twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    யோகி பாபுவை 'சைகோ' என்று தவறாக நினைத்து அடித்த போலீஸ்

    By Siva
    |

    Recommended Video

    போலீசில் அடிவாங்கிய காமெடி நடிகர் யோகி பாபு- வீடியோ

    சென்னை: போலீசார் தன்னை சைகோ என்று தவறாக நினைத்து அடித்ததாக யோகி பாபு தெரிவித்துள்ளார்.

    கோலிவுட்டின் முன்னணி நகைச்சுவை நடிகராக உள்ளவர் யோகி பாபு. கை நிறைய படங்கள் வைத்துள்ளார். அவர் எவ்வளவு சம்பளம் கேட்டாலும் கொடுக்க தயாரிப்பாளர்கள் தயாராக உள்ளனர்.

    இந்நிலையில் சினிமா மற்றும் சொந்த வாழ்க்கை பற்றி யோகி பாபு பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது,

    அப்பா

    அப்பா

    ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள நசரத்பேட்டை என் சொந்த ஊர். நான் 10ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது என் அப்பா இறந்துவிட்டார். அத்துடன் படிப்பை நிறுத்திக் கொண்டேன். எனக்கு ஒரு தம்பி, ஒரு தங்கை உள்ளனர். எனக்கு திருமணம் செய்ய பெண் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

    பெரிய

    பெரிய

    நான் சினிமாவில் இந்த அளவுக்கு வளர்வேன் என்று எதிர்பார்க்கவில்லை. பெரிய இடத்திற்கு வந்ததில் மகிழ்ச்சி. எனக்கு கவுண்டமணி, செந்தில் தான் மிகவும் பிடித்த நகைச்சுவை நடிகர்கள். செந்தில் என் மீது மிகவும் அக்கறை கொண்டவர். உனக்கு நல்ல நேரம் வந்துள்ளது, அதை சரியாக பயன்படுத்து என்று செந்தில் அறிவுரை வழங்கினார்.

    காதல்

    காதல்

    தற்போது என் கையில் 15 படங்கள் உள்ளன. என் வாழ்வில் இதுவரை காதல் வந்தது இல்லை. இந்த முகத்தை பார்த்தால் யாருக்காவது காதல் வருமா?. நான் கோடிகளில் சம்பளம் வாங்குவதாக வதந்தி பரவியுள்ளதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. நான் நியாயமான சம்பளத்தை தான் கேட்கிறேன்.

    சைகோ

    சைகோ

    சென்னையில் நிறுத்தி வைத்திருந்த கார்கள் மற்றும் 2 சக்கர வாகனங்களை எரித்துக் கொண்டிருந்த சைகோவை போலீசார் தேடிக் கொண்டிருந்த நேரத்தில் நான் நாடகம் ஒன்றில் நடித்துவிட்டு நள்ளிரவில் வீட்டிற்கு நடந்து சென்றேன். போலீசாருக்கு நான் தான் அந்த சைகோ என்ற சந்தேகம் ஏற்பட்டு என்னை பிடித்து விசாரித்தார்கள்.

    யோகி பாபு

    யோகி பாபு

    நான் நடிகர் என்று கூறியதை போலீசார் நம்பவில்லை. முதலில் ஒரு போலீஸ்காரர் என் கன்னத்தில் அறைந்தார். அதையடுத்து மற்றொருவர் என் கன்னத்தில் ஓங்கி அறைந்ததில் என் காது நரம்புகள் செயல்படாமல் போனது. வெகுநெரம் என்னை பிடித்து வைத்திருந்தனர். நான் சைகோ இல்லை என்ற நம்பிக்கை வந்த பிறகே என்னை விடுவித்தனர். அந்த சம்பவத்தை என் வாழ்நாளில் மறக்க முடியாது என்கிறார் யோகிபாபு.

    English summary
    Chennai police once mistook Yogi Babu for a pyscho who set vehicles on fire and slapped him really hard.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X