இந்தியன் 2 பட பணிகள் எப்போது தொடங்கும்? மவுனம் கலைத்து மனம் திறந்த கமல்ஹாசன்!

சென்னை: இந்தியன் 2 பட பணிகள் எப்போது தொடங்கும் என்ற கேள்விக்கு நடிகர் கமல்ஹாசன் பதிலளித்துள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் 1996ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான படம் இந்தியன். ஊழல், லஞ்சம் போன்ற சமூக பிரச்சனைகளுக்கு எதிராக தொடங்கப்பட்ட இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

பெரும் ஹிட்டான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமாக இந்தியன் 2 படம் தொடங்கப்பட்டது. இதில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், பிரியா பவானிசங்கர், சித்தார்த் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

கிரேன் சரிந்து விழுந்து பெரும் விபத்து

கிரேன் சரிந்து விழுந்து பெரும் விபத்து

இப்படத்திற்காக சென்னை ஈவிபி பிலிம் சிட்டியில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் படப்பிடிப்பு தளத்தில் கிரேன் சரிந்து விழுந்து பெரும் விபத்து ஏற்பட்டது. அதன்பிறகு படப்பிடிப்பு தற்காலிகமாக நிறத்தப்பட்டது.

கமலுக்கும் லைக்காவுக்கும் பிரச்சனை

கமலுக்கும் லைக்காவுக்கும் பிரச்சனை

பின்னர் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக லாக்டவுன் அமல் படுத்தப்பட்டதால் படப்பிடிப்பை மீண்டும் தொடங்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனத்துக்கும் கமலுக்கும் இடையே பிரச்சனை என கூறப்பட்டது.

ஷங்கருக்கு எதிராக லைகா வழக்கு

ஷங்கருக்கு எதிராக லைகா வழக்கு

அதனை தொடர்ந்து கமலும் அரசியலில் பிஸியானார். பின்னர் இயக்குநர் ஷங்கர் இந்தியன் 2 படத்தை தொடங்காமல் தனது மற்ற பணிகளை தொடங்கியதை எதிர்த்து அவருக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது லைகா நிறுவனம்.

லைகா ஷங்கர் இடையே மோதல்

லைகா ஷங்கர் இடையே மோதல்

இதனால் ஷங்கருக்கும் லைகா நிறுவனத்துக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது. இந்நிலையில் லோகேஷ் கனகராஜின் விக்ரம் படத்திலும் நடிக்கிறார் கமல். இதன் படப்பிடிப்பு கடந்த மாதம் சென்னையில் தொடங்கியது. படப்பிடிப்பு தள போட்டோக்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

மவுனம் கலைத்த கமல்

மவுனம் கலைத்த கமல்

கமல் விக்ரம் படத்தில் பிஸியானதால் இந்தியன் 2 படம் தொடங்குமா என ரசிகர்களுக்கு சந்தேகம் எழுந்தது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் இருந்து வந்த கமல்ஹாசன், அண்மையில் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் மவுனம் கலைத்துள்ளார் கமல்.

கூடிய விரைவில் முடிக்கப்பட்டுவிடும்

கூடிய விரைவில் முடிக்கப்பட்டுவிடும்

அதாவது இந்தியன் 2 படத்தின் 60 சதவீத காட்சிகள் முடிவடைந்துள்ளதாக நடிகர் கமல் ஹாசன் கூறியுள்ளார். இப்படத்தை சுற்றியுள்ள பிரச்சனைகள் கூடிய விரைவில் முடிக்கப்பட்டுவிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் 'இந்தியன் 2' பட பணிகள் ஆரம்பிக்கப்படும் என்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Recommended Video

Anniyan படத்தில் Vikram செய்த காரியம் தான் படத்தின் Highlight என்ன தெரியுமா? | Shankar
இயக்குநர் ஷங்கர் பிஸி

இயக்குநர் ஷங்கர் பிஸி

நடிகர் கமல்ஹாசனின் இந்த பதிலால் இந்தியன் 2 படத்தின் பணிகள் விரைவில் தொடங்கி விடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனிடையே இயக்குநர் ஷங்கர், அந்நியன் இந்தி ரீமேக் பணியில் இறங்கியுள்ளார். இதேபோல் தெலுங்கில் ராம்சரணை வைத்தும் படம் இயக்குகிறார் ஷங்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X