For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  பெண்களுக்கு பாதுகாப்பு ரொம்ப முக்கியம்... விழிப்புணர்வு தேவை - ரேஷ்மா எக்ஸ்க்ளூசிவ்

  |
  நான் 22 கல்யாணம் பண்ணிருக்கேன்| BIGG BOSS 3 RESHMA | V CONNECT | FILMIBEAT TAMIL

  சென்னை: பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் எதிரா நடக்குற பாலியல் வன்கொடுமைகள், பலாத்காரங்கள் நடக்காம பாதுகாக்க திட்டம் போடணும். பெண்களுக்கு கவர்ன்மெண்ட் சப்போர்ட் பண்ணணும், பாதுகாப்பு கொடுக்கணும் என்கிறார் நடிகை ரேஷ்மா. முதல்ல இதைப்பத்தின விழிப்புணர்வை நம்ம வீட்டுல இருக்குற பெண்களுக்கு நாம் கொடுக்கணும் என்று தன்னுடைய எண்ணங்களை ஃபிலிமிபீட் வாசகர்களுடன் பகிர்ந்துகொண்டார் ரேஷ்மா.

  ஒரு காலத்தில் ரேஷ்மா என்றால் யார் இந்த பொண்ணு என கேட்ட காலம் இருந்தது. ஆனால் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படம் வெளியான பிறகு தான் இவரை உலகம் முழுவதும் உள்ள தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவரும் அறிந்துகொண்டனர்.

  அந்த படத்தில் இவர் ஏற்று நடித்த புஷ்பா கதாபாத்திரம் மூலம் ஒரே நாளில் பிரபலமானார். இவர் கழுத்தில் பரோட்டா சூரி தாலி கட்டிய பிறகு நடக்கும் புஷ்பா புருஷன் காமெடியால், அதன் பின்பு ரேஷ்மா எங்கு சென்றாலும் புஷ்பா என்றுதான் அழைக்கின்றனர்.

  நிறைவேறாத ஆசைகளோடு வாழ்ந்து கழிக்கும் இரு உள்ளங்கள் தான் கேடிநிறைவேறாத ஆசைகளோடு வாழ்ந்து கழிக்கும் இரு உள்ளங்கள் தான் கேடி

  வாணி ராணி

  வாணி ராணி

  ரேஷ்மா முதன் முதலில் அறிமுகமானது சன் டிவியில் வெளியான வாணி ராணி சீரியலில் தாவணி கட்டிக்கொண்டு கிராமத்து பெண்ணாக நடித்தது தான். அதன் பிறகு தொடர்ந்து வம்சம், ஜீ தமிழ் டிவியில் மரகத வீணை, விஜய் தொலைக்காட்சியில் ஆண்டாள் அழகர் போன்ற சீரியல்களிலும் நடித்தார்.

  புஷ்பா புருஷன்

  புஷ்பா புருஷன்

  டிவி சீரியல்களில் நடித்துக்கொண்டிருக்கும் போதே வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில் நடித்த பிறகே ரேஷ்மா அதிக பிரபலமடைந்தார். இருந்தாலும் படவாய்ப்புகள் கிடைக்காததால், பிக் பாஸ் சீசன் 3ல் பங்கேற்றார். ஆனால், பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த சில நாட்களில், ரசிகர்களின் போதிய ஆதரவு இல்லாத காரணத்தினால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்.

  பெண்களுக்கு சப்போர்ட்

  பெண்களுக்கு சப்போர்ட்

  நான் உண்மையிலேயே ஒரு சிங்கப்பெண் தான். நான் இப்போ பெண்களுக்கு சப்போர்ட் பண்றது, அவங்களை மோட்டிவேட் பண்றது மாதிரியான நிறைய நிகழ்ச்சிகளில் கலந்துக்கிறேன். நிறைய காலேஜ்ல பேசுறதுக்கு கூப்பிடறாங்க. ஆனால், பெண்கள் காலேஜ்களுக்கு தான் அதிகமா சப்போர்ட் பண்றேன்.

  மோல்டு பண்ண முடியும்

  மோல்டு பண்ண முடியும்

  ஏன்னா, இந்த வயசுல இருந்து தான் பெண்களை நம்ம நல்லா மோல்டு பண்ண முடியும். பெண்கள் வீட்டுல இருந்து கிளம்பி காலேஜ் போய்ட்டு வர்றதுங்குறது ஒரு உலகம். அதேமாதிரி, வேலைக்கு போய்ட்டு வர்றதுங்குறது அது ஒரு தனி உலகம். அதைப் பத்தி எல்லாம் முன்னெச்சரிக்கையா ஒரு விழிப்புணர்வு (Awareness) கொடுத்தால் தான் எந்த மாதிரி நடந்துகிடணும்னு அவங்க கொஞ்சம் உஷாரா நடந்துக்குவாங்க.

  தைரியமும் துணிச்சலும் தேவை

  தைரியமும் துணிச்சலும் தேவை

  சில பெண்கள் ரொம்ப கன்சர்வேட்டிவான கட்டுப்பாடான குடும்பத்துல இருந்து வந்திருப்பாங்க. அவங்க அது வரைக்கும் அம்மா அப்பாவோட பாதுகாப்புல வளர்ந்திருப்பாங்க. ஆனா காலேஜ் முடிஞ்சதுக்கு அப்புறமும், வேலைக்கு போகும்போதும் அவங்க கூடவே வரமுடியாது. தனியா இந்த உலகத்துல வாழ்றதுக்கு அவங்களுக்கு துணிச்சலும் தைரியமும் வேணும். அதுக்குண்டான அவேர்னஸ் கொடுக்குறதுக்கு தான் உமன்ஸ் காலேஜுங்களுக்கு போய் கலந்துக்கிறேன்.

  ரம்யா கிருஷ்ணன்

  ரம்யா கிருஷ்ணன்

  எனக்கு சினிமாவில் இன்ஸ்பிரேசனானவங்கன்னா, ரம்யா கிருஷ்ணன் மேடம் தான் தனிப்பட்ட முறையில எனக்கு அவங்களை ரொம்ப பிடிக்கும். அவங்க கூட வம்சம் சீரியல்ல நடிச்சிருக்கேன். நான் அவங்களோட சாயல்ல இருக்கேன்னு கூட ரொம்ப பேர் சொல்றாங்க. அது எனக்கு கிடைச்ச ஆசீர்வாதமா தான் நான் எடுத்துக்கிறேன்.

  ஸ்க்ரீன்ல தூள் கிளப்புறாங்க

  ஸ்க்ரீன்ல தூள் கிளப்புறாங்க

  ஒரு வேளை அவங்களும் தெலுகு, நானும் தெலுகு. அதனால அப்பிடி சொல்லியிருக்கலாம். அதோட ரம்யா கிருஷ்ணன் மேடத்தோட பெர்சனல் கேரக்டர் எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனால், ஸ்க்ரீன்ல அவங்க பின்னி பெடலெடுத்துடுவாங்கங்குறது எல்லோருக்குமே தெரியும். பெர்சனலி ஷி இஸ் எ ஜெம் ஆஃப் பெர்சன்.

  பெண்களோட மைண்ட் செட்

  பெண்களோட மைண்ட் செட்

  எனக்கு அமெரிக்காவுல நிறைய ஃபிரண்ட்ஸ் இருக்காங்க. அவங்கள்லாம் நிறைய கஷ்டத்தை அனுபவிச்சிருக்காங்க. அவங்க பட்ட கஷ்டத்த பாக்கும்போது என்னோட கஷ்டமெல்லாம் ஒண்ணுமே இல்லேன்னு தான் நான் நினைப்பேன். அவங்க தனியா, தைரியமா இருந்து கஷ்டப்பட்டு வேலை செஞ்சிக்கிட்டு, அவங்களோட பசங்களையும் வளர்த்துக்கொண்டு போராடி வர்றாங்க. அதுக்கெல்லாம் காரணம் அவங்க மைண்ட் செட் தான்.

  எங்கே போனாலும் சேஃப்டி முக்கியம்

  எங்கே போனாலும் சேஃப்டி முக்கியம்

  ஒரு ஃப்ரீடம் இருக்குற இடத்துலதான் அந்த மாதிரியான மைண்ட் செட் நமக்கு கிடைக்கும். அதைப்பத்தி நான் பேசுறேன். பெண்கள் வெளியில எங்கே போனாலும் சேஃப்டி இருக்கணும். பெண்கள் எங்க போறாங்கங்குறது முக்கியம் கிடையாது. அவங்க போற இடத்துல சேஃப்டி இருக்காங்குறது தான் முக்கியம். நிறைய பேர் ஏன் கிட்ட கேக்குறாங்க.

  கோவிலுக்கா பஃப்புக்கா

  கோவிலுக்கா பஃப்புக்கா

  நிறைய பேர் நைட்ல வேலைக்கும் போறாங்க. பஃப்புக்கும் போறாங்க. அது கேள்வியே கிடையாது. எங்க போனாலும் பாதுகாப்பு இருக்காங்குறது தான் கேள்வி. போற இடத்துல பெண்களுக்கு சேஃப்டி ப்ரோவைட் பண்ணுதாங்குறது தான் முக்கியம். கோவிலுக்கு போறாமா இல்லை வேற எங்கயாவது போறாமாங்குறது கேள்வியே கிடையாது. போற இடத்துல சேஃப்டி இருக்கா அது தான் கேள்வியே.

  கவர்ன்மெண்ட் சப்போர்ட்

  கவர்ன்மெண்ட் சப்போர்ட்

  அதுக்கு தான் பெண்களுக்கு கவர்ன்மெண்ட் சப்போர்ட் பண்ணணும், பாதுகாப்பு கொடுக்கணும். பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் எதிரா நடக்குற பாலியல் வன்கொடுமைகள், பலாத்காரங்கள் நடக்காமா பாதுகாக்க திட்டம் போடணும். முதல்ல இதைப்பத்தின விழிப்புணர்வை நம்ம வீட்டுல இருக்குற பெண்களுக்கு நாம் கொடுக்கணும்.

  பெண்கள் பாதுகாப்பு

  பெண்கள் பாதுகாப்பு

  நம்ம பெண்களை ஒண்ணுமே தெரியாம பொத்தி பொத்தி வளர்த்து கல்யாணம் பண்ணி கொடுத்துடறோம். அந்த மாதிரி இருக்கக்கூடாது. பேரண்ட்ஸ் பொண்ணுங்க கிட்ட உக்காந்து பேசணும். டெய்லி என்ன நடக்குதுங்குறத பத்தி பேசணும்.மாடர்ன் திங்க்கிங் வந்தாதான் சமூகத்தில பொண்ணுங்களுக்கு சேஃப்டி வரும். அதுக்கப்புறமா தான் பெண்களோட பாதுகாப்பு சம்பந்தமா திட்டம் போடணும் என்றார் ரேஷ்மா.

  English summary
  Government support and protection for women. Plans to protect women and girls against sexual harassment and rape. Reshma Pasupuleti shared her thoughts with the readers of FilmiBeat that we should give awareness to our women in our home.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X