மெட்டி ஒலி பார்ட்– 2 வருமா?...நடிகர் விஷ்வாவின் மனம் திறந்த கலக்கல் பேட்டி!

சென்னை : தமிழில் இன்று வரை பல்வேறுவிதமான சீரியல்கள் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தாலும் இதுவரை மெட்டி ஒலி சீரியலின் சாதனையை எந்த சீரியலாலும் முறியடிக்க முடியவில்லை.

Recommended Video

'மெட்டி ஒலி 2 வருமா? ' Metti Oli Selvam Interview - Part 2 | Tamil Filmibeat

90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரிட் சீரியல்களில் ஒன்றாக இருந்த மெட்டி ஒலி சீரியல் கிட்டத்தட்ட 811 எபிசோடுகளை தொட்டு வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு இப்பொழுது மீண்டும் சில தொலைக்காட்சிகளில் மக்களின் பேராதரவுடன் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மெட்டி ஒலி சீரியலில் செல்வம் என்ற கதாபாத்திரத்தில் அனைவரையும் கவர்ந்த நடிகர் விஷ்வா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் மெட்டி ஒலி சீரியல் பற்றிய பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.

மெட்டி ஒலி

இப்போதுள்ள காலகட்டத்தில் திரைப்படங்களுக்கு இணையாக சீரியல்களும் பல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. ஆனால் 1990 மற்றும் 2000 ஆண்டுகளில் வெளிவந்த சீரியல்களை போல இப்பொழுது வெளிவரும் சீரியல்கள் எதுவும் மக்களின் மனதை தொட்டதாக தெரியவில்லை.

டிஆர்பியின் முதலிடம்

டிஆர்பியின் முதலிடம்

அதில் குறிப்பாக மெட்டி ஒலி என்ற சீரியல் இன்று வரை தமிழ் தொலைக்காட்சி வரலாற்றிலேயே அதிக டிஆர்பியை தொடர்ந்து கைப்பற்றிய சீரியல் என்ற பெருமையை பெற்றுள்ளது. தமிழைத் தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, பங்காளி ஆகிய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. 2002ல் ஒளிபரப்ப தொடங்கப்பட்டு 2004ஆம் ஆண்டு வரை கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு வந்த மெட்டிஒலி சீரியல் நாம் தினந்தோறும் பார்க்கக்கூடிய ஒரு சாதாரண குடும்பத்தை பற்றியதாக உருவாக்கப்பட்டிருந்தது.

ஐந்து பெண் பிள்ளைகள்

ஐந்து பெண் பிள்ளைகள்

இயக்குனர் திருமுருகன் இந்த சீரியலை இயக்கி இருக்க தில்லி குமார்,காவேரி, விஷ்வா,வனஜா,சேத்தன் ,போஸ் வெங்கட், காயத்ரி,உமா மகேஸ்வரி, ராஜ்காந்த்,திருமுருகன், தீபா வெங்கட், நீலிமா என பலர் நடித்திருந்தனர். ஐந்து பெண் பிள்ளைகளை தனியாளாக வளர்த்து ஆளாக்கி கல்யாணம் செய்து வைத்த அப்பாவை பற்றிய கதையாக வெளியாகி மாபெரும் ஹிட்டடித்தது. மாலை 7.30 மணி ஆனாலே "அம்மி அம்மி அம்மி மிதித்து" என்ற பாடல் தான் அனைவரது வீடுகளிலும் ஒலிக்கும் . குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த சீரியலை பார்க்க எந்த வேலையாக இருந்தாலும் அதையெல்லாம் விட்டுவிட்டு மெட்டி ஒலி சீரியலை முதலில் பார்த்து விடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். அந்த அளவிற்கு இந்த மெட்டிஒலி மிகவும் பிரபலமான ஒன்றாக இருந்தது.

செல்வம் என்ற கதாபாத்திரத்தில்

செல்வம் என்ற கதாபாத்திரத்தில்

டி ஆர் பி யில் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்த மெட்டி ஒலி சீரியலின் சாதனையை இன்றுவரை முறியடிக்க எந்த சீரியலாலும் முடியவில்லை. இன்றும் இதில் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரங்களைப் பற்றியும் ரசிகர்களை தூக்கத்தில் எழுப்பிக் கேட்டால் கூட அனைவருக்கும் சொல்லத் தெரியும் அந்த அளவுக்கு அனைவரது மனங்களிலும் நீங்கா இடம் பிடித்திருக்கும் இந்த சீரியலில் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தவர் நடிகர் விஷ்வா. நடிகர் விஷ்வா இதில் செல்வம் என்ற கதாபாத்திரத்தில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்க அனைவரும் இவரை தங்களது வீட்டுப் பிள்ளையாக பாவிக்கத் தொடங்கினர் .

ஒரே நேரத்தில் 6 சீரியல்களில் நடித்தேன்

ஒரே நேரத்தில் 6 சீரியல்களில் நடித்தேன்

எந்த நிலை வந்தாலும் எப்பேர்ப்பட்ட சூழ்நிலை என்றாலும் அண்ணனின் பேச்சுக்கு மறுபேச்சு பேசாமல் செய்யக்கூடிய கண்ணியம் மிக்க பணிவு மிக்க தம்பியாக செல்வம் அசத்தியிருப்பார். அதனாலேயே இவரை அனைவருக்கும் பிடித்துப் போக மெட்டி ஒலி சீரியலைத் தொடர்ந்து மேலும் 6 சீரியல்களில் ஒரே நேரத்தில் நடித்து வந்தார் . மாங்கல்யம், மெட்டிஒலி, அலைகள், அப்பா, அன்பு மனம், என தொடர்ந்து ஒரே சமயத்தில் 6 சீரியல்களில் நடித்து வந்த நடிகர் விஸ்வா தற்பொழுது அளித்த பேட்டி ஒன்றில் மனம் பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

அருவருப்பாக உள்ளது

அருவருப்பாக உள்ளது

அதில் குறிப்பாக மெட்டி ஒலி சீரியலின் கதை மிகச் சிறப்பாக இருந்தது. இயக்குனர் திருமுருகன் மிகச் சிறப்பாக அதை வடிவமைத்து இருப்பதனாலேயே மக்களால் மிக எளிதில் மெட்டி ஒலி சீரியல் உடன் ஒன்ற முடிந்தது. ஆனால் இப்பொழுது வரும் சீரியல்கள் அப்படி கிடையாது. மிகச்சிறிய கதையை வைத்துக்கொண்டு அதிக எபிசோடுகளை ஓட்ட வேண்டும் என்பதற்காகவே தேவையில்லாத காட்சிகளை வைத்து சுவாரஸ்யத்தை குறைக்கின்றன. இதனாலேயே மக்கள் மத்தியில் அவை முழுமையாக சென்றடைய முடியவில்லை . மேலும் ரொமான்ஸ் காட்சிகள் என்ற பெயரில் வைக்கப்படும் சில காட்சிகள் பார்க்கவே அருவருப்பாக உள்ளது.

ஃபேவரைட் ரோலாக

ஃபேவரைட் ரோலாக

வீட்டில் உள்ள குழந்தைகள் உட்பட பலரும் பார்ப்பதால் அவை குழந்தைகளையும் மிக எளிதில் பாதிப்படையச் செய்ய வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது. இப்பொழுது கூட நான் சென்னை, பெங்களூர், ஹைதராபாத்,மும்பை என எந்த ஒரு இடங்களுக்கு என்றாலும் இன்றும் அனைவரும் என்னை மெட்டி ஒலி செல்வம் என அடையாளம் கண்டு புகைப்படங்களை எடுத்து கொள்வது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அந்த அளவிற்கு அந்த கதாபாத்திரம் ரசிகர்களுக்கு மட்டும் அல்லாமல் எனக்கும் ஃபேவரைட் ரோலாக இருந்து வருகிறது. இப்பொழுது நான் சீரியல்கள் மற்றும் திரைப்படங்கள் என எதிலும் நடிப்பதில்லை. அதற்குக் காரணம் இப்பொழுது சீரியல்களின் பிம்பமே மாறிவிட்டது.

நான் மூட்டை தூக்கினேனா

அதனாலேயே என்னைப் பற்றிய பல வதந்திகள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டே இருக்கின்றன . குறிப்பாக ஒரு சில யூடியூப் சேனல்கள் எனக்கு சீரியல்களில் வாய்ப்புகள் இல்லை என்பதால் நான் மூட்டை தூக்க சென்றுவிட்டதாக கப்சா விட்டு கொண்டுள்ளார்கள். அவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது ஒன்றே ஒன்றுதான் வீண் வதந்திகளை பரப்பாதீர்கள் இதனால் உங்களுக்கும் உங்கள் சேனலுக்கும் தான் கெட்ட பெயர். உங்களுக்கு என்னைப் பற்றிய வீடியோ போட வேண்டுமென்றால் ஒரே ஒரு போன் மட்டும் செய்யுங்கள் நானே இன்டர்வியூ கொடுக்கிறேன் உங்களுக்கு என்ன தகவல்கள் தேவையோ அதை நானே நேரடியாக வருகிறேன் அது உங்களது சேனலுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் முன்னேற்றமாகவும் இருக்கும் என அதே சிரித்த முகத்துடன் செம ஸ்வீட்டாக அந்த லாயக்கில்லாத யூடியூப் சேனலுக்கு அறிவுரையும் வழங்கிய விஷ்வா இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் செல்வாவாக வாழ்ந்து கொண்டிருக்க மீண்டும் இவரை சீரியல்களில் காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X