twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    புஷ்பா, கேஜிஎஃப்-2 படத்திற்கு டப்பிங் பேச கஷ்டப்பட்டேன்..பிரபல டப்பிங் ஆர்டிஸ்ட் சேகர் பேட்டி

    |

    சென்னை: சமீபத்தில் புஷ்பா,83 , 777சார்லி போன்ற படங்களுக்கு டப்பிங் கொடுத்தது தான் மிகவும் சவாலானது என்று டப்பிங் ஆர்ட்டிஸ்ட் பி.ஆர்.சேகர் தெரிவித்துள்ளார்.

    மேலும் அவர் கூறுகையில், தமிழ் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று கூறுவதை விட, என்னுடைய அடையாளம் தமிழ் தான் என்று கூறுவதே சிறந்தது என்றார்.

    83, தோனி, பாகுபலி, புஷ்பா, கேஜிஎப் போன்ற படங்களுக்கு டப்பிங் கொடுத்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் பி.ஆர்.சேகர், நமது பிலீம்பீட் வினோத்துக்கு அளித்த சிறப்பு பேட்டியை இங்கு காணலாம். .

    ரூட்டை மாற்றிய புஷ்பா பட இயக்குநர்... ஆகஸ்ட்டில் புஷ்பா 2 படத்தின் சூட்டிங் துவக்கம்! ரூட்டை மாற்றிய புஷ்பா பட இயக்குநர்... ஆகஸ்ட்டில் புஷ்பா 2 படத்தின் சூட்டிங் துவக்கம்!

     சில வார்த்தைகளுக்கு அழுத்தம் தேவை

    சில வார்த்தைகளுக்கு அழுத்தம் தேவை

    கேள்வி: தமிழ் ரசிகர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

    பதில்: கே.ஜி.எப். 2 படத்தில் நான் டப்பிங் பேசுவதற்கு வாய்ப்பளித்த Hombale நிறுவனத்திற்கும், இயக்குர் பிரசாந்த நீல் மற்றும் நடிகர் யாஷ்க்கும் எனது மனமார்ந்த நன்றி. 777சார்லி படத்தில் கதாநாயகன் தர்மாவிற்கு டப்பிங் பேச வாய்ப்பளித்த இறைவனுக்கு நன்றி. மேலும் குரல் என்பது பெற்றோர்கள் போட்ட பிச்சை என்று உருக்கமாக சொன்ன சேகர், மேலும் அவர் கூறுகையில், நான் முடிந்தவரைக்கும் கதாநாயகனுடைய ஒரிஜினல் குரலில் பேசுவதற்கு முயற்சி செய்வேன். அப்படி முயற்சி செய்யும்போது சில படங்கள் சரியாக அமைந்து விடும். அப்படி அமைந்த படங்கள் தான் 83, தோனி, பாகுபலி, புஷ்பா, கேஜிஎப். நான் பேசிக்கா தியேட்டர் ஆர்டிஸ்ட். ரசிகனாக நான், ஒரு நடிகர், ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும்பொழுது எதை செய்தால் நன்றாக இருக்குமோ அதை செய்வேன். தமிழ் ரசிகர்களுக்கு சில வார்த்தைகளுக்கு அழுத்தம் கொடுத்தால் அழகாக இருக்கும். ஒரு சில வார்த்தைகளை பேசினால் போதும், பஞ்ச் தானாக வந்து விடும் என்றார். தமிழ் ரசிகர்கள் நல்ல வசனங்களை , மனித உணர்வுகளை பிரதிபலிக்கும் நல்ல கதாபாத்திரங்களை ,மொழி ஆளுமையுடன் அழகாக கொடுப்பதை தான் மிகவும் எதிர்பார்க்கிறார்கள். முடித்த வரை அதை நான் செய்து வருகிறேன்.

     70 தடவை ரீடேக்

    70 தடவை ரீடேக்

    கேள்வி: டப்பிங் துறையில் நீங்கள் யாரை ரோல் மாடலாக ஏற்றுக் கொள்ளவீர்கள்?

    பதில்: எங்களுக்கு முன்பிருந்தவர்கள் எல்லோரும், அந்த காலக்கட்டத்தில் இன்டர்நெட், மீடியா போன்றவற்றின் வளர்ச்சி இல்லாமல் பல பேர் டப்பிங் துறையில் பல சாதனைகள் புரிந்து விட்டனர். அக்காலக்கட்டத்தில் தீனரட்சகர், சோமியா ஜூலியஸ் ஆகியோரின் டப்பிங் பார்த்து பிரமித்து போய் இருக்கிறேன். அப்பொழுது டப்பிங் செய்வதெல்லாம் லூப் சிஸ்டத்தில் தான். அதாவது ஒரு சீனை 5 லூப் ஆக கட் செய்வார்கள். ஒரு லூப்பில் 6 ஆர்ட்டிஸ்ட் இருப்பார்கள். 6 ஆர்ட்டிஸ்ட்டும் ஒரே மாதிரி டப்பிங் கொடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் 70 தடவை ரீடேக் வரும். அக்காலக்கட்டத்தில் கதாநாயகனுக்கு டப்பிங் கொடுப்பது மிகவும் கடினம். ஆனால் இப்பொழுது அப்படியில்லை. அவர்களுடன் எங்களை ஒப்பிடும்பொழுது, நாங்கள் ஒன்றும் சாதனை புரியவில்லை. எனது சீனியர்ஸ் எல்லாமே ரோல் மாடலாக ஏற்றுக் கொள்ள ஆசை படுகிறேன்.

     புஷ்பா படம் சவாலானது

    புஷ்பா படம் சவாலானது

    கேள்வி: நீங்கள் டப்பிங் கொடுத்த படங்களில் உங்களுக்கு சவாலான படம் எது?

    பதில்: என்னை பொறுத்தவரை எல்லா படங்களுக்கும் டப்பிங் கொடுப்பது என்பது சவாலானது. முதலில் கதாநாயகனின் குரலுக்கு பேச முயற்சி செய்ய வேண்டும். பின்பு எந்த மொழியாக இருந்தாலும் நம் மொழியாக பாவிக்க வேண்டும். கதாநாயகனின் இதழ் அசைவிற்கு ஏற்றால்போல் டப்பிங் பேச வேண்டும். என்னை பொறுத்தவரை சமீபத்தில் புஷ்பா, 777சார்லி போன்ற படங்கள் மிகவும் சவாலானது என்றார். புஷ்பா படத்தின் ஸ்லாங் மிகவும் வித்தியாசமானது மற்றும் சவாலானது தான்.

     வாழ்க்கை மீது நம்பிக்கை வரும்

    வாழ்க்கை மீது நம்பிக்கை வரும்

    கேள்வி: 777சார்லி படம் குறித்து நீங்கள் கூற விரும்பவது?

    பதில்: 777சார்லி படத்தில் நடிக்கும் ரக்ஷீத் ஷெட்டி மற்ற படங்களில் வரும் குரல் போன்று இருக்கக்கூடாது. மேலும் "அவனே ஸ்ரீமன் நாராயணா" படத்தில் ரக்ஷீத் ஷெட்டி பேசிய வாய்ஸ் இந்த படத்தில் தேவையில்லை. எனக்கு 777சார்லி படத்தில் வரும் தர்மாவின் குரல் தான் வேண்டும் என்று இயக்குனர் கிரண் கூறினார். படமும் சிறப்பாக வந்துள்ளது. பொதுவாக திரைப்படம் பார்த்து விட்டு வெளியே வரும்போது, ஏதாவது ஒன்று மனதோடு வந்தால் படம் வெற்றியடைந்ததாக கருதப்படும். 777சார்லி படத்தை பார்த்து விட்டு வெளியே வரும்போது வாழ்க்கை மீது நம்பிக்கை வரும். எனவே அனைவரும் 777சார்லி படத்தை தியேட்டரில் சென்று பாருங்கள் என்றார்.

     கபில்தேவ் இன்டர்வியூ

    கபில்தேவ் இன்டர்வியூ

    கேள்வி: 83 படம் குறித்து நீங்கள் கூற விரும்புவது?

    பதில்: 83 படத்தில் கபில்தேவ் கதாபாத்திரத்தில் ரன்வீர் நடித்தார். அவருக்கு நாங்கள் குரல் கொடுப்பதற்கு முன்னர் கபில்தேவ் இன்டர்வியூ நான் நிறைய பார்க்க வேண்டும் என்று டயலக் ரைட்டர் விஜயகுமாரிடம் தெரிவித்தேன். உங்களுக்கு எப்பொழுது திருப்தி வருகிறதோ, அப்போது டப்பிங் வைத்துக் கொள்ளலாம் என்றார்.அப்படி நிறைய விடீயோஸ் பார்த்து பார்த்து பேசிய டப்பிங் இன்று பலரால் பாராட்ட படுவது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.

     தமிழ் சந்தேகங்களுக்கு மதன்கார்க்கி மற்றும் விஜயகுமார்

    தமிழ் சந்தேகங்களுக்கு மதன்கார்க்கி மற்றும் விஜயகுமார்

    கேள்வி: தமிழில் உங்களுக்கு சந்தேகம் வந்தால் யாரை தொடர்பு கொள்வீர்கள்?

    பதில்: எனக்கு கடவுள் கொடுத்த வரப்பிரசாதம் என்னவென்றால் எனது தந்தை எனக்கு ஆசிரியராக அமைந்தது. அவருடன் இணைந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்துள்ளேன். மேடை நாடகங்களில் மூலமாக நான் தமிழ் கற்றுக் கொண்டேன். கடவுள் புண்ணியத்தால் தற்போது என்னை சுற்றியிருக்கும் டயலக் ரைட்டர் விஜயகுமார், மதன்கார்க்கி ஆகியோர் இருப்பதால் சந்தேகம் கேட்பது எளிது. தமிழ் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று கூறுவதை விட, என்னுடைய அடையாளம் தமிழ் தான் என்று கூறுவதே சிறந்தது. இந்திய மொழிகளில் அனைத்திலும் டப்பிங் பேசியுள்ளேன்.இருந்தாலும் தமிழ் தான் எனக்கு மிகவும் ஸ்பெஷல்.

     எங்களையும் வாழ விடுங்கள்

    எங்களையும் வாழ விடுங்கள்

    கேள்வி: டப்பிங் ஆர்ட்டிஸ்ட்களில் உங்களை கவர்ந்தவர் யார்?

    பதில்: நான் எப்போது டப்பிங் பேச ஆரம்பித்தேன் என்று நினைவில்லை. ஆனால் சிறு வயதில் பேசினேன். மிருகங்களை வைத்து "எங்களையும் வாழவிடுங்கள்" என்ற திரைப்படம் எடுக்கப்பட்டது. அதில் நான் குட்டி யானைக்கு டப்பிங் கொடுத்துள்ளேன்.மறக்க முடியாத டப்பிங் என் குழந்தை பருவத்தில் இது தான் . டப்பிங் துறைக்கு தற்போது இளைய தலைமுறையினர் நிறைய பேர் வந்து சாதனை படைத்து வருகின்றனர். குறிப்பாக அவென்ஞர்ஸ் படத்தில் நிறைய பேர் டப்பிங் செய்துள்ளனர். "ஸ்குய்ட் கேம்" படத்தில் வரும் தாத்தா ஒருவருக்கு நடிகர் நாசர் டப்பிங் பேசியது பார்த்து பிரமித்து போனேன் அவரிடமிருந்து நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன் என்றார்.இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலிலும், இந்த லிங்கை https://youtu.be/zwSJQph_qC0 கிளிக் செய்தும் காணலாம். பில்மிபீட் ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் வினோத், மற்றும் டப்பிங் கலைஞர் பி ஆர் சேகர் இன்னும் நிறைய விஷயங்களை ஸ்வாரசியமாக பேசி உள்ளனர். மறக்காமல் முழு வீடியோவையும் பாருங்கள்.

    English summary
    When will the trust on Life boost up says Dubbing Artist PR Shankar
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X