிக்கும். என்னை பொறுத்தவரை பொன்னியன் செல்வன் படம் பார்த்தவுடன், குந்தவையாக நடித்த த்ரிஷாவை தான் பிடித்திருந்தது. ஆனால் எனது பார்வையில் குந்தவையாக நடிகை அனுஷ்கா நடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். பொன்னியின் செல்வன் படத்தில் நடிகை த்ரிஷா அழகாக இருக்கிறார். இன்னும்சொல்லப்போனால் பொன்னியின் செல்வன் புரோமோஷன் மூலமாக சோஷியல் மீடியாவில் அதிகமாக டிரெண்ட் ஆனவர் நடிகை திரிஷா மட்டுமே

    நிறைய புத்தகம் படிப்பவர்

    கேள்வி: ராஜராஜசோழன் எந்த மதத்தை சேர்ந்தவர்? உங்கள் கருத்து என்ன?

    பதில்: நான் படித்தவரைக்கும் ராஜராஜசோழன் காலத்தில் இந்து மதம் என்பது கிடையாது. சைவம், வைணவம், சமணம் மட்டும் தான். அப்படியிருக்கும் பட்சத்தில் இராஜராஜ சோழனை எப்படி இந்து மதத்திற்குள் கொண்டு வர முடியும். இயக்குநர் வெற்றி மாறன் தெரியாமல் எதுவும் கூற மாட்டார். ஏனென்றால் அவர் நிறைய புத்தகங்களை படிப்பவர் என்றார். இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலிலும் https://www.youtube.com/watch?v=Y2dj5YpYHZE இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம்.

    English summary
    Balu Mahendran Assistant Director Manisekhar directed a movie called Sanjeevan. This Movie is based on the billards game , and actor vinod lokidas & actress divya are playing a lead roles. In this case, actress Divya Duraisamy gave a special interview to our filmibeat channel here.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X