TamilbredcrumbMoviesbredcrumbCharlie Chaplin 2
    சார்லி சாப்ளின் 2

    சார்லி சாப்ளின் 2

    U | 2 hrs 7 mins | Comedy
    Release Date : 25 Jan 2019
    2/5
    Critics Rating
    2/5
    Audience Review
    சார்லி சாப்ளின் 2 இயக்குனர் சக்தி சிதம்பரம் இயக்கத்தில் பிரபுதேவா, நீக்கி கல்ராணி, பிரபு மற்றும் பலர் நடித்துள்ள நகைச்சுவை திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் டி சிவா தயாரிக்க இசையமைப்பாளர் அம்ரேஷ் கணேஷ் இசையமைத்துள்ளார். 

    கதை :

    திரு (பிரபு தேவா) ஒரு திருமண உறவை உருவாக்கும் மேட்ரிமோனி நிறுவனத்தை நடத்துகிறார். அதன் மூலம் 99 ஜோடிகளுக்கு தன் நண்பர்களான அரவிந்த் ஆகாஷ் மற்றும் சந்தனா ராஜுடன் இணைந்து திருமணம் செய்வித்துள்ளார்....
    • சக்தி சிதம்பரம்
      Director
    • டி சிவா
      Producer
    • அம்ரேஷ் கணேஷ்
      Music Director
    • பில்மிபீட்
      2/5
      திரைக்கதைப்படி, ஆன்லைன் திருமண தரகரான பிரபுதேவாவுக்கு, சமூக ஆர்வலர் (?) நிக்கி கல்ராணி மீது ஒரு தலைகாதல். ஆனால் இன்னும் 15 நாட்களில் இறக்கப் போகும் இதய நோயாளியான தனது தோழியை (கோலிசோடா சீதா) தான் பிரபுதேவா காதலிக்கிறார் என தவறாக புரிந்துகொள்கிறார்கள் நிக்கியும், அவரது தந்தை பிரபுவும். ஒருகட்டத்தில் பிரபுதேவா தன்னை தான் காதலிக்கிறார் என நிக்கிக்கு தெரியவர, அவரும் காதலில் விழுகிறார். இதற்கு பிரபுவும், பிரபுதேவாவின் லூசுக்குடும்பமும் (அவங்களே அப்படி தான் இண்ட்ரோ தராங்க) ஒத்துக்கொள்கிறது.

      வாட்ஸ்அப் மெசேஜ், புளூ டிக் போன்ற சின்ன விஷயங்களை வைத்துக்கொண்டு உருவாகியுள்ள பெரிய பட்ஜெட் படம் இது. ஆனால் அதற்கு தகுந்த சரக்கு படத்தில் இல்லை. நல்ல காமெடி நடிகர்ளை நடிக்க வைத்திருந்தால், ஒர்க்கவுட் ஆகியிருக்கும்...