ரேவதியின் சாவு செய்தி என் காதில் விழணும்.. காளியம்மாவின் ஆட்டம் ஆரம்பம்.. கார்த்திகை தீபம்!

சென்னை: கோவிலில், கடவுளே ஏன் என் குடுத்தை இப்படி சோதிக்கிற, எப்படியாவது என் பேத்தி ரேவதியை காப்பாற்றிடு என்று வேண்டுகிறாள். அப்போது, கோவில் கட்ட நிலம் தேவைப்படுத்தாக சிலர் பேசிக்கொண்டு இருப்பது பரமேஸ்வரி பாட்டியின் காதில் விழ, அதற்கு தேவையான நிலத்தை தருவதாக வாக்கு கொடுக்கிறார். அடுத்து அங்கு வந்த முருகை பக்தை ஒருவர், என்னமா ஆச்சு என்று விசாசித்துவிட்டு, விபூதி கொடுக்கிறார். அந்த விபூதியை பரமேஸ்வரி பாட்டி எடுத்து வந்து ICU-ல் கந்தசஷ்டி கவசம் பாடி ரேவதிக்கு பூசி விடுகிறாள்.

இதையடுத்து, இன்றைய கார்த்திகை தீபம் சீரியலில், ரேவதிக்கு ஆபரேஷன் செய்ய வேண்டும், ஆனால், அந்த ஆப்ரேஷன் ரொம்ப சிக்கலான ஆப்ரேஷன். இதில்,ரேவதி உயிர் பிழைப்பது ரொம்ப கஷ்டம் என்கிறார். இதைக் கேட்டு ஒட்டுமொத்த குடும்பமும் கதறி எழுகிறது. இதைத்தொடர்ந்து, ஒரு மருத்துவர், இந்த ஆப்ரேஷன் செய்வதில், வசந்த் டாக்டர் தான் சிறந்தவர். ஆனால், இப்போது இவர் இல்லை, அவர் இன்னைக்கு அமெரிக்கா போக போகிறார் என்று சொல்கிறார். உடனே கார்த்திக், அவர் ஆப்ரேஷன் செய்தால், ரேவதி பிழைப்பால் என்றால், நான் அந்த மருத்துவரை அழைத்து வருகிறேன் என்று வசந்த் டாக்டரை பார்க்க செல்கிறார்.

zee tamil Karthigai Deepam
Photo Credit:

கார்த்திகை தீபம்: அவரை கார்த்திக் சந்தித்து பேச, மருத்துவர் வசந்த், அமெரிக்காவில் எனக்கு ஒரு செமினார் இருக்கிறது. அதில், நான் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும். அதனால் தான் இந்த ஆபரேஷன் செய்வதற்கு நான் வரமாட்டேன் என்று சொன்னேன் என்கிறார். இதைக் கேட்ட கார்த்திக், என்னுடைய மனைவி ரேவதி, உயிருக்கு போராடிக் கொண்டு இருக்கிறாள், அவள் இல்லை என்றால் நான் இல்லை. ஒட்டுமொத்த குடும்பமும் அவளுக்காக அழுதுக்கிட்டு இருக்காங்க, நீங்கள் ஆபரேஷன் செய்தால் மட்டும் தான் அவள் உயிர் பிழைப்பாள். இப்படிப்பட்ட நேரத்தில் நீங்கள் எனக்கு உதவி செய்ய வேண்டும். இதற்கு எவ்வளவு பணம் செலவானாலும் நான் அதற்கான பணத்தை உங்களுக்கு கொடுத்து விடுகிறேன் என சொல்கிறாள். உடனே மருத்துவர் வசந்த் நீங்கள், என்னிடம் கெஞ்சியதால் நான் இதற்கு ஒத்துக் கொள்கிறேன். பணத்திற்காக இல்லை, நீங்க உங்க மனைவி மீது வைத்திருக்கும் பாசத்திற்காக இந்த அறுவை சிகிச்சையை நான் செய்கிறேன் என்கிறார்.

ரேவதியின் சாவு செய்தி என் காதில் விழணும்: இதையடுத்து, ஆப்ரேஷனுக்காக வேலைகள் நடந்து கொண்டு இருக்க, ரேவதிக்கு ரத்தம் தேவைப்படுவதாகவும், ரேவதியின் ரத்தம் அரிய வகை ரத்தம், இந்த ரத்தத்திற்காக பல ரத்த வங்கியில் பேசிவிட்டோம். எங்கள் மருத்துவமனைக்கு மாரி என்பவர் ரத்தம் கொடுப்பார் அவரிடம் பேசி இருக்கிறோம் என்கிறார் நர்ஸ். உடனே கார்த்திக், மாரியின் நம்பரை வாங்கி, மாரியை தொடர்பு கொண்டு பேசுகின்றனர். பிறகு கார்த்திக், நானே உங்களை நேரடியாக வந்து அழைத்துக் கொள்கிறேன் என்று சொல்கிறான். மறுபக்கம், சிவனாண்டி, காளியம்மா வீட்டுக்கு வந்து ரேவதியை மாயா சுட்ட விஷயத்தை சொல்கிறான். அப்போது காளியம்மா, மாயா இந்த வீட்டில் தான் இருக்கிறாள் என்ற உண்மையை உடைக்கிறாள். ரேவதி இறந்த செய்தி கேட்டால் தான் தனக்கு சந்தோஷம் என காளியம்மா சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X