Don't Miss!
- Automobiles
7 வருசம் கழிச்சு பெட்ரோல்/டீசல் வாகனம் ஓட்டுபவர்களை எல்லாம் பூமர் அங்கிள்னு கூப்டுவாங்க! இப்பவே உஷாராகிடுங்க
- News
உயிர் துறந்த 135 பேர்.. நாட்டை உலுக்கிய குஜராத் பால விபத்து! ஒப்பந்ததாரருக்கு 7 நாள் போலீஸ் கஸ்டடி
- Finance
எகிறி அடித்த தங்கம் விலை.. வரி,வட்டி அதிகரிப்பால் ஏமாற்றம் கண்ட மக்கள்.. இனி குறையவே குறையாதா?
- Lifestyle
பிப்ரவரியில் நிகழும் 3 கிரக மாற்றங்களால், இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமானதா இருக்கப் போகுது...
- Technology
கம்மி விலையில் இந்தியாவில் அறிமுகமாகும் புதிய Motorola போன்: அறிமுக தேதி இதுதான்.!
- Sports
சுயநலமான கேப்டன்சியா??.. ஹர்திக் பாண்ட்யா மீது எழும் பரபரப்பு குற்றச்சாட்டுகள்.. என்ன நடந்தது?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
கார் இருக்குல்ல, எதுக்கு சைக்கிள போனீங்க...நெல்சனின் கேள்விக்கு விஜய்யின் 'நச்' பதில்
சென்னை : விஜய்யின் கலகலப்பான பேட்டியில், அவரை பல விதமான கேள்விகளை கேட்டு கலாய்த்துள்ளார் டைரக்டர் நெல்சன் திலீப்குமார். இதனால் விஜய் பேட்டி எப்போ ஒளிபரப்பாகும் என ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் ஏப்ரல் 13 ம் தேதி ரிலீசாக உள்ளது. இதற்கான ப்ரொமோஷன் வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது. பீஸ்ட் ப்ரொமோஷனின் ஆரம்பமாக டிரைலரை வெளியிட்டுள்ளது சன் பிக்சர்ஸ்.
10 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் பேட்டி.... சில மணிநேரங்களில் 10 லட்சம் வியூஸ்களை தாண்டிய ப்ரமோ!

பீஸ்ட் டிரைலர் சாதனை
ஏப்ரல் 2 ம் தேதி வெளியிடப்பட்ட, இரண்டு நிமிடம் 57 விநாடிகள் கொண்ட பீஸ்ட் டிரைலர் வெளியிடப்பட்ட 24 மணி நேரத்தில் 30 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது. பீஸ்ட் டிரைலர் உலக அளவில் டிரெண்டிங் ஆகி உள்ளது. இந்த டிரைலருக்கு தொடர்ந்து லைக்குகள் குவிந்து வருகிறது.

பீஸ்ட் ப்ரொமோஷன்
பீஸ்ட் ப்ரொமோஷனுக்காக படக்குழுவினர் பங்கேற்று பேட்டி அளித்த ஷுட்டிங் சமீபத்தில் நடைபெற்றது. விஜய் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த பேட்டி 4 பாகங்களாக எடுக்கப்பட்டது. இதன் முதல் பாகம் மட்டும் ஏப்ரல் 10 ம் தேதி இரவு 9 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. மற்ற 3 பாகங்கள் படம் ரிலீசான பிறகு வெளியிடப்பட உள்ளதாம்.

விஜய்யின் கலகல பேட்டி
ஏப்ரல் 10 ம் தேதியன்று நடிகர் விஜய்யை நெல்சன் பேட்டி எடுக்கும் வீடியோ ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. தலைவா படத்திற்கு பிறகு 10 ஆண்டுகள் கழித்து விஜய் டிவியில் தோன்றி பேட்டி அளிப்பது தொடர்பான ப்ரோமோக்களை சன் பிக்சர்ஸ் வெளியிட்டு வருகிறது. இந்த கலகலப்பான பேட்டியில் பலவிதமான கேள்விகளை கேட்டு விஜய்யை கலாய்த்துள்ளார் நெல்சன். இந்த ப்ரோமோக்களே லைக்குகளை அள்ளி வருகின்றன.

ஏன் சைக்கிள்ல போனீங்க
இன்று வெளியிடப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சிக்கான ப்ரோமோவில், விஜய், ஜாலியோ ஜிம்கானா பாடலை பாடி காட்டுகிறார். விஜய், விஜய்யை பேட்டி எடுத்தால் என்ன கேள்வி கேட்பார் என நெல்சன் கேட்க, விஜய் நக்கலாக அடுத்த கேள்விக்கு போகலாமா என கேட்கிறார். நெல்சனும் விடாமல், அது தான் 4 கார் இருக்குல்ல, ஏன் சைக்கிள் எடுத்துட்டு போனீங்க என கேட்கிறார். இதற்கு விஜய் சிரித்தபடியே, யோவ்...சைக்கிள் இருந்துச்சு எடுத்துட்டு போனேன் என நச்சுன்னு பதில் சொல்லி அசத்தி உள்ளார்.

கலக்கல் பேட்டியா இருக்கே
கடந்த ஆண்டு நடந்த தமிழக சட்டசபை தேர்தலில் ஓட்டுப் போடுவதற்கு விஜய் சைக்கிளில் வந்ததை நினைவில் வைத்து கேள்வி கேட்டுள்ளார் நெல்சன். அப்படியானால் இதுவரை விஜய்யிடம் ரசிகர்கள் கேட்க நினைத்த பல கேள்விகள் இந்த பேட்டியில் இடம்பெறும் என ரசிகர்கள் அதிக ஆவலுடன் உள்ளனர். ப்ரோமோவிற்கு விஜய்யின் சிரிப்பை பயங்கரமாக புகழ்ந்து தள்ளி வருகிறார்கள் ரசிகர்கள்.