»   »  'ஜோக்கர்' மாதிரி ஒரு படத்தோடு வருவேன்- உலக சாதனை குறும்பட இயக்குநர் சதீஷ் குருவப்பன்

'ஜோக்கர்' மாதிரி ஒரு படத்தோடு வருவேன்- உலக சாதனை குறும்பட இயக்குநர் சதீஷ் குருவப்பன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : சினிமா எடுப்பவர்களுக்கான சமீபத்திய ஆண்டுகளின் அடையாள வடிவம் 'குறும்படம்'. இன்றைக்கு மாற்றுக் களத்தோடு திரைக்கு அறிமுகமாகிற புது இயக்குநர்கள் குறும்படங்களால் கவனிப்புப் பெற்றவர்கள்தான்.
சதீஷ் குருவப்பன் இதுவரை 14 குறும்படங்கள் எடுத்திருக்கிறார். அத்தனையும் சமூக நோக்கத்தோடு எடுக்கப்பட்ட குறும்படங்கள். இவர் இயக்கிய 'Mr.Cobbler' குறும்படத்தை ஃபேஸ்புக்கில் இதுவரை 12 கோடிப்பேருக்கும் மேல் பார்த்திருக்கிறார்கள்.

33 லட்சம் பேர் இந்தக் குறும்படத்தை லைக் செய்திருக்கிறார்கள். 27 லட்சம் பேர் இந்த குறும்பட வீடியோவை ஷேர் செய்திருக்கிறார்கள். வேறு குறும்படங்களுக்காக விருதுகளையும் வென்றிருக்கிறார்.

சமூக குறும்படங்கள்

சமூக குறும்படங்கள்

பெண்களுக்கு எதிரான வன்முறை பற்றிப் பேசும் 'SHE', எண்ணங்களே மகிழ்ச்சியைத் தீர்மானிக்கின்றன எனும் கான்செப்ட் கொண்டு எடுக்கப்பட்ட 'PHD' ஷார்ட் ஃபிலிம், சினிமா நடிகர்களுக்காக அடித்துக்கொள்ளும் ரசிகர்கள் ஒரு வன்முறைக்குப் பிறகு திருந்து வாழ்வது பற்றிய படமான 'வெறி',எல்லோரையும் நேசிக்கவேண்டும் எனும் கருத்தை வலியுறுத்துகிற 'விரும்புடா', முதியோர் இல்லங்களுக்கு அனுப்பும் மருமகள்களைப் பற்றிய 'அன்புள்ள அப்பா' என இவரது எல்லாப் படங்களுமே நல்ல சமுதாயக் கருத்தை வலியுறுத்துகின்றன.
குறும்பட இயக்குநர் சதீஷ் குருவப்பனிடம் தொடர்புகொண்டு பேசினோம்.

சதீஷ் குருவப்பன் - ஃப்ளாஷ்பேக் சொல்லுங்க..?

சதீஷ் குருவப்பன் - ஃப்ளாஷ்பேக் சொல்லுங்க..?

சொந்த ஊர் மதுரை. இப்போ சென்னையில ஐ.டி கம்பெனியில வேலை பார்க்குறேன். சினிமா மேலேயும் சமூகத்து மேலேயும் ரொம்ப ஈடுபாடு. சமூக நோக்கம் கொண்ட குறும்படங்கள் எடுக்கலாமேனு ஐடியா வந்துச்சு. வார விடுமுறை நாட்கள்ல குறும்படங்களைப் படம்பிடிச்சு வொர்க் பண்ணி வெளியிட ஆரம்பிச்சேன். நான் இயக்கியவற்றில் 12 படங்களில் நானும் நடிச்சிருக்கேன். என் நண்பர்கள், ஆபிஸ் மேட்ஸ், குடும்பத்தில் அம்மா, மாமனார், மாமியார் எல்லோரும் நடிச்சிருக்காங்க. என் மனைவி வாய்ஸ் ஆர்டிஸ்டா என் படத்திற்கு வொர்க் பண்ணிருக்காங்க. சுத்தி இருக்கிறவங்களை இணைச்சு நல்ல ஐடியாக்களை ஸ்கிரிப்டா வெச்சு குறும்படங்கள் எடுத்துக்கிட்டு இருக்கேன்.

'Mr.Cobbler' படம் இவ்வளவு பெரிய ரீச் ஆகும்னு நினைச்சீங்களா?

இவ்வளவு பெரிய ரீச் இருக்கும்னு நிச்சயமா எதிர்பார்க்கலை. முதலில் சிலர் பகிர்ந்துக்கிட்டு இருந்தாங்க. ஒரு ஃபேஸ்புக் பேஜில் என்கிட்ட அனுமதி வாங்கி இந்தக் குறும்படத்தை வெளியிட்டாங்க. அதுக்கு அப்புறம்தான் தாறுமாறா வியூவ்ஸ் அதிகரிக்க ஆரம்பிச்சது. இதுவரைக்கும் 12 கோடிப் பேருக்கும் மேல் இந்த ஷார்ட் ஃபிலிம்மை பார்த்திருக்காங்க. உலக ஃபேஸ்புக் வரலாற்றிலேயே எந்தக் குறும்படத்துக்கும் இந்தளவுக்கு வ்யூவ்ஸ் கிடைச்சதில்ல. இந்தச் சாதனைக்காக கின்னஸ் ரெக்கார்டுக்கு விண்ணப்பிச்சிருக்கோம்.

'மிஸ்டர். காப்ளர்' குறும்படத்தில் நடிச்ச செருப்புத் தைக்கும் தொழிலாளி உங்களுக்குத் தெரிஞ்சவரா?

'மிஸ்டர். காப்ளர்' குறும்படத்தில் நடிச்ச செருப்புத் தைக்கும் தொழிலாளி உங்களுக்குத் தெரிஞ்சவரா?

அந்த கேரக்டரில் நடிச்ச முனுசாமி மேடவாக்கத்தில் எங்கள் வீட்டுக்குப் பக்கத்துத் தெருவில் செருப்புத் தைக்கிறவர். இப்போவும் அங்கேதான் இருக்கார். அவரோட வாழ்க்கையில், அவரது தொழிலை உதாசீனப்படுத்துற பல மனிதர்களைப் பார்த்திருக்கார். அவரைப் போன்ற எல்லாத் தொழிலாளர்களுக்கும் நியாயம் செய்ற மாதிரி குறும்படம் எடுக்கணும்னு நினைச்சுத்தான் இதை எடுத்தேன். சாதாரண கருதான் என்றாலும் எளிமையா எல்லோருடைய மனதையும் ஒரு நிமிஷம் அசைச்சுப் பார்க்கணும்னுதான் இந்தப் படத்தை எடுத்தோம்.

உங்களுக்கு படம் எடுப்பதில் ஆர்வம் வந்தது எப்படி?

உங்களுக்கு படம் எடுப்பதில் ஆர்வம் வந்தது எப்படி?

நான் சின்ன வயசுல பள்ளிக்கூடத்துல நாடகங்கள்ல நடிச்சிருக்கேன். போட்டோகிராஃபியில் ரொம்ப ஆர்வம். பல இடங்களுக்குப் போய் சுத்தி போட்டோக்கள் எடுத்துட்டு வர்றதை பொழுதுபோக்கா வெச்சுருக்கேன். அப்படித்தான் ஷார்ட்ஃபிலிம் எடுக்குறதுலேயும் ஆர்வம் வந்துச்சு. காதல், நட்பு, ஃபேமிலி சென்ட்டிமென்ட் இப்படி இல்லாம சமூக மாற்றத்துக்காக எதையாவது நறுக்குனு சொல்றமாதிரி இருக்கணும்னு கான்செப்ட் வெச்சு எடுக்க ஆரம்பிச்சேன். ஒவ்வொரு படத்தையும் ஒரே நாள்ல ஷூட் பண்ணி முடிச்சிடுவோம். 'அன்புள்ள அப்பா' படம் மட்டும் கொஞ்சம் நீளமானதுங்கிறதால ரெண்டு நாள் எடுத்தோம்.

உங்களது குறும்படங்களுக்கான அங்கீகாரம்?

படம் பார்த்தவங்களோட பாராட்டுதான் எனக்கு அங்கீகாரம். பெண்களை ஈவ்-டீசிங் பண்றது, காதலிக்க ஒத்துக்கலைனா ஆசிட் அடிக்கிறது போன்ற விஷயங்களை வெச்சு SHE (Stop Harassment Everywhere) ஷார்ட் ஃபிலிம்ஸ் 3 பார்ட் எடுத்திருக்கேன். பெண்களுக்கு எதிரான வன்புணர்வை மையமாகக் கொண்ட மூணாவது பார்ட் இன்னிக்கு ரிலீஸ் பண்ணியிருக்கோம். SHE -ன் முதலிரண்டு பாகங்களைப் பார்த்துட்டு பல பெண்கள் கால் பண்ணி, படம் பார்க்கும்போதே அழுகை வந்துடுச்சுனு நெகிழ்ச்சியா சொன்னாங்க. இவைதான் எனக்குக் கிடைச்ச பெரிய அங்கீகாரம். 'குயவர்', 'ஜூலி' குறும்படங்களுக்கு இந்தோ - ரஷ்யன் அவார்டு கிடைச்சது. இன்னும் 'விரும்புடா' உள்ளிட்ட சில படங்களின் ஃபேஸ்புக் வியூவ்ஸ் ஒரு கோடியை நெருங்கிட்டு இருக்கு.

சினிமா துறையினரின் பாராட்டு?

சினிமா துறையினரின் பாராட்டு?

'திருடன் போலீஸ்' படத்தோட டைரக்டர் கார்த்திக் ராஜு, இன்னும் சில புதிய இயக்குநர்கள் ஃபேஸ்புக்கில் என் குறும்படத்தை ஷேர் பண்ணி நல்லாருக்குனு பாராட்டினாங்க. மகாத்மா காந்தியின் பெர்சனல் செக்ரட்டரியோட பொண்ணு மாலினி கல்யாணம் என்னை வீட்டுக்கு அழைத்துப் பாராட்டினாங்க.

'டஸ்ட் பின்' படத்தை தியேட்டர்ஸ்ல போடலாமேனு நிறைய பேர் சஜ்ஜெஸ்ட் பண்ணாங்க. புகையிலை ஒழிப்புக்கான விளம்பரம் ஒளிபரப்பாகிற மாதிரி இந்தக் குறும்படத்தை இடைவேளையில் போடலாம். அதுக்கு தியேட்டர் உரிமையாளர்கள் முன்வரணும்.

வெள்ளித்திரைக்கு வர்ற ஐடியா இருக்கா?

வெள்ளித்திரைக்கு வர்ற ஐடியா இருக்கா?

(சதீஷ் இயக்கிய அனைத்து குறும்படங்களையும் பார்க்க...)

2020-க்குள் டைரக்டர் ஆகுற ஐடியா இருக்கு. ஆனா, இப்போ மாசம் பொறந்தா இ.எம்.ஐ கட்டிக்கிட்டு இருக்கேன். ஃபேமிலி கமிட்மென்ட்ஸ்னால உடனே சினிமாவுக்குப் போக முடியல. கண்டிப்பா சில்வர் ஸ்க்ரீன்ல வரணும்ங்கிற எண்ணம் இருக்கு. சினிமாவிலேயும் சமூகக் கருத்துகொண்ட படம்தான் எடுப்பேன். 'ஜோக்கர்' படம் மாதிரி சமூக நோக்கம் கொண்ட ஒரு படத்தோட வருவேன்னு எதிர்பார்க்கலாம்.

English summary
The Tamil short film 'Mr.Cobbler' has created a world record. Millions of people watching, liking, and sharing on Facebook. Sathish Guruvappan who is directing the film is yet to come silver screen.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil