twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இந்த படத்துக்கு ஏன் 'சபாபதி'ன்னு டைட்டில் வச்சோம்? மனம் திறக்கும் சபாபதி இயக்குனர் !

    |

    சென்னை : சந்தானத்தின் நடிப்பில் இயக்குனர் ஸ்ரீனிவாசராவ் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் சபாபதி. இதில் வித்யாசமான கதாப்பாத்திரத்தில் சந்தானம் நடித்துள்ளார்.

    Recommended Video

    இந்த படத்துக்கு ஏன் சபாபதி TITLE வச்சோம் ? | Director Srinivasa Rao Exclusive | Filmibeat Tamil

    இந்த படத்தில் நகைச்சுவையை மட்டுமே வெளிப்படுத்தாமல் உணர்வுபூர்வமான நடிப்பையும் வெளிப்படுத்தியுள்ளார் சந்தானம்.

    மாடர்ன் அவுட்பிட்டில் கொள்ளை அழகாய் சமந்தா... கோவா சர்வதேச விழாவில் அபாரம் மாடர்ன் அவுட்பிட்டில் கொள்ளை அழகாய் சமந்தா... கோவா சர்வதேச விழாவில் அபாரம்

    சந்தானம், ப்ரீத்திவர்மா, எம் எஸ் பாஸ்கர், சாயாஜி ஷிண்டே, மதுரைமுத்து என்ற பலமான நடிகர்கள் பட்டாளம் நடித்துள்ள இந்த படத்தின் இயக்குனர் ஸ்ரீனிவாசராவ் நமது தளத்திற்கு கொடுத்த கலகலப்பான பேட்டி இதோ,

    திக்குவாய் சந்தானம்

    திக்குவாய் சந்தானம்

    கேள்வி : வழக்கமான சந்தானத்த இதுல பாக்க முடியாதுன்னு சொல்றாங்களே உண்மையா ?

    பதில் : சந்தானத்த ஒரே மாதிரி பாத்துட்டு வேற மாதிரி இந்த படத்துல பார்க்கிராங்க மக்கள். அப்போ அது ஏமாற்றம் கிடையாது. இப்படியும் சந்தானத்தால நடிக்க முடியும்ன்னு காட்டி இருக்ககூடிய ஒரு உதாரணம் தான். நிறைய சுதந்திரம் கொடுத்தாரு சந்தானம், அவருக்கும் ரசிகர்களுக்கும், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், என் ஊர் மக்கள்-ன்னு அனைவருக்கும் நன்றிய சொல்லிக்கிறேன். என் ஊர் மக்கள், குடும்பம், எல்லாருமே ரொம்ப சந்தோஷப்பட்டாங்க. எனக்கு மிகப்பெரிய சப்போர்ட் பண்ணதே என் தாராபுரம் மக்கள் தான். அவங்களுக்கு மிகப்பெரிய நன்றி சொல்லிக்கிறேன்.

    எல்லாம் விதிப்படிதான்

    எல்லாம் விதிப்படிதான்

    கேள்வி : உங்களுக்கு விதி மேல நம்பிக்கை இருக்கா ?

    பதில் : இருக்கு. விதிய நம்புறவங்க, நம்பாதவங்கன்னு ரெண்டு வகை இருக்கு. நம்பாதவங்க விதிய வேற பேர்ல சொல்வாங்க. அவ்ளோதான் வித்யாசம். விதி என்பது அவரவர் பார்வையில் மாறுபடும் வேறுபாடும். சூழ்நிலை தான் விதி என்ற ஒன்றை மனிதன் நம்புவதும் நம்பாமல் போவதும் என்று மாறுகிறது. நல்லவன் வாழ்வான் நல்லவன் வாழ்ந்தாக வேண்டும் என்பது தான் அடிப்படை தேவையாக அனைவரும் விரும்புவது .அது தான் இந்த படத்திலும் சொல்லி உள்ளேன் .

    வித்யாசமான இசை

    வித்யாசமான இசை

    கேள்வி : படத்துல காமெடிக்கான, வழக்கமான சின்ன சின்ன ம்யூசிக் கூட இதுல இல்லயே??

    பதில் : இந்த படத்தோட ம்யூசிக் டைரக்டருக்கு ரொம்ப நன்றி சொல்லனும். சில இடங்கள் ல நான் போயி எதாச்சும் கரெக்‌ஷன் சொல்றப்ப. இல்ல சார், இது செட் ஆகாது. நீங்க சொல்றது தப்புன்னு சொல்வாரு. அவரோட படமா இத எடுத்து, உள்வாங்கி பண்ணாரு. சந்தானத்துக்கு தனி BGM, விதி க்கு தனி BGM, செண்டிமெண்ட் க்கு தனி, இப்படி பல கோணங்கள்ல வித விதமா குடுத்துருக்காரு.

    எப்படி பேர் வந்துச்சி

    கேள்வி : சபாபதின்னு எப்படி பேர் வச்சீங்க?

    பதில் : என்னுடைய ஊர் தாராபுரத்துல வசந்தா தியேட்டர்ன்னு ஒன்னு இருந்துச்சு. அங்க டீக்கடை கேண்டீன் வச்சிருந்தாரு எங்க அப்பா. அடிக்கடி அவர் கூட தியேட்டருக்கு போவேன். அப்போ, சபாபதின்னு வந்த பழைய படத்த பத்தி அடிக்கடி சொல்லிகிட்டே இருப்பாரு. அந்த பேருல ஒரு வைப்ரேஷன் இருக்கு. அதுல ஒரு இன்னொசண்ட் இருக்கு. அப்பவே அந்த பேர் எனக்கு பதிஞ்சிடுச்சு. அது ஒரு தலைப்பாவே இருந்துச்சு. ஆனா அதுக்கான கதை கிடைக்கல. ஒரு டைம் வரும் போது அது எல்லாமே ஒன்னு சேர்ந்துடுச்சு. இந்த படத்துக்கு சபாபதின்னே வச்சாச்சு.என்று மனம் திறந்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார் சபாபதி திரைப்பட இயக்குனர் ஸ்ரீனிவாச ராவ்.

    English summary
    Why We Choose Sabapathy as Movie Title Says Director Srinivasa Rao
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X