For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  க/பெ ரணசிங்கம் படத்தில் நாங்கள் பேசியது குறைவான அரசியல்தான்.. வசனகர்த்தா சண்முகம் முத்துசாமி தகவல்

  By
  |

  சென்னை: டிஜிட்டலில் ரிலீஸ் ஆன தமிழ்ப் படங்களில் முதல் வெற்றியை பெற்றிருக்கிறது, க/பெ ரணசிங்கம்.

  படத்தின் இயக்குனர் விருமாண்டி, அரியநாச்சியாக வாழ்ந்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் உள்பட மொத்த டீமுக்கும் குவிகிறது வாழ்த்துகள்.

  இந்தப் படத்தின் திரைக்கதை, வசனத்தை எழுதியிருக்கிறார், சண்முகம் முத்துசாமி.

  வாவ்.. இந்த வாரம் இவருதான் கேப்டனா.. அப்போ பிக்பாஸ் வீடு ரணகளம்தான்.. மிரட்டல் புரமோ!

   ஆக்ரோஷ அரசியல்

  ஆக்ரோஷ அரசியல்

  படத்தின் கதையை பல இடங்களில் உயர்த்திப் பிடிக்கிறது, அவருடைய உயிர்த்துடிப்பான வசனங்கள்! சில இடங்களில் நின்று கவனிக்க வைக்கின்றன வசனங்கள். அரியநாச்சி கேட்கும் பல கேள்விகள் யோசிக்க வைக்கின்றன. படத்தில் ஆக்ரோஷ அரசியல் வசனங்களை எழுதி இருக்கும் சண்முகம் முத்துசாமி, 'அடங்காதே' படத்தின் இயக்குனர்!

   நீங்க கடலூர் மாவட்டம். ரணசிங்கம் கதை ராமநாதபுரத்துல நடக்குது.. அந்த ஸ்லாங்கை எப்படி புடிச்சீங்க?

  நீங்க கடலூர் மாவட்டம். ரணசிங்கம் கதை ராமநாதபுரத்துல நடக்குது.. அந்த ஸ்லாங்கை எப்படி புடிச்சீங்க?

  இந்தப் படத்துக்கு வசனம் எழுதறதுக்காக, மூணு மாசம் ராமநாதபுரத்துல சுத்தி இருக்கேன். அங்குள்ள வாழ்க்கை சூழல், வெயில், மக்களோட பழக்கவழக்கங்கள்ல இருந்து எல்லாத்தையும் கவனிச்சு மனசுல பதிய வச்சுட்டு, வசனங்களை எழுதினேன். முதல்ல, பொதுவான நடையிலதான் எழுதினேன். பிறகு அதை ராமநாதபுரத்து ஸ்லாங்குக்கு மாத்தினோம்.

   இப்படியொரு வரவேற்பை எதிர்பார்த்தீங்களா?

  இப்படியொரு வரவேற்பை எதிர்பார்த்தீங்களா?

  கண்டிப்பா. இந்த கதையை இயக்குனர் சொன்னதுமே இதுவரை சொல்லப்படாத கதை, இதுக்கு நிச்சயம் வரவேற்பு இருக்கும்னு நினைச்சோம். அதுக்காக நிறைய மெனக்கெட முடிவு பண்ணினோம். ஒவ்வொரு விஷயத்தையும் நூறு சதவிகிதம் பர்பெக்டா பண்ண நினைச்சு களத்துல இறங்கினோம். நினைச்ச மாதிரியே நடந்திருக்கு.

   ராமநாதபுரத்தை சேர்ந்த, வேல ராமமூர்த்தி என்ன சொன்னார்?

  ராமநாதபுரத்தை சேர்ந்த, வேல ராமமூர்த்தி என்ன சொன்னார்?

  எனக்கு பயமாதான் இருந்தது. நான்தான் ஸ்கிரீன்பிளே, வசனம் அப்படிங்கறதால நானும் ஷூட்டிங் ஸ்பாட்ல இருந்தேன். வேல ராமமூர்த்தி எழுத்தாளரும் கூட. அதனால இது அவங்க ஏரியா கதை. அவர் எப்படி எடுத்துக்கிடுவாரோன்னு பதட்டமா இருந்தது. ஸ்கிரிப்டை படிச்சுட்டு, அருமையா பண்ணியிருக்கீங்கன்னு சொன்னார். மகிழ்ச்சியா இருந்தது. நான் அடங்காதே படம் டைரக்ட் பண்ணியிருக்கேன்னு சொன்னதும் இன்னும் பாராட்டினார்.

   இந்த படத்தோட இயக்குனருக்கு, அதே கம்பெனியில மீண்டும் வாய்ப்பு கிடைச்சிருக்கு..

  இந்த படத்தோட இயக்குனருக்கு, அதே கம்பெனியில மீண்டும் வாய்ப்பு கிடைச்சிருக்கு..

  அது பெரிய விஷயம்தான். அடுத்தும் சிறந்த கதையை பண்ணுவார்னு நம்பறேன். எனக்கு மூணு படங்களுக்கு வசனம் எழுதற வாய்ப்பு வந்துச்சு. செல்லமா மறுத்துட்டேன். ஏன்னா, எனக்கு படங்கள் இயக்கணும். அதுதான் நோக்கம். நானே பத்து கதை ரெடி பண்ணி வச்சிருக்கேன். அதுகே இன்னும் டயலாக்கை முடிக்கலை.

   'அடங்காதே'வுக்கு என்னதான் பிரச்னை?

  'அடங்காதே'வுக்கு என்னதான் பிரச்னை?

  எல்லாம் சுமூகமா முடிஞ்சிடுச்சு. சீக்கிரமே நல்ல தகவல் வரும். இந்தியாவுல நடந்த இரண்டு உண்மை சம்பவங்களை அதுல பேசியிருக்கேன். படத்தோட ஆரம்பமும் கிளைமாஸும் மிரட்டும். அதுவும் கண்டிப்பா பரபரப்பா பேசப்படற இருக்கும். க/பெ ரணசிங்கம் படத்துல கொஞ்சமா அரசியல் இருக்கும். அதுல அரசியல்தான் படமே.

   அதுல ஜி.வி.பிரகாஷ் எப்படி?

  அதுல ஜி.வி.பிரகாஷ் எப்படி?

  அந்தக் கதையில ஒரு சின்ன பையன் கேரக்டர்தான் முக்கியம். யாரோ பண்ற அரசியல், எங்கோ இருக்கிற ஒரு சாதாரண ஆள் சிக்கிக்கிட்டு என்ன பண்றார், அப்படிங்கறதுதான் கதையே. அந்தப் படத்துல சரத்குமார், சுரபி, மந்திரா பேடி, தம்பி ராமையான்னு பெரிய நட்சத்திர பட்டாளமே இருக்கு.

  English summary
  we have spoken less Politics in Ka/pe Ranasingam: dialogue shanmugam Muthusamy
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X