ஜாய்யுடன் ரகசிய வாழ்க்கை வாழ்ந்த ரங்கராஜ்.. பயத்தை தரும் ‘ஸ்ருதி பிரியாவின் மௌனம்.. யார் மேல தப்பு!

சென்னை: மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் முடித்துக் கொண்ட போட்டோவை ஜாய் கிரிஸில்டா வெளியிட்டு இருந்தார். மேலும் தான் ஆறு மாத கர்ப்பிணியாக இருப்பதாகவும் கூறி இருந்தார். முதல் மனைவியை மாதம்பட்டி ரங்கராஜ் விவாகரத்து செய்யாமல் உள்ள நிலையில் ஆறு மாத கர்ப்பத்துக்கு பிறகு ஜாய் கிரிசில்டாவை திருமணம் முடித்தாரா என்ற கேள்விகள் எழுந்தன.இதைத்தொடர்ந்து, மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றி விட்டதாக ஜாய் கிரிஸில்டா சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தார்.

இவர்களின் விவகாரம் இணையத்தில் பேசு பொருளாகி இருக்கும் நிலையில், ஜாய் கிரிசில்டா பீச்சில் மாதம்பட்டி ரங்கராஜுக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். அதில், ரங்கராஜ், பல ஜென்மம் தாண்டி வந்த உறவே என, முட்டி போட்டு ஜாய்க்கு பூங்கொத்து கொடுத்து தன் காதலை ரங்கராஜ் வெளிப்படுத்தியிருக்கிறார். இதுகுறித்து பேசிய Sivasankari, மாதம்பட்டி ரங்கராஜின் முதல் மனைவி ஸ்ருதி ப்ரியா யாரை காப்பாற்ற மௌமான இருக்கிறார் என கேள்வி எழுப்பி உள்ளார்.

Madhampatty Rangaraj Joy Crizildaa
Photo Credit:

ஜாய் செய்தது தவறா: மாதம்பட்டி ரங்கராஜ் விவகாரத்தில் இந்த சமூகம் முழுவதும் ஜாய் கிரிஸில்டா மேல தான் தவறு இருக்கிறது. முதல் மனைவி இருப்பது தெரிந்தும், அவர் எப்படி அவர் இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ளலாம், முதல் மனைவிக்கு துரோகம் செய்யலாமா என பலரும் அவரை திட்டி தீர்த்து வருகிறார்கள். ஜாய் கிரிஸில்டா தனது முதல் கணவரை விட்டு பிரிந்து முறைப்படி அவரை விவாகரத்து செய்துவிட்டு தான், ரங்கராஜை திருமணம் செய்து இருக்கிறார். ஆனால், மாதம்பட்டி ரங்கராஜ் முதல் மனைவிடம் இருந்து விவாகரத்து பெற்றுவிட்டார் என்று உறுதிப்படுத்திய பிறகு தான் திருமணம் செய்து இருக்க வேண்டும். அந்த பெரிய தவறை ஜாய் செய்துவிட்டார்.

எப்படி இரண்டாவது திருமணம் செய்யலாம்: ஆனால், மாதம்பட்டி ரங்கராஜ், மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருக்கும்போது, முதல் மனைவி இடம் இருந்து விவகாரத்து வாங்காமல் எப்படி மாதம்பட்டி ரங்கராஜ் ஜாய் கழுத்தில் தாலியை கட்டினார். முறைப்படி விவாகரத்து பெற்று மாதம்பட்டி ரங்கராஜை திருமணம் செய்து கொண்ட ஜாய் கிரிஸில்டாவை இந்த சமுதாயம் பல கேள்விகள் கேட்கிறது. ஆனால், முதல் மனைவி இருக்கும் போதே, இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் ரங்கராஜை இந்த சமுதாயம் ஏன் எந்த கேள்வியும் கேட்கவில்லை. முறைப்படி உபகாரத்துக்கு பெற்று மாதம் பட்டி ரங்கராஜை திருமணம் செய்து கொண்ட ஜாய்யை இந்த சமுதாயம் பல கேள்விகள் கேட்கிறது. ஆனால் முதல் மனைவி இருக்கும் போதே இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் ரங்கராஜை இந்த சமுதாயம் எதுவும் கேட்பதில்லை.

மௌமான இருப்பது ஏன்: பெண் தவறு செய்தால் அவளை கேவலமாக திட்டுவதும், ஆண் தவறு செய்தால் அமைதியாக இருப்பதும் ஏன்?கேள்வி கேட்க அனைத்து உரிமையும் உள்ள, ரங்கராஜ் அவர்களின் முதல் மனைவி ஸ்ருதி கூட, இந்த விஷயத்தில் மௌனமாக இருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது. யாரை காப்பாற்றுவதற்காக ஸ்ருதி பிரியா மௌனமாக இருக்கிறார் என்று தெரியவில்லை. அதேபோல மாதம்பட்டி ரங்கராஜன் இந்த விஷயம் குறித்து பதில் ஏதும் அளிக்காமல் மௌனமாக இருக்கிறார். ஆனால், மாதம்பட்டி ரங்கராஜின் குழந்தையை வயிற்றில் சுமந்து கொண்டு இருக்கும் ஜாய், அந்த குழந்தைக்கு ஒரு ஆங்கிகாரம் வேண்டும் என்பதற்காக இன்று போராடிக் கொண்டு இருக்கிறாள் என்று Sivasankari தனது யூடியூப் சேனலில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X