பிரகாஷ் ராஜ் ஏன் விவாகரத்து செஞ்சாரு.. அவரது மாஜி மனைவி குறித்து ஜெயந்தி கண்ணப்பன் சொன்னது என்ன?

சென்னை: பெண்கள் தங்கள் வாழ்க்கையை தன் கணவனுக்காகவும், குழந்தைகளுக்காகவும் தியாகம் செய்கிறார்கள்.

ஆண் பெண் இருவரும் விவாகரத்துக்குப் பின் தங்களது வாழ்க்கையை சீரமைத்துக் கொள்கிறார்கள். ஆனால் அடிப்படையில் விவாகரத்துக்குப் பின் பாதிக்கப்படுவது அவர்களின் குழந்தைகள் மட்டுமே என்று ஜெயந்தி கண்ணப்பன் கூறியுள்ளார்.

நடிகர் பிரகாஷ் ராஜ் வாழ்க்கை குறித்து ALS நிறுவனத்தின் ஜெயந்தி கண்ணப்பன் ரீவைண்ட் ராஜா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியதாவது:

பெண்கள் தியாகம் செய்கிறார்கள்

பெண்கள் தியாகம் செய்கிறார்கள்

கேள்வி: திருமண விவாகரத்து குறித்து நீங்கள் கூற விரும்புவது?

பதில்: இந்த தலைப்பில் நாம் பேசுவது மிகவும் அவசியமான ஒன்றாகும். ஏனெனில் இனிவரும் இளம் தலைமுறையினர் திருமண வாழ்க்கையை எப்படி சிறப்பாக கொண்டு செல்வது என்பது பற்றிய புரிதல் அவர்களுக்கு கிடைக்கும் என நான் நம்புகிறேன். எந்த துறையாக இருந்தாலும் ஆண்கள் வெளியில் செல்லும் போது ஏதாவது ஒரு விஷயத்தால் கவரப்பட்டு திருமண வாழ்க்கையை விட்டு விலகி வேறொரு வாழ்க்கையை தேர்ந்தெடுக்கிறார்கள். பெண்கள் தங்கள் வாழ்க்கையை தன் கணவனுக்காகவும், குழந்தைகளுக்காகவும் தியாகம் செய்கிறார்கள். ஆண் பெண் இருவரும் விவாகரத்துக்குப் பின் தங்களது வாழ்க்கையை சீரமைத்துக் கொள்கிறார்கள். ஆனால் அடிப்படையில் விவாகரத்துக்குப் பின் பாதிக்கப்படுவது அவர்களின் குழந்தைகள் மட்டுமே என்றார்.

சின்ன சலனம்... வாழ்க்கையை பாதிக்கிறது

சின்ன சலனம்... வாழ்க்கையை பாதிக்கிறது

கேள்வி: நடிகர் பிரகாஷ்ராஜ் அவரது முன்னாள் மனைவி லலிதா திருமண வாழ்க்கை குறித்து நீங்கள் கூற விரும்புவது?

பதில்: நடிகர் பிரகாஷ்ராஜ் மற்றும் லலிதா ஆகியோருக்கிடையேயான திருமண வாழ்க்கை ரொம்பவும் அழகானது. நடிகர் பிராகாஷ் ராஜ், லலிதாவை அவரது சகோதரி டிஸ்கோ சாந்தி வீட்டில் தான் சந்தித்தார். இருவர் வீட்டின் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. ஒரு ஆண்குழந்தையும் இரண்டு பெண் குழந்தைகளும் பிறந்தன. சினிமா துறையில் உள்ளவர்களின் வாழ்க்கையில் ஏதாவது ஒரு சின்ன சலனம் கூட அவர்களின் குடும்ப வாழ்க்கையை பெரிதும் பாதித்து விடுகிறது. அப்படித் தான் லலிதாவின் வாழ்க்கையிலும் நடந்தது. லலிதாவை பொறுத்தவரை விவாகரத்துக்குப் பின்னும் கூட தன் குழந்தைகளின் மீது நடிகர் பிரகாஷ்ராஜ்க்கு எல்லா உரிமையும் உண்டு. அதில் நான் எந்த விதத்திலும் இடையூறாக இருக்க மாட்டேன் என்று தான் சொல்லியிருக்கிறார். அதே போல் குழந்தைகள் இருவரும் வெளிநாடுகளில் படித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த பிரிவிற்குப் பிறகும் கூட லலிதா எந்த ஒரு இடத்திலும் பிரகாஷ்ராஜ் பற்றி எந்த ஒரு குற்றச்சாட்டும் சொன்னதில்லை. அவர் வளர்ந்த குடும்ப பின்னணி அப்படி, சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி வரும் வெளிமாநிலத்தவர்கள் அனைவரும் டிஸ்கோசாந்தி வீட்டில் தான் தங்குவார்கள். பழகுவதற்கு மிகவும் இனிமையான குடும்பம் அவர்களுடையது என்றார்.

ஆன்மீக பயணம்

ஆன்மீக பயணம்

கேள்வி: லலிதாவின் ஆன்மீக பயணம் குறித்து நீங்கள் கூற விரும்புவது?

பதில்: தற்போது லலிதா நிறைய ஆன்மீக பயணம் செய்து வருகிறார். நடிகை கோவை சரளாவுடன் இணைந்து நிறைய வடமாநிலங்களுக்கு சென்று வருகிறார். இது இயற்கையில் நடக்கும் விஷயம் தான். சினிமாத்துறையில் இருப்பவர்கள் ஒத்த சிந்தனை உள்ளவர்கள் ஒன்றிணைந்து செயல்படுவது மிகவும் நல்ல விஷயம் தான். லலிதா தற்போது நிறைய கோவில் தளங்களை பற்றிய வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அதில் அவருடைய திறமை நன்கு வெளிப்படுகிறது. அதில் இன்னும் சிறப்பாக செயல்பட என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறேன் என்றார்.

லலிதா நன்றாக கார் ஒட்டுவார். இன்னோவா காரைத் தனியாக அவர் ஓட்டி வரும் போது அவ்வளவு அழகாகவும், கம்பீரமாகவும் இருக்கும். ஆனால் கணவனை தக்க வைத்துக்கொள்ளும் சாமர்த்தியம் மட்டும் இல்லாமல் போய்விட்டது என நான் அவரைப் பார்க்கும் போது கிண்டலாக கூறுவேன் என்றார்.

மனமொத்த ஜோடிகள்

மனமொத்த ஜோடிகள்

கேள்வி: நடிகர் பிரகாஷ்ராஜை நீங்கள் சந்தித்த தருணம் குறித்து...

பதில்: சமீபத்தில் பிரகாஷ் ராஜை ஒரு திருமணத்தில் சந்தித்தேன். அவரும் லலிதாவை பற்றி பேசும் போது அவள் உலகத்தில் எங்கிருந்தாலும் சந்தோஷமாகத்தான் இருப்பாள். அவள் எண்ணமும் செயலும் எப்பொழுதும் அவளை சந்தோஷமாகத்தான் வைத்திருக்கும் என்றார். எனவே அவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்தாலும் மனமொத்த ஜோடிகள் தான் என்று கூறியுள்ளார்.

அடிப்படையில் காதல்

அடிப்படையில் காதல்

கேள்வி: சினிமாத்துறையில் திருமண வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள் என்று யாரை குறிப்பிடுவீர்கள்?

பதில்: சினிமாத் துறையில் எல்லாருடைய வாழ்க்கையும் இப்படி மாறுவதில்லை. அடிப்படையில் காதல் இருந்தால் அவர்கள் காலம் முழுவதும் சேர்ந்தே வாழ்வார்கள். சந்திரசேகர் - ஷோபா, தியாகராஜன் - சாந்தி, சிவாஜிகணேசன் - லட்சுமி போன்றோர் தங்கள் திருமண வாழ்க்கையில் வெற்றி கண்டவர்கள் என்று சொல்லலாம். இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலிலும் https://youtu.be/g0iMt1SF9Aw இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X