
தில்லுக்கு துட்டு 2 இயக்குனர் ராம்பாலா இயக்கத்தில் சந்தானம், ஷ்ரிதா சிவதாஸ், ராஜேந்திரன், ஊர்வசி நடிக்கும் நகைச்சுவை திகில் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளரும் இப்படத்தின் நடிகருமான நடிகர் சந்தானம் தயாரிக்க, இசையமைப்பாளர் ஷபீர் இசையமைத்துள்ளார்.
கதை
ஷ்ரிதா சிவதாஸ் (மாயா) என்ற டாக்டரை பார்த்து யார் காதலை சொன்னாலும் உடனே பேய் வந்து அவர்களை அடித்து விடுகின்றது. அப்படித்தான் மாயாவுடன் பணிபுரியும் ஒரு டாக்டர் அவரிடம் காதலை சொல்லி பேயிடம் அடி வாங்குகிறார். சந்தானம்...
-
ஆஸ்கர் ரேஸில் ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர்… 6 பிரிவுகளில் வாய்ப்பு? நாளை விருதுகள் அறிவிப்பு
-
அதிர்ச்சி.. இயக்குநரும் குணசித்திர நடிகருமான ராமதாஸ் மாரடைப்பால் காலமானார்.. சோகத்தில் திரையுலகம்
-
பரிதாபங்கள் கோபி -சுதாகர் இணையும் புதிய படம்.. பூஜையுடன் இன்று துவக்கம்!
-
அதுக்குதான கொடுக்குறாங்க துட்டு... பாக்ஸ் ஆபிஸ் கவலை ரசிகர்களுக்கு எதுக்கு..?: விளாசிய ஆர்ஜே பாலாஜி
-
கோல்ட் படத்தை விமர்சித்த ரசிகர்... விரக்தியின் உச்சத்தில் வெகுண்டெழுந்த அல்போன்ஸ் புத்திரன்
-
பிக் பாஸ் சீசன் 6: பையா தள்ளி நில்லு... கமலின் வேற லெவல் காஸ்ட்யூம்... தெறிக்கும் மீம்ஸ்கள்
-
பில்மிபீட்லாஜிக், நம்பகத்தன்மை என ஒரு வழக்கமான சினிமாவுக்கு தேவைப்படும் அத்தனை அம்சங்களையும் மூட்டை கட்டி வைத்துவிட்டு, இரண்டு மணி நேரம் பார்வையாளர்களை சிரிக்க வைக்க வேண்டும் என்ற ஒரு நோக்கத்தில் மட்டுமே எடுக்கப்பட்டுள்ள படம் இது.
ஏற்கனவே தமிழ் சினிமாவில் வெளிவந்த பேய் - காமெடி படக் கதைகளில் ஒன்று தான் இது. ஆனால் தங்களது ஸ்டைலில் கலாய் கலாய் என கலாத்து பேயையே அலற வைத்திருக்கிறார்கள் இயக்குநர் ராம்பாலாவும், சந்தானமும். போதாக்குறைக்கு அவர்களுடன் மொட்டை ராஜேந்திரனும், ஊர்வசியும் சேர்ந்துகொள்ள, கேட்கவா வேண்டும் தியேட்டரே குலுங்கி குலுங்கி சிரிக்கிறது.
எப்படி இருந்தாலும், தில்லுக்கு துட்டு காமெடி வேட்டு என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. கவலை மறந்து சிரிக்க, தியேட்டருக்கு போய்ப் பார்க்கலாம். நிச்சயம் இந்தப் பேய் உங்களைக் கனவிலும் வந்து சிரிக்க வைக்கும்..
விமர்சனங்களை தெரிவியுங்கள்