காணாமல் போன சாமி சிலை.. குழிக்குள் இறங்கும் சாமுண்டீஸ்வரி.. கார்த்திகை தீபம்!
சென்னை: கும்பாபிஷேகத்திற்காக எல்லோரும் கோவிலுக்கு வர, கோவில் சிலை காணவில்லை, என கோவில் பூசாரி கதறிய படி வந்து சொல்கிறார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடையும் பாட்டி, அய்யோ கடவுளே, ஆத்தா, இது என்ன சோதனை, ஏன் என் குடும்பத்தை இப்படி சோதிக்கிற என்று வருத்தப்படுகிறாள். அப்பேது, அங்கு இருந்தவர்கள் என்ன பரமேஸ்வரி, கும்பாபிஷேகம் நடக்கும் நேரத்தில் கோவில் சிலை காணவில்லை என்றால், இந்த ஊருக்கு ஏதோ பெரிய பாதிப்பு வருமோ என்று பயமாக இருக்கிறது என்று சொல்கிறார். அப்போது,சிவனாண்டி மற்றும் முத்துவேல் ஏற்பாடு செய்த ஆட்கள் சாமுண்டீஸ்வரி தான் கோவில் சிலையை தூக்கி இருக்க வேண்டும், அவருக்கு தான் இந்த கும்பாபிஷேகம் நடப்பதில் விருப்பம் இல்லை என்று பழி போட்டு பேசுகின்றனர்.
இன்றைய எபிசோடில், சிவனாண்டி முத்துப்பாண்டி ஆட்கள் சிலை காணாமல் போக சாமுண்டீஸ்வரி தான் காரணமாக இருக்கும் என்று சொல்ல ஊர்காரர்களும் அதை நம்ப தொடங்கி விடுகின்றனர். சாமுண்டீஸ்வரி வீட்டிற்கு அனைவரும் கிளம்பி வருகின்றனர். சாமுண்டீஸ்வரி நான் தான் திருவிழாவிற்கு வரலனு சொல்லிட்டேன்ல, அப்புறம் எதுக்கு திரும்ப திரும்ப வரீங்க என்று கோவப்பட ஊர்க்காரர்கள் தயக்கத்துடன் நாங்க உங்களை கூப்பிட வரல, கும்பாபிஷேகம் செய்யும் நேரத்தில் கோவிலிலி சிலை காணாமல் போயிடுச்சு, அதனால் உங்க வீட்டை சோதனை செய்யணும் என்று சொல்ல சாமுண்டீஸ்வரி ஷாக் ஆகிறாள்.

கார்த்திகை தீபம்: மேலும், நீங்க என் புருஷனை அனுப்பனும்னு சொன்னீங்க, அனுப்பிட்டேன். சிலை காணாமல் போனதுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்ல, வீட்டை சோதனை செய்யணும்னா பண்ணிக்கோங்க என்று சொல்கிறாள். இதையடுத்து வீட்டில் சோதனை நடக்கிறது. அப்போது, ஒரு பையில் இருந்து பில்லி சூனியம் சார்ந்த பொருட்கள் கிடைக்க இதை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். கோவில் பூஜை சரியாக நடக்க கூடாது என்பதற்காகவே சாமுண்டீஸ்வரி இதையெல்லாம் செய்திருப்பதாக பழி போட்டு பஞ்சாயத்திற்கு சாமுண்டீஸ்வரியை அழைத்து வருகின்றனர்.
பஞ்சாயத்தில் சாமுண்டீஸ்வரி: பஞ்சாயத்தில் சாமுண்டீஸ்வரி எனக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்லை, நான் கடவுள் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவள்,கும்பிஷேகம் நடக்கும் இப்போது சாமி சிலையை திருட மாட்டேன் வேண்டுமென்றே என் மீது பழி போடுகிறார்கள், யார் சிலையை திருடியது என்பதை இந்த பஞ்சாயத்து தான் கண்டுபிடித்து உண்மையை வெளியில் கொண்டு வர வேண்டும் என சொல்கிறார்.
குழிக்குள் இறங்கும் சாமுண்டீஸ்வரி: அப்போது பஞ்சாயத்தில் இருந்த ஒருவர், 35 வருடத்திற்கு முன்பு இதே போல தான் கோவில் சிலை காணாமல் போனது. அனைவரும் ஒருவர் மீது சந்தேகப்பட்டோம். ஆனால், அவர் நான் சிலையை திருடவில்லை என கூறி வந்தார். இதனால், கோவிலில் முன் ஒரு குழி தோண்டப்பட்டு அந்த குழிக்குள் நாங்கள் அவரை இறக்கினோம். அவர் நிரபராதியாக இருந்தால் அவருக்கு எதுவும் ஆகாது, சாமி சிலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் அவரை குழியில் இறக்கினாங்க. கொஞ்ச நேரத்தில் சாமி சிலையும் கிடைத்து விட்டது. பின் குழியை திறந்து பார்த்தால் குழிக்குள் அவர் உயிரோடு இருந்தார். அதனால் சாமி சிலையை அவர் திருடவில்லை என்பது நிரூபிக்கப்பட்டது. அதேபோல சாமுண்டீஸ்வரியின் குழிக்குள் இறங்கி நிரூபிக்க வேண்டும் என சொல்கிறார்கள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











