Blue Sattai Maran Arrest: இயக்குனர் புகாரால் ப்ளூ சட்டை கைதா?: உண்மை என்ன?
Recommended Video

சென்னை: சார்லி சாப்ளின் 2 பட இயக்குனர் புகார் அளித்ததை அடுத்து ப்ளூ சட்டை மாறன் கைதானதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இது குறித்த உண்மை தெரிய வந்துள்ளது.
சார்லி சாப்ளின் 2 பட இயக்குனர் ஷக்தி சிதம்பரம் தமிழ் டாக்கீஸ் விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் படத்தை விமர்சிக்க பெரும் தொகை கேட்டதுடன் கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிவித்தார்.

இதையடுத்து ப்ளூ சட்டை மாறன் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி அவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அவர் புகாரை அடுத்து ப்ளூ சட்டை மாறன் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் அந்த தகவலில் உண்மை இல்லை என்பது தெரிய வந்துள்ளது. ஷக்தி சிதம்பரத்தின் புகார் தொடர்பாக யாரும் ப்ளூ சட்டை மாறனை தொடர்பு கொள்ளவும் இல்லையாம், விசாரிக்கவும் இல்லையாம்.
ஷக்தி சிதம்பரத்தை அடுத்து மேலும் சிலர் ப்ளூ சட்டை மாறன் மீது போலீசில் புகார் அளிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











